மாதவிடாய் காலங்களில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க நல்ல தூக்கம் வரும்
பொதுவாக பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலங்களில் கடுமையான வயிற்று வலி காரணமாக சரியான தூக்கமின்றி அவதிப்பட்டு வருவர்.
இதன் காரணமாகவே தன் குடும்பத்து உறுப்பினர்களிடம் தேவையில்லாமக் கோபப்படுவர், அவர்கள் என்ன சொன்னாலும், எரிச்சல் ஊட்டுவது போன்று இருக்கும்.
அதுவே அந்த வலி சரியான பின், அப்போது நான் இருந்த நிலையில், அப்படி பேசிவிட்டேன் என்று சிலர் கூறியிருப்பதை நாம் பலர் கேட்டிருக்க முடியும்.
அப்படி இந்த மாதவிடாய் காலங்களில் சரியான தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், சில எளிய முறைகளை மேற்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
பெரிய நாப்கின்கள்
இரவு நேரங்களில் தூங்கும் போது பெரிய நாப்கின்களை பயன்படுத்தினால், மிகவும் நல்லது. ஏனெனில் இரவு நேரத்தில் நாம் வெகு நேரம் தூங்க வேண்டும் என்பதால், அவ்வப்போது இடையில் சென்று நாப்கின்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
அதுவே பெரிய நாப்கின்களை பயன்படுத்தினால், 8 மணி நேரம் வரை அதை மாற்ற தேவை இருக்காது. குறிப்பாக நீங்கள் தூங்கும் போது, முடிந்த வரை பக்கவாட்டில் படுத்து உறங்குங்கள். இது கசிவதை குறைக்கும்.
தலையணை
இது போன்ற காலகட்டத்தில், நல்ல ஒரு வசதியான தலையனையை படுத்தி கொள்வது நல்லது, ஏனெனில் அது உங்களுக்கு நல்ல செளகரியமான உணர்வை கொடுக்கும். குறிப்பாக இந்த நாட்களில் தலையணையை எப்பொழுதும் அடிவயிற்றுக்கு கீழ் வைத்து இருக்க வேண்டும்.
சைக்கிளிங் ஷார்ட்ஸ்
தூங்குவதற்கு செல்லும் முன்பு, சைக்கிளிங் ஷார்ட்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் எந்த கசிவை பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இது உங்க நாப்கின்களை அசையாமல் சரியான இடத்தில் வைக்க உதவுகிறது. கசிவு ஏற்படுவதும் குறைவு.
பாடல்கள் கேட்பது
மாதவிடாய் காலத்தில் அசெளகரியமாக உணரும் போது படுக்கையில் இதமான பாடல்களை இரவில் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும்.
மாதவிடாய் பிடிப்பை குறைக்க
இரவு நேரங்களில் ஏற்படும் மாதவிடாய் பிடிப்பை குறைக்க வெதுவெதுப்பான நீர் பையைஅடிவயிற்றின் கீழ் வைத்து ஒத்தடம் கொடுத்தால், வலி குறைவதுடன், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
தண்ணீர்
மாதவிடாய் காலங்களில் இரவில் தூங்குவதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது மாதவிடாய் இரத்த ஓட்டத்தை வெளியேற்ற உதவுகிறது. அதோடு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
…
மாதவிடாய் காலங்களில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க நல்ல தூக்கம் வரும் Source link