மாதவிடாயின் போது பின்பற்ற வேண்டியவை

145 0

மாதவிடாயின் போது பின்பற்ற வேண்டியவை

2020-10-20 11:48:45

மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று.

அதிலும்  ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’ பிரச்னை இருப்பவர்களுக்கு டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை, கால்வலி போன்ற பிரச்னைகளும் சேர்ந்துகொள்ளும்.

இது தவிர வாந்தி, செரிமானக் கோளாறு  என ஐந்து நாளும் நரகம்தான். கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும்.

அந்த சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் ஓய்வுக்கே நேரமில்லாமல் பரபரவென்று ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம்.

கால்சியம் சேர்த்துக் கொள்ளுங்கள்

அந்த நாட்களில் கால்கள் இழுப்பதும், கிராம்ப்ஸ் புடித்து அடி வயிற்றில் அதிக வலியும்  இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் ஆகியவற்றை  சாப்பிடுங்கள். மேலும் கண்டிப்பாக ஏதேனும் கீரைகளை சேர்த்துக் கொண்டால் படிப்படியாக இந்தப் பிரச்னைகள் குணமடையும்.

வைட்டமின்களை தவிர்க்காதீர்கள்

வைட்டமின் பி6  நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’  – ஐ குறைக்கிறது. வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கிறது. மிகவும் முக்கியமாக,  மாதவிடாய்க்கு முன்பு மேற்கூறிய வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கும்  ஆரஞ்சு, நட்ஸ் வகைகள், வாழைப்பழம், மீன், தர்பூசணி, கீரை போன்றவற்றை சாப்பிடுங்கள். வலியில்லாத மாதவிடாய்க்கு  தயாராக இந்த வைட்டமின்கள் தேவை.

நிறைய தண்ணீர் குடியுங்கள்

பலர்  பீரியட்ஸின் போது கழிப்பறையை பயன்படுத்துவதை எரிச்சலான ஒரு விஷயமாக நினைத்து,  அந்த நாட்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள்.

ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்றுவலி குறையும். தண்ணீருக்கு பதில் ஜூஸ்களையும் குடிக்கலாம்.

சாக்லேட் சாப்பிடுங்கள்

நாம் மகிழ்ச்சியாகவும், டென்ஷன் இல்லாமலும் இருக்க மூளையில் செரட்டோனின் என்ற அமிலச்சுரப்பு அவசியம்.

டார்க்  சாக்லேட்டுகளைச்  சாப்பிடுவதால் செரட்டோனின் அதிக அளவு சுரக்கிறது. அதனால் மாதவிடாயினால் ஏற்படும் டென்ஷன், பதட்டம்  குறைய சாக்லேட் சாப்பிடுங்கள்.

அதிக கொழுப்பு வேண்டாம்

அதிக கொழுப்புள்ள வெண்ணெய், கிரீம் போன்ற உணவுகள் பெண்களின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனைத் தூண்டிவிடும். மாதவிடாய் காலத்தில் இதனால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஃபைபர் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்னையால் பலர் சாப்பிடவே மாட்டார்கள்.  சாப்பிடாமல் இருப்பதால் கிராம்ப்ஸ்தான் அதிகம் வரும். அதனால் உணவில் பட்டாணி, கோதுமை, ரெட் பீன்ஸ், அவகாடோ, கொய்யா, ப்ராக்கோலி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள  ஃபீல் ஃப்ரீயாக உணருவீர்கள்.

ஆதாரம் – வணக்கம்லண்டன் நாளிதழ்


மாதவிடாயின் போது பின்பற்ற வேண்டியவை


Source link

Related Post

- 1

பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் கருப்பை கட்டிகள் இன்று பெண்களுக்கு ஏற்படும்…
கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலிகளுக்கும் நிவாரணம்

கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலிகளுக்கும் நிவாரணம் தரும் சூப்பரான பயிற்சி!

Posted by - பிப்ரவரி 9, 2021 0
கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலிகளுக்கும் நிவாரணம் தரும் சூப்பரான பயிற்சி!   பொதுவாக நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளில் கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு முக்கியமானதாகும். அதிலும் குறிப்பாக…
கன்னத்தில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா

கன்னத்தில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த 5 எளிய பயிற்சிகள் செய்தாலே போதும்!

Posted by - ஜனவரி 24, 2021 0
கன்னத்தில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த 5 எளிய பயிற்சிகள் செய்தாலே போதும்!   உதடுகள் மற்றும் கண்களுக்கு அடுத்து முகத்தை அழகாக காட்டுவது, கன்னங்கள்…
- 9

கண் பார்வை குறைபாட்டை போக்க வேண்டுமா? வீட்டில் இருந்தே இந்த பயற்சியை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 21, 2020 0
கண் பார்வை குறைபாட்டை போக்க வேண்டுமா? வீட்டில் இருந்தே இந்த பயற்சியை செய்திடுங்க இன்றைய இளம் தலைமுறையினர் பலர் பார்வை குறைபாடு காரணமாக கண்ணுக்கு கண்ணாடி அணிந்து…
நுரையீரல் ஆரோக்கியத்துக்கு

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்

Posted by - பிப்ரவரி 10, 2021 0
நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்   நுரையீரலுக்கு ஏற்படும் அழுத்தத்தில் இருந்து அதனை பாதுகாத்து ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தனுராசனத்தை தொடர்ந்து செய்து வரலாம். எப்படி செய்ய…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன