பிப்ரவரி 23, 2021
SaveSavedRemoved 0
முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவு பெற வேண்டுமா? இதோ சில டிப்ஸ்
நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாதம் ஒருமுறையேனும் இறந்த செல்களை நீக்க வேண்டும்.
பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும்.
இதற்கு அதிக பணத்தை செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் நீக்க முடியும்.
அந்தவகையில் தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது.
- காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர அதாவது மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சுருக்கங்கள் மறையும்.
- ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
- முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.
- தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குளித்து வர நாளடைவில் முகம் பொலிவு பெறும்.
…
முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவு பெற வேண்டுமா? இதோ சில டிப்ஸ் Source link
SaveSavedRemoved 0