முதுகு வலியை குணப்படுத்த இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க… வலி பறந்துவிடுமாம்!
இன்று வேலை செய்யும் அனைவருமே சந்திக்கு பிரச்சனைகளுள் ஒன்று தான் முதுகு வலி.
குறிப்பாக அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு முதுகு அதிக பாதிப்புக்குள்ளாகும்.
இதனை எளிய முறையில் போக்க வீட்டில் இருந்தப்படியே சில உடற்பயிற்சிகள்,யோகசானங்கள் செய்தாலே போதும்.
அந்தவகையில் முதுகுவலியை போக்க “சப்த படங்குஸ்தாசனம்” என்ற யோகசானம் பெரிதும் உதவி புரிகின்றது.
இந்த ஆசனத்தால் தொடைகள் பலம் பெறுகிறது. முதுகிற்கு நெகிழ்வுத்தன்மை அதிகரித்து ரத்த ஓட்டம் நன்றாக பாயும்.
தற்போது அந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

- முதலில் கால் நீட்டி அமர்ந்து மெதுவாய் மூச்சை இழுத்து விடுங்கள்.
- பின்னர் தரையில் படுத்துக் கொள்ளவும். கால்களையும் கைகளையும் தளர்வாய் வைத்துக் கொள்ளுங்கள். மெதுவாய் மூச்சை இழுத்து ஆழமாய் விடவும்.
- பின் மெதுவாக வலது காலை மட்டும் உயர்த்தவும். நேராக வளைக்காமல் உயர்த்துங்கள்.
- உங்களால் ஆரம்பத்தில் நேராக உயர்த்த முடியவில்லையென்றால் யோகா ஸ்ட்ராப் கிடைக்கிறது. அதனை பாதத்தில் மாட்டி உயர்த்தவும். இதனால் முட்டி வளையாமல் நேராக இருக்கும்.
- கைகளை நீட்டில் வலது பாதத்தின் கட்டை விரலை தொட முயலுங்கள்.
- ஆரம்பித்தில் முயன்றாலும், நன்றாக பயிற்சி செய்தபின் கால் கட்டை விரலை தொட வேண்டும்.
- இதே நிலையில் 1 நிமிடம் இருந்த பின் கால்களை தளர்த்துங்கள். அதன்பின் இதே போல் இடது காலிற்கும் செய்ய வேண்டும்.
பலன்கள்
முட்டியை பலப்படுத்தும். முதுவலியை சரிசெய்யும். தொடை தசைகளை உறுதியாக்கும். கருப்பையின் பலத்தை அதிகப்படுத்தும்.
புரோஸ்டேட் சுரப்பியை தூண்டும். இடுப்பு எலும்புகளை வலுவாக்கும். ரத்த அழுத்தத்தை சமன்படுத்தும்.
குறிப்பு
தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.
…
முதுகு வலியை குணப்படுத்த இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க… வலி பறந்துவிடுமாம்! Source link