முதுகு வலியினால் கஷ்டப்படுறீர்களா? அதனை தடுக்க இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க
முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும்.
இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.
இது அடிக்கடி அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி கண்டிப்பாக வரும்.
இதிலிருந்து விடுபட உடற்பயிற்சி கூட பெரிதும் உதவி புரிகின்றது.
அதில் “எக்ஸ்டென்ஷன் பயிற்சி” என்ற உடற்பயிற்சி முதுகுவலிக்கு நிவாரணம் தருகின்றது.
அந்தவகையில் தற்போது இந்த உடற்பயிற்சியை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

- குப்புறப் படுத்தபடி, வலது காலை 45 டிகிரி அளவுக்கு, முட்டியை மடக்காமல் நேராக உயர்த்தவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும்.
- திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். 5 வினாடிகள் ஓய்வுக்குப் பிறகு, இடது காலுக்கும் இதே பயிற்சியைச் செய்யவும்.
- குப்புறப் படுத்தபடி, தலையை மட்டும் உயர்த்தவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும்.
- குப்புறப்படுத்தபடி, வலது காலையும் இடது கையையும் ஒருசேர, உயர்த்தவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும்.
- பிறகு ஓய்வு நிலைக்குத் திரும்பியவுடன், இடது காலையும் வலது கையையும் தூக்கி, இதே பயிற்சியை செய்யவும்.
- குப்புறப் படுத்தபடி, இரண்டு கால்களையும் முட்டி மடங்காமல் நேராகத் தூக்கவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும்.
…
முதுகு வலியினால் கஷ்டப்படுறீர்களா? அதனை தடுக்க இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க Source link