- 1

மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்?

174 0

மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்?

 

மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.

மாதவிடாய் நாளில் வெளியேறும் ரத்தபோக்கு சிவப்பு, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு , வெளிறிய அல்லது ஆரஞ்சு, சாம்பல், கருப்பு நிறம் என இருக்க கூடும். இந்த நிறங்களே கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை சொல்லிவிடும்.

இருப்பினும் நம்மில் சிலருக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுவதுண்டு. இதன்போது பல பெண்கள் கர்பப்பை பிரச்சினையாக இருக்க கூடுமே என அச்சமடைவார்கள்.

ஆனால் இப்படி கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அந்தவகையில் கருஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறக்கூடிய ரத்தம் என்ன சொல்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

காரணங்கள் என்ன?
  • பெரும்பாலும் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறமாக வருவதற்கு காரணம் மாதவிடாய் முடியும் நாட்களாக இருக்கலாம்.
  • மாதவிடாய் முடியும் நாட்களில் ரத்த ஓட்டம் குறைவதால் இந்த கருஞ்சிவப்பு நிறம் உண்டாக கூடும். அதே போன்று நீண்ட நேர ஓய்வுக்கு பிறகு வெளிப்படும் போதும் இந்த கருஞ்சிவப்பு இருக்கலாம்.
  • கருஞ்சிவப்பு ரத்தம் வந்தால் அது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
  • போதாக்குறைக்கு மாதவிடாய் நேர உதிரபோக்கும் உண்டாவதால் இரும்புச்சத்து குறைபாடும், ஹீமோகுளோபின் குறைபாடும் இருக்கலாம்.
  • கர்ப்பப்பையில் நாள்பட்ட அழுக்கு தங்கியிருந்தால் கருஞ்சிவப்பு நிற உதிரம் வெளிபடும்.
  • மெனோபாஸ் நெருங்கும் பெண்களுக்கும் மாதவிடாயின் போது கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறலாம். குறிப்பாக முன்கூட்டியே மெனோபாஸ் அறிகுறிகளை பெற்றுவிடும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் இப்படி கருஞ்சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருக்கலாம்.
  • ஹார்மோன் குறைபாட்டுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மருந்து எடுத்துகொள்ளும் போது அதை தொடர்ந்து எடுக்காமல் விடுபடும் போது கருஞ்சிவப்பு நிற உதிரபோக்கு உண்டாகலாம்.
அறிகுறி

இந்த நிறத்தில் ரத்தம் வெளியேறினால் அதனோடு வழக்கத்தை விட அதிக சோர்வை கொண்டிருக்கலாம். நகங்கள், கண்கள் வெளிறி இருக்கலாம்.

வழக்கத்தை காட்டிலும் தலைசுற்றல் பிரச்சனை இருக்கும். சருமமும் வெளிறி இருக்கும்.

இதனை போக்க என்ன பண்ணலாம்?

கருஞ்சீரகத்தை பொடித்து கண்ணாடிபாட்டில் வைத்துகொண்டு மாதவிடாய்க்கு முன்பு 7 நாட்களிலிருந்தே கால் டீஸ்பூன் அளவு வெதுவெதுப்பான நீரில் குடித்துவந்தால் கர்ப்பப்பை கசடு நீங்கும். இது போல் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டால் போதும்.

குறிப்பு

கருஞ்சிவப்பு நிற உதிரப்போக்கு நீராக வராமல் கட்டியாக வந்தாலோ துர்நாற்றத்துடன் இருந்தாலோ மருத்துவரை அணுவதே பாதுகாப்பானது.

மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்? Source link

Related Post

- 3

சசிகலா சிறையில் இத்தனை ஆண்டுகள் என்னென்ன வேலைகள் செய்துள்ளார் தெரியுமா? வெளியான ஆச்சரிய தகவல்கள்

Posted by - நவம்பர் 24, 2020 0
சசிகலா சிறையில் இத்தனை ஆண்டுகள் என்னென்ன வேலைகள் செய்துள்ளார் தெரியுமா? வெளியான ஆச்சரிய தகவல்கள் சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, விடுதலையாகவுள்ள நிலையில்,…
- 5

பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்களும், நன்மைகளும்!

Posted by - அக்டோபர் 22, 2020 0
பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்களும், நன்மைகளும்! கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் உடைக்கு ஏற்ற நிறங்களில் வளையல்கள் அணிய ஆசைப்படுவார்கள். அதற்கு காரணம் கைகளை…
- 9

பெண்களே! மாதவிடாய் வயிற்று வலியால் அவதிப்படுறீர்களா? இதனை குறைக்க இதோ சூப்பரான வழிமுறை

Posted by - ஜனவரி 30, 2021 0
பெண்களே! மாதவிடாய் வயிற்று வலியால் அவதிப்படுறீர்களா? இதனை குறைக்க இதோ சூப்பரான வழிமுறை ​பொதுவாக மாதவிடாய் நாட்களில் வயிறு வலியை தடுக்கவே முடியாது. பெண்கள் இச்சமயங்களில் பெரிதும்…
- 11

35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனை செய்திடுங்க.. இல்லையென்றால் ஆபத்தாம்!

Posted by - அக்டோபர் 27, 2020 0
35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனை செய்திடுங்க.. இல்லையென்றால் ஆபத்தாம்! பொதுவாக பெண்கள் 35 வயதை எட்டும் போது பலவித நோய்களை வந்து தாக்கிவிடுகின்றது.…
- 13

பெண் உறுப்பை எப்படி சுத்தம் செய்யலாம்? பெண்களே கட்டாயம் இந்த வீடியோவை பாருங்க

Posted by - பிப்ரவரி 1, 2021 0
பெண் உறுப்பை எப்படி சுத்தம் செய்யலாம்? பெண்களே கட்டாயம் இந்த வீடியோவை பாருங்க பொதுவாக உடலில் சருமம் அனைத்துமே மிருதுவானவை. அதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அதிலும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன