- 1

பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க

218 0

பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உணவு மட்டும் போதாது சில குறிப்புகளையும் பின்பற்ற வேண்டும். பிறந்த குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கும் என்றாலும் மாதங்கள் செல்ல செல்ல தாய்ப்பால் பற்றாக்குறை ஆகும்.

இதை தடுக்க உணவு முறைகள் மட்டுமே போதாது. வாழ்க்கை முறைகளிலும் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பற்றாக்குறையில்லாமல் தாய்ப்பால் கிடைக்க இளந்தாய்மார்கள் முயற்சி செய்தாலும் சமயங்களில் தாய்ப்பால் பற்றாக்குறையாகிவிடுகிறது.

தாய்ப்பால் சுரக்க போதுமான அளவு உணவுகள் எடுத்துகொண்டாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமம் இருக்கவே செய்கிறது என்று பல இளந்தாய்மார்கள் இப்போது வரை கூறி வருகின்றனர்.

- 3

குழந்தைக்கு பால் தரும் போது ஒரு பக்கம் மட்டுமே கொடுக்காமல் இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி சம அளவில் கொடுங்கள்.

குழந்தை பத்து நிமிடங்கள் தான் பால் குடிக்க எடுத்துகொள்கிறார்கள் என்றால் வலது மார்பில் ஐந்து நிமிடங்களும், இடது மார்பில் ஐந்து நிமிடங்களும் பால் கொடுக்க வேண்டும்.

முதல் முறை வலது பக்கம் பால் கொடுத்தால் அடுத்த முறை இடது பக்கம் பால் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் பால் இரண்டு மார்பகங்களில் சம அளவு சுரக்க கூடும்.

குழந்தைக்கு தாய்ப்பால் தருவதற்கு தற்போது சிலிக்கான் நிப்பிளை மார்பிள் பொருத்தும் பழக்கம் உள்ளது. அது மருத்துவ காரணங்களுக்காக தவிர்க்க முடியாத நிலையில் சரியான தீர்வாக இருக்கும். ஆனால் எல்லோரும் எல்லா நேரங்களிலும் அதை பொருத்துவது சரியானதல்ல. இது குழந்தைக்கு செயற்கையான பாலூட்டுதல் போன்றது. மேலும் இதனால் தாய்ப்பால் சுரப்பு குறையவும் கூடும்.

தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் போது மார்பகங்கள் கனமாக இருக்கும். பலரும் அப்படியே இருந்து குழந்தைக்கு பால் கொடுப்பார்கள். ஆனால் குழந்தை பால் குடித்து முடித்ததும் மார்பகங்களில் இருக்கும் அதிகப்படியான பாலை வெளியே பிய்ச்சி எடுப்பது தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்க கூடும். அதோடு தாய்ப்பால் நீண்ட நேரம் மார்பில் இருந்து பால் கட்டிகொள்வதும் தடைபடும். தாய்ப்பால் பீய்ச்சிய பிறகு குழந்தை பால் குடிக்கும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகமாக இருப்பதை நீங்களே உணருவீர்கள்.

- 5

குழந்தை அழும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் அம்மாக்களுக்கு உண்டு. இன்னும் சிலர் குழந்தை தாய்ப்பால் குடித்து முடித்து சிறுநீர் கழித்ததும் உடனே தாய்ப்பால் கொடுப்பார்கள். இதுவும் சரியானதல்லா. நார்மலாக குழந்தை தாய்ப்பாலுக்கு பிறகு மூன்று அல்லது நான்குமுறை சிறுநீர் கழித்த பிறகு தான் பசியில் அழுவார்கள். அதோடு குழந்தை தூக்கத்துக்கும் அழும் என்பதால் குழந்தையின் அழுகை எதற்கு என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் உணவு என்பது போலவே அவர்கள் வளர வளர மாதங்கள் கூடிய பிறகும் தாய்ப்பாலை பிரதானமான உணவாகவே கொடுக்க வேண்டும். குழந்தைக்கு வேறு திரவ உணவுகள் கொடுக்கும் போதும், திட உணவுகள் கொடுக்கும் போதும் தாய்ப்பாலை தவிர்க்கும் அளவுக்கு கொடுத்துவிட வேண்டாம். தாய்ப்பாலுக்கு பிறகு தான் இணையான உணவுகள் என்பதை அம்மாக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்க உள்ளாடைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். தூய்மையான உள்ளாடைகள் மார்பக காம்புகளில் புண்களை உண்டாக்காது. அதனால் உள்ளாடைகளில் கவனம் செலுத்துவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகள் தாய்ப்பால் சுரப்பு கட்டுப்படுத்தக்கூடும். அதனால் மார்பகங்களின் சரியான அளவில் உள்ளாடை அணிவது அவசியம்.

மார்பகத்தை மசாஜ் செய்வதன் மூலம் பால் சுரப்பது மேம்படும். மார்பகத்தில் பால் கட்டிகொள்வதால் பால் சுரப்பு தடைபடும். சமயங்களில் தாய்ப்பால் கட்டிகொள்ளவும் செய்யும். அந்த நேரத்தில் மார்பகத்துக்கு மசாஜ் செய்வது நல்லது. பால் கட்டிகொள்ளும் போது மென்மையான மசாஜ் செய்தால் பால் வெளியேறும். பால் கட்டும் சிக்கல் இல்லாத நிலையிலும் மார்பகங்களுக்கு மிதமான வெந்நீரில் மசாஜ் செய்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யலாம்.

குழந்தயை அணைத்தப்படி பால் கொடுப்பதன் மூலம் உங்களுக்கும் குழந்தைக்கும் இடையேயான ஸ்பரிச உணர்வு இருவருக்குமே பாதுகாப்பை உணர வைக்கும். மன அழுத்தமில்லாமல் இருக்க செய்யும்.

tamil samayam

பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க Source link

Related Post

- 7

பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் கருப்பை கட்டிகள் இன்று பெண்களுக்கு ஏற்படும்…
- 11

பெண் உறுப்பை எப்படி சுத்தம் செய்யலாம்? பெண்களே கட்டாயம் இந்த வீடியோவை பாருங்க

Posted by - பிப்ரவரி 1, 2021 0
பெண் உறுப்பை எப்படி சுத்தம் செய்யலாம்? பெண்களே கட்டாயம் இந்த வீடியோவை பாருங்க பொதுவாக உடலில் சருமம் அனைத்துமே மிருதுவானவை. அதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அதிலும்…
- 13

இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்தியாவில் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின்…
- 21

பெண்களே! ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்!

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே! ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்! இன்றைய காலத்தில் பல பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையிலிருந்து சிக்கி தவித்து வருகின்றார்கள். ஒழுங்கற்ற…
- 23

செயற்கை மார்பக சிகிச்சை செய்தால் ஏற்படும் மோசமான விளைவுகள் என்ன?

Posted by - நவம்பர் 10, 2020 0
செயற்கை மார்பக சிகிச்சை செய்தால் ஏற்படும் மோசமான விளைவுகள் என்ன? இன்றைய காலத்தில் செயற்கை மார்பக சிகிச்சைகள் அதிகளவில் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன