பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்களால்  தாம்பரம், மதுராந்தகம் உள்ளிட்ட ஊர்களில் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற லட்சக்கணக்கானோர், விடுமுறை முடிந்து சென்னை திரும்பினர்.

இதனால் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச் சாவடி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல் தாம்பரம், ஸ்ரீபெரும்புதூரிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், அரை கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கவே அரை மணி நேரம் பிடிப்பதாக வாகன ஓட்டிகள் கூறினர். 

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

News Source

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this: