- 1

முதுகு வலி பாடாய் படுத்துதா? இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க

124 0

முதுகு வலி பாடாய் படுத்துதா? இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க

தலைவலி, வயிறு வலி போன்று தான் முதுகு வலி அடிக்கடி நாம் சந்திக்கும் ஓர் வலி ஆகும்.

90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது.

இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.

இந்த முதுகுவலி வந்துவிட்டாலே போதும் நம்மை ஒரு வழி பண்ணிவிடுகின்றது.

இதிலிருந்து எளிதில் விடுபட மாத்திரைகள் தேவையில்லை உடற் பயிற்சிகள் போதும்.

அந்தவகையில் முதுகுவலியில் இருந்து தப்பிக்க சில எளிய உடற்பயிற்சிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

பிட்டிலாசனா மர்ஜாரயாசனா (Cat-Cow Pose)
- 3
Image Source: POPSUGAR Photography / Louisa Larson
 • முதலில் நாய் அல்லது மாடு போன்று இரண்டு கைகளை முன்னே தரையில் வைத்து, முழங்கால்களை தரையில் வைத்து குனிந்து கொள்ளுங்கள்.
 • உங்க உடலை 4 நிலைகளிலும் தோள்பட்டை, இடுப்பு, முழங்கால்கள், மணிக்கட்டு சமப்படுத்துங்கள்.
 • இப்பொழுது மூச்சை உள்ளே இழுத்து வயிற்றை தரையை நோக்கி தள்ளி முதுகை வளைத்து கழுத்தை மேலே தூக்குங்கள்.
 • டென்ஷன் இல்லாமல் ரிலாக்ஸ் ஆகுங்கள். ஒரு நிமிடம் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து செய்து வாருங்கள். முதுகு வலியில் நல்ல மாற்றம் தெரியும்.
அர்த்த மத்சியேந்திரசனா (Seated Spinal Twist)
- 5
Image Source: POPSUGAR Photography
 • முதலில் காலை முன்னே நீட்டி முதலில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
 • இப்பொழுது வலது காலை மடக்கி வலது கால் பாதத்தை இடது காலை தாண்டி அதன் தொடைக்கு அருகில் தரையில் படும்படி வைக்கவும். இடது கால் முன்னே நேராக நீட்டிருக்க வேண்டும்.
 • இப்பொழுது முதுகை வலது பக்கமாக திருப்பி சப்போர்ட்க்கு வலது கையை பின்புறத்தில் தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள்.
 • இப்பொழுது இடது கையை எடுத்து வலது காலை சுற்றி பிடித்து கொள்ளுங்கள்.
 • மூச்சை உள்ளிழுத்து முதுகு தண்டு வடத்தை நீட்சியடைய செய்யவும். மூச்சை வெளியிடும் போது கைகளை தொடையில் அழுத்தி வெளியே விடவும். இதேப்போன்று ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொள்ளுங்கள்.
பாலாசனம் (Child’s Pose)
- 7
Verywell / Ben Goldstein
 • உங்கள் பாதங்களிலும் முழங்கால்களிலும் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
 • முன்னோக்கி நீண்டு கைகளை முன்னே நீட்டிக் கொள்ளுங்கள்.
 • உங்கள் நெற்றி தரையில் தொட வேண்டும்.
 • உங்கள் கைகளை முன்னோக்கி நீட்டி முதுகை நீட்சியடைய செய்யுங்கள்.
 • 5 நிமிடங்கள் இப்படியே இருந்து பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்
அதோ முக ஸ்வனாசனா (Downward-Facing Dog)
- 9
gaia.com
 • இது நான்கு நிலைகளில் நிற்கும் யோகா. முதலில் இடுப்புக்கு கீழே உங்க முழங்கால்களை ஒருங்கிணைக்கவும், கைகளை உங்கள் தோள்பட்டைக்கு முன்னே நீட்டி குனிந்து தரையைத் தொடுங்கள்.
 • முழங்காலை மடக்காமல் தரையில் இருந்து எடுத்து விடுங்கள். முழங்காலை வளைத்து குதிகால்களை தரையில் இருந்து தூக்கி நில்லுங்கள்.
 • பிட்டத்தை உயரமாக உயர்த்தி குதிகால்களை தரையில் இருந்து நீட்டிக்கவும், முழங்கால்களை நேராக நீட்டுங்கள்.
 • தலை, மேல் கைகள், கன்னம் இவையெல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
 • 1 நிமிடங்கள் இப்படியே இருந்து விட்டு பிறகு பழைய நிலைக்கு வாருங்கள்

முதுகு வலி பாடாய் படுத்துதா? இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க Source link

Related Post

- 11

முதுகு வலியை குணப்படுத்த இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க… வலி பறந்துவிடுமாம்!

Posted by - அக்டோபர் 22, 2020 0
முதுகு வலியை குணப்படுத்த இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க… வலி பறந்துவிடுமாம்! இன்று வேலை செய்யும் அனைவருமே சந்திக்கு பிரச்சனைகளுள் ஒன்று தான் முதுகு வலி.…
- 15

உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலோஜன் உற்பத்தி குறைவதால் கைகள் மற்றும் மற்ற…
- 25

Aqua Aerobics நீச்சல் பயிற்சி இவர்களெல்லாம் செய்யகூடாது

Posted by - அக்டோபர் 21, 2020 0
Aqua Aerobics நீச்சல் பயிற்சி இவர்களெல்லாம் செய்யகூடாது Aqua Aerobics நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எளிதில் அழகான உடல் வடிவத்தைப் பெறவும் மிகவும் உதவி செய்கிறது.…
உடல் எடை குறைய, மார்பு சளி நீங்க- 8 வடிவில் நடக்கவும்

உடல் எடை குறைய, மார்பு சளி நீங்க- 8 வடிவில் நடக்கவும்

Posted by - பிப்ரவரி 10, 2021 0
உடல் எடை குறைய, மார்பு சளி நீங்க- 8 வடிவில் நடக்கவும்   நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். இதன் மூலம்…
- 30

நுரையீரல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா? அப்போ தினமும் இந்த ஆசனங்களை செய்து பாருங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
நுரையீரல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா? அப்போ தினமும் இந்த ஆசனங்களை செய்து பாருங்க நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில யோகாசனங்கள் உதவி புரிகின்றது. தற்போது எவை என்னவென்று…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன