புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்-81. யார்கொல் அளியர்?

1161 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

81. யார்கொல் அளியர்?

பாடியவர்: சாத்தந்தையார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம்.
பாடலின் பின்னணி: கோப்பெரு நற்கிள்ளி ஆமூரில் இருக்கும் பொழுது போர் தொடங்கியது. அப்போரில் பகைவரை எதிர்த்துப் போரிடும் படைக்குக் கோப்பெரு நற்கிள்ளி தலைமை தாங்கினான். இவனது போர்த்திறமையைப் புகழ்ந்து சாத்தந்தையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

புறம் 81. யார்கொல் அளியர்?

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே

கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
 கவிகை மள்ளன் கைப்பட் டோரே?
அருஞ்சொற்பொருள்:
1.ஆர்ப்பு = பேரொலி. 2.கார் = கார்காலம்; பெயல் = மழை; உரும் = இடி. 3. அளி = இரக்கம்; ஆர் = ஆத்தி. 4. செறிதல் = நெருங்குதல்; கண்ணி = மாலை. 5. கவிகை = கொடுத்துக் கவிந்த கை; கவிதல் = வளைதல்;மள்ளன் = வீரன்
உரை: கோப்பெரு நற்கிள்ளியின் படையினது ஆரவாரம் ஏழு கடலும் கூடி எழுப்பும் ஒலியைவிடப் பெரிது. அவனுடைய யானை கார்காலத்து மழையோடு கூடிய இடியினும் அதிகமாக முழங்குகிறது. கோப்பெரு நற்கிள்ளி நாரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட ஆத்தி மாலையையும் இரவலர்க்கு ஈகை செய்து கவிந்த கையும் உடைய வீரன். அவன் கையில் அகப்பட்டோரில் யார்தான் இரங்கத் தக்கவர்? அவன் யாருக்கும் இரக்கம் காட்டப்போவது இல்லை. அனைவரும் கொல்லப்படுவது உறுதி.

 

புறம் 81. யார்கொல் அளியர்?

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

Buy Book From amazon:

புறநானூறு: புதிய வரிசை வகை by பேராசிரியர் சாலமன் பாப்பையா

புறநானூறு மூலமும் உரையும் by உ.வே.சாமிநாதையர்

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 76. அதுதான் புதுமை!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 76. அதுதான் புதுமை! புறம் 76. அதுதான் புதுமை! புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் Buy Book From amazon:…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 40. ஒரு பிடியும் எழு களிரும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 40. ஒரு பிடியும் எழு களிரும்! பாடல் ஆசிரியர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 38-இல் காண்க.பாடப்பட்டோன்:…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 94. சிறுபிள்ளை பெருங்களிறு!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 94. சிறுபிள்ளை பெருங்களிறு! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 23. நண்ணார் நாணுவர்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 23. நண்ணார் நாணுவர்! பாடல் ஆசிரியர்: கல்லாடனார் (23, 25, 371, 385, 391). இவர் கல்லாடம் என்ற ஊரினராக…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 69. பொற்றாமரை பெறுவாய்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 69. பொற்றாமரை பெறுவாய்! பாடல் ஆசிரியர்: ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 34- இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன