பின்மாதவிடாய்க் குருதிப்போக்கு (குருதிச்சொட்டு)

121 0

பின்மாதவிடாய்க் குருதிப்போக்கு (குருதிச்சொட்டு)

2020-10-20 11:49:25

அறிமுகம்

மாதவிலக்கு நின்ற பின் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு இரத்தப்போக்கு தொடருவது பின்மாதவிடாய்க் குருதிப்போக்கு ஆகும். ஒரு பெண் மாதவிடாய் நிற்கும் கட்டத்தை அடைந்த பின் (பொதுவாக 45-49 வயது) 12 மாதங்களுக்கு மாதவிலக்கு வராமல் இருந்தால் அவருக்கு மாதவிலக்கு நின்று போய் விட்டது என்று கருதலாம்.

மாதவிடாய் நின்ற பின் பொதுவாக இரத்தப் போக்கு இருப்பதில்லை. அவ்வாறு இருந்தால் மருத்துவரை அணுகி, இரத்தக் கறை பட்டாலும், வேறு கடுமையான மருத்துவ பிரச்சினைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நோயறிகுறிகள்

பின்மாதவிடாய்க் குருதிப்போக்கிற்குப் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். அவற்றில் அடங்குவன:

 • பெண்மை நீர்ம அளவு குறைவு படுவதால் யோனி அல்லது கருப்பையின் புறணி அழற்சியுறுதல் அல்லது மெலிதல்.
 • சவ்வுக்கழலை: கருப்பை வாய் அல்லது கருப்பையில் விழுது போன்ற சவ்வு வளர்ச்சி (பொதுவாகப் புற்றாக இருக்காது).
 • இயக்குநீர் மாற்று சிகிச்சையால் கருப்பைப் புறணி கட்டியாதல்
 • கருப்பை அல்லது கருப்பை வாயின் அசாதாரண நிலை.
 • யோனியின் புறணி தடித்தல்: மிகை பெண்மை இயக்குநீரும் மிகக் குறைந்த அளவு சினையியக்கு நீரும் இருப்பதன் விளைவாக யோனியின் புறணி தடித்தல்; இதனால் இரத்தப் போக்கும் இருக்கலாம்.
 • யோனிப் புற்று: பின்மாதவிடாய் இரத்தப் போக்கு யோனிப் புற்று நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
 • பிற காரணங்களில் அடங்குவன: கருப்பை அல்லது கருப்பை வாய்த் தொற்று, இரத்த மெலிவூட்டிகள் போன்ற சில மருந்துகள், பிற வகை புற்று நோய் ஆகியவற்றாலும் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

நோய்கண்டறிதல்

சரியான காரணத்தைக் கண்டறிய: மருத்துவர், மருத்துவ வரலாற்றைக் கேட்பதோடு கருப்பைவாய்ச் சோதனையும் (பேப் சோதனை) செய்வார். மேலும் பரிந்துரைக்கப்படும் சோதனைகள் வருமாறு:

 • கருப்பைக் கேளா ஒலி சோதனை
 • கருப்பைப் புறணி திசுச்சோதனை
 • கருப்பை அகநோக்கல்

நோய் மேலாண்மை

குருதிப்போக்குக்கான காரணத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 • சவ்வுக்கழலையால் இரத்தப்போக்கு இருந்தால் அதை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படும்.
 • கருப்பை அகப்படல மெலிவுக்கு சினையியக்குநீர் சிகிச்சை மருந்துகள் அல்லது கருப்பை அகப்படல தடிப்பு அறுவை சிகிச்சையால் அகற்றல்
 • கருப்பை அகப்படல மிகைத் திசு வளர்ச்சி இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகி, தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
 • இயக்குநீர் மாற்று சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தால் மருத்துவர் மருந்து உட்கொள்ளும் அளவை நிலைமைக்குத் தகுந்தபடி குறைக்கலாம்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்


பின்மாதவிடாய்க் குருதிப்போக்கு (குருதிச்சொட்டு)


Source link

Related Post

- 1

பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ!

Posted by - மார்ச் 20, 2021 0
பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ! பொதுவாக அந்தரங்க உறுப்பில் எரிச்சல், அரிப்பு, நமைச்சல், கட்டி, புண், வீக்கம் போன்ற…
- 3

இடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டுமே போதுமே

Posted by - அக்டோபர் 21, 2020 0
இடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டுமே போதுமே இன்று பல பெண்கள் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க பெரிதும் கஷ்டப்பட்டு…
ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா?

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சிகளை செய்தாலே போதும்

Posted by - நவம்பர் 17, 2020 0
ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சிகளை செய்தாலே போதும்   உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் வீட்டில் இருந்தே கூட எளிய பயிற்சிகளை…
- 8

மாதவிடாய் வலியைக் குறைக்க வேண்டுமா? அப்போ தொப்புள் பகுதியில் இதை தடவுங்க… வலி பறந்து போயிடும்…

Posted by - மார்ச் 12, 2021 0
மாதவிடாய் வலியைக் குறைக்க வேண்டுமா? அப்போ தொப்புள் பகுதியில் இதை தடவுங்க… வலி பறந்து போயிடும்… மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பல்வேறு உபாதைகள் பெண்களை உடல் ரீதியாகவும்…

மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு

Posted by - அக்டோபர் 20, 2020 0
மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு 2020-10-20 11:51:31 மாதவிடாய் Polycystic ovarian syndrome (PCOD) என்று சொல்லக்கூடிய நோயில் ஒழுங்கற்ற மாதவிடாய் காணப்படும். சில நேரங்களில் வராது.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன