மாதவிடாயின் முதல் மூன்று நாட்களும் இந்த பானத்தை பானம் கட்டாயம் குடிங்க… அடிவயிற்று வலி காணமால் போய்விடும்
மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த காலக்கட்டங்களில் பெண்கள் மனதளவிலும், உடல ரீதியாகவும் சேர்வாக காணப்படுவார்கள்.
குறிப்பாக அடிவயிற்று வலி. இது திவிரமாக இருந்தால் அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத அளவுக்கு சோர்ந்துவிடும் அளவுக்கு பலவீனமாக இருப்பதும் மற்றும் ஒரு காரணம்.
அதோடு வயிறு வலி தவிர்த்து இடுப்புவலி, கை கால்கள் நடுக்கம், கால் வலி, அடி முதுகுவலி பிரச்சனைகளும் உண்டாக கூடும்.
இரத்தபோக்கை அதிகம் கொண்டிருந்தால் இன்னும் அதிகமான வலியை எதிர்கொள்வார்கள்.இந்த வலிக்கு பெரும்பான்மையான காரணம் உடலில் போதுமான பலம் இல்லாததுதான்.
இதற்கு வலி நிவாரணி மாத்திரைகளை தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில இயற்கை பொருட்களை கொண்டு கூட சரி செய்ய முடியும்.
அந்தவகையில் தற்போது மாதவிடாயின் முதல் மூன்று நாட்களும் கண்டிப்பாக குடிக்க வேண்டிய சூப்பரான பானம் ஒன்றினை பற்றி பார்ப்போம்.
தேவை
- பனைவெல்லம் – 1 ( சிறு உள்ளங்கையளவு)
- நெல்லிக்காய் – 1
- சுக்குப்பொடி – கால் டீஸ்பூன்
- ஏலத்தூள் – கால் டீஸ்பூன்
- எலுமிச்சை – சிறியதாக ஒன்று
- தண்ணீர் – 2 டம்ளர் அளவு
- தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை
தண்ணீரில் பனைவெல்லத்தை சேர்த்து கலக்கவும். அவை கரைவதற்குள் நெல்லிக்காயை துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து சாறை தனியாக எடுத்து சேர்க்கவும்.
பிறகு எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இறுதியாக தேன் சேர்த்து சுக்குப்பொடி, ஏலத்தூள் கலந்து நன்றாக கலந்தால் சத்து மிகுந்த பானம் தயார்.
நெல்லிக்காய் ஏராளமான சத்துக்களோடு இரும்புச்சத்தையும் கொண்டிருக்கிறது. இதில் ஆரஞ்சு பழத்தை காட்டிலும் 20 மடங்கு வைட்டமின் சி உள்ளது. இரத்தபோக்கு அதிகரிக்கும் மாதவிடாய் காலத்தில் இழந்த இரத்தத்தை ஈடு செய்து உடலை பலவீனத்திலிருந்து பாதுகாக்கிறது.
…
மாதவிடாயின் முதல் மூன்று நாட்களும் இந்த பானத்தை பானம் கட்டாயம் குடிங்க… அடிவயிற்று வலி காணமால் போய்விடும் Source link