- 1

பெண்களே! மாதவிடாய் கப் யூஸ் பண்ண போறீங்களா? இதை எல்லாம் அவசியம் தெரிந்து வைச்சு கொள்ளுங்க

271 0

பெண்களே! மாதவிடாய் கப் யூஸ் பண்ண போறீங்களா? இதை எல்லாம் அவசியம் தெரிந்து வைச்சு கொள்ளுங்க

மாதவிடாய் காலங்களில் சானிடரி நாப்கின்கள், டாம்பான்ஸ் என்கின்ற வரிசையில் தற்போது, முக்கிய இடத்தை பிடித்து வருவது தான் மாதவிடாய் கப்.

ஏனெனில் இது இந்த மாதவிடாய் கப் மீண்டும் பயன்படுத்தக்கூடியதும், ஒரு கப் பல ஆண்டுகள் வரை நீடிக்கும், விலையானது மிகவும் குறைவானது. அதுமட்டுமின்றி, அவை சந்தைகளிலும் சுலபமாக கிடைக்கக்கூடியவையாக இருக்கின்றது.

இதனால் நாப்கின்களுக்கு பதிலாக, டாம்பான்களுக்கு பதிலாக கப் உபயோகிக்கும் பழக்கம் இளம் பெண்களிடையே அதிகரித்து வருகிறது.

ஆனால் சில பெண்களுக்கு இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. இதனால் அதை தெரியாமல் பயன்படுத்தும்போது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் இந்த மாதவிடாய் கப்பை எப்படி உபயோகப்படுத்தலாம்? இதனால் கிடைக்கும் நன்மை, தீமை என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மாதவிடாய் கப் உபயோகிக்கும் முறை

மாதவிடாய் கப், சிலிகான் அல்லது ரப்பரால் செய்யப்பட்ட மணி வடிவத்தில் சிறியதாக இருக்கும்.

இந்த கப்பை மடித்து சுருட்டி பிறப்புறுப்பிற்குள் வைக்க வேண்டும். உள்ளே செலுத்தியதும் அது அதன் வடிவத்திற்கு விரிந்து சரியாக பொருந்திக் கொள்ளும்.

இரத்தப்போக்கானது அந்த கப்பில் சேகரிக்கப்படும். 4 அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு முறை கப்பை வெளியே எடுத்து சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.

- 3

மாதவிடாய் கப் உபயோகிப்பதன் நன்மைகள்
  • மாதவிடாய் கப்புகளை உபயோகிக்கும் போது யோனி வறண்டு போகாது. ஆரோக்கியமான பாக்டீரியாக்களைப் பாதுகாப்பதோடு, ஆறுதலான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருக்கவும் உதவுகிறது.
  • இந்த கப் இது ஆரோக்கியமான பாக்டீரியாக்களைப் பாதுகாப்பதோடு, ஆறுதலான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருக்கவும் உதவுகிறது.
  • மாதவிடாய் கப்பின் எந்தவொரு ரசாயனங்களும் இல்லாததால் அவை பாதுகாப்பான மற்றும் சுத்தமான மாதவிடாய் சுழற்சிக்கு இயற்கையானவையாக பயனளிக்கின்றது.
  • மாதவிடாய் கப்புகள் உபயோகித்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் நாற்றத்தைக் கூட அகற்றிவிடும்.
தீமைகள்
  • மாதவிடாய் கப்களும் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால், கப் உபயோகிக்கும் போது முக்கியமாக தெரிந்து கொள்வது அவசியமாகும்.
  • மாதவிடாய் கப்புகள் பெரும்பாலும் சிலிகான் அல்லது ரப்பரால் ஆனதால் ஒரு சிலருக்கு ரப்பரால் அழற்சி ஏற்படக்கூடும். எனவே, அப்படிப்பட்ட பெண்களுக்கு இந்த கப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது.
  • சில நேரங்களில், மாதவிடாய் கப்பை பொருத்துவது மிகவும் கடினமானதாக இருக்கக்கூடும். ஏனெனில் சரியான பொருத்தத்தைக் கண்டுபிடிப்பதே பெரும் சவாலாக தான் இருக்கும். மேலும் நீங்கள் சாய்ந்த கருப்பை அல்லது குறுகிய கர்ப்பப்பையை கொண்டிருந்தால் மேலும் கடினம் தான்.
  • மாதவிடாய் கப்பை நீக்குவது மிகவும் சிரமமாக இருக்கும். அதற்கென சில யுக்திகளை கையாண்டு, நுட்பத்துடன் மெதுவாகவும், முறையாகவும் அகற்ற வேண்டும்.
முக்கிய குறிப்பு

ஒரு மாதவிடாய் கப் என்பது இரத்தப்போக்கை ஒருபோதும் உறிஞ்சாது. ஆனால், அதற்கு மாறாக அவற்றை கப்பில் சேகரிக்கிறது. ஆகையால், மாதவிடாய் காலத்தில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை சரியாக முடிவு எடுக்க வேண்டும்.

பெண்களே! மாதவிடாய் கப் யூஸ் பண்ண போறீங்களா? இதை எல்லாம் அவசியம் தெரிந்து வைச்சு கொள்ளுங்க Source link

Related Post

- 5

சசிகலா சிறையில் இத்தனை ஆண்டுகள் என்னென்ன வேலைகள் செய்துள்ளார் தெரியுமா? வெளியான ஆச்சரிய தகவல்கள்

Posted by - நவம்பர் 24, 2020 0
சசிகலா சிறையில் இத்தனை ஆண்டுகள் என்னென்ன வேலைகள் செய்துள்ளார் தெரியுமா? வெளியான ஆச்சரிய தகவல்கள் சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, விடுதலையாகவுள்ள நிலையில்,…
- 7

பெண்களே! ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்!

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே! ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்! இன்றைய காலத்தில் பல பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையிலிருந்து சிக்கி தவித்து வருகின்றார்கள். ஒழுங்கற்ற…
- 9

தாய்ப் பால் கொடுக்கும் தாய்… அக்குல்களில் இருந்து பால் எடுக்கும் ஆச்சரியம்! ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்டார்

Posted by - பிப்ரவரி 15, 2021 0
தாய்ப் பால் கொடுக்கும் தாய்… அக்குல்களில் இருந்து பால் எடுக்கும் ஆச்சரியம்! ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்டார் அமெரிக்காவை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னுடைய அக்குலில்…
- 13

ஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா?

Posted by - அக்டோபர் 20, 2020 0
ஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா? பெண்களை பொறுத்தவரை ஆண்களுக்கே தெரியாமல் அவர்களை ரசிக்கும் குணமுடையவர்கள்.…
- 15

பெண்கள் இரவில் உறங்க செல்லும் முன் தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க

Posted by - அக்டோபர் 20, 2020 0
பெண்கள் இரவில் உறங்க செல்லும் முன் தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க நாம் இரவில் உறங்க செல்லும் முன்பு செய்யும் சில தவறுகளால், சரும…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன