பெண்கள் மாதவிடாய் காலங்களில் சர்க்கரை சாப்பிடுவது இவ்வளவு ஆபத்தா?
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் மிகந்த சிக்கல்கள் நிறைந்த நாட்களாக காணப்படும்.
ஏனெனில் இந்த சமயங்களில் வயிற்று வலி, ஹார்மோன் சமநிலையின்மை, கால் வலி மற்றும் முதுகு வலி போன்ற ஏராளமான பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள்.
இதுபோன்ற காலக்கட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானதாகும். இல்லாவிடின் இது மேலும் சில வலிகளை ஏற்படுத்தி விடும்.
குறிப்பாக மாதவிடாய் காலங்களில் வலிகளை அதிகரிக்கும் எந்தவிதமான உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. அதில் சர்க்கரையும் ஒன்றாகும்.
மாதவிடாய் காலத்தில் சர்க்கரை போன்ற இனிப்பு பொருட்களை எடுத்து வருவது நிலைமையை மோசமாக்க வாய்ப்புள்ளது. மாதவிடாய் காலங்களில் இது வேதனையை தரும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
அந்தவகையில் சர்க்கரையை சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- சர்க்கரை சாப்பிடுவதால் வயிற்றில் நீர் தேக்கம் ஏற்பட்டு அது வயிற்று வீக்கத்திற்கு வழி வகுக்கும். இதனால் பெண்களுக்கு அமிலத்தன்மை, வயிற்று வலி, வாயு போன்றவற்றை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.
- இந்த நேரத்தில் அதிகமான சர்க்கரையை எடுத்துக் கொள்வது உங்களுக்கு பிசிஓடி பிரச்சனைக்கு வழி வகுக்கும். ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கம் காரணமாக அதிக சர்க்கரை சாப்பிட்டால் அதன் அறிகுறிகள் இன்னும் மோசமாகி விடும்.
- மாதவிடாய் நேரத்தில் நீங்கள் உணவில் அதிக சர்க்கரை சேர்ப்பது உங்க பருக்களை மேலும் மோசமாக்கும்.
- அதிக சர்க்கரை உங்க தோல் திசுக்களை சிதைத்து தொய்வு ஏற்பட வழிவகை செய்து விடும்.
- சர்க்கரையால் இன்சுலின் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. இது உங்கள் மன அழுத்த ஹார்மோன் ஆன கார்டிசோல் அளவை கூட்டுகிறது.
எனவே மாதவிடாய் காலங்களில் சர்க்கரையை தவிர்ப்பது உங்க உடல் நலத்திற்கு நல்லதாகும்.
…
பெண்கள் மாதவிடாய் காலங்களில் சர்க்கரை சாப்பிடுவது இவ்வளவு ஆபத்தா? Source link