முதுகெலும்பை வலுவாக்கணுமா? இந்த உடற்பயிற்சியை செய்திடுங்க
முதுகெலும்பு நிமிர்த்த உதவும் ஒரு முக்கியமான தசைகள் ஆகும். இது முதுகை திருப்பவும் செய்கிறது.
வயது மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ப முதுகெலும்பு சுருங்கிவிரியும் திறன் கொண்டது.
இருப்பினும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தை பலரும் தாமதமாகவே கவனிக்கின்றனர். தாமதமான பிறகு முதுகு தண்டுவடத்தை வலுவாக்க முடியாது என்றாலும், அதைச் சுற்றியுள்ள தசைகளை வலுவாக்கலாம்.
அந்தவகையில் முதுகெலும்பை வலுவடைய செய்ய சில உடற் பயிற்சிகளை செய்தாலே போதும். தற்போது அந்த உடற்பயிற்சிகளை பார்ப்போம்.
பிரிட்ஜ் பயிற்சி ( Bridge exercise)
google
முழங்காலை மடித்தபடி, கால்களை லேசாக விலக்கி படுத்துக்கொள்ளவும். தோள்பட்டை தரையிலேயே இருக்க, முதுகு மற்றும் பின் பகுதியை உயர்த்தவும்.
ஐந்து நொடிகளுக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இது போல 10 முறை செய்யவும்.
மாற்று பஸ்கி
நாற்காலி அல்லது படுக்கை நுனியில் அமர்ந்து கொள்ளவும். கைகளை குறுக்கே வைத்துக்கொண்டு, தோள்பட்டையை தொடவும்.
கால்களால் தரையில் சமன் நிலைப் பெற்றபடி நுனிப்பகுதியில் இருந்து முன்னே சென்று தரையை நோக்கி அழுத்தவும்.
ஆனால் முதுகு மற்றும் கழுத்துப்பகுதி நேராக இருக்க வேண்டும். பின்னர் மெல்ல பழைய நிலைக்கு வந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவும். இதே போல 10 முறை செய்யவும்.
வயிற்றுக்குப்பயிற்சி
பாதம் தரையில் படும்படி முழங்காலை மடித்துக்கொண்டு படுத்துக்கொள்ளவும். வயிற்று தசைப்பகுதியை இறுக்கி கொண்டு, முகவாயை மார்பு பகுதி நோக்கி கொண்டு வந்து பக்கவாட்டில் உருளவும்.
உட்காரும் அளவுக்கு உருளாமல் இருக்க வேண்டும். ஐந்து நொடிகளுக்கு பிறகு பழைய நிலைக்கு வரவும். இதே போல 10 முறை செய்யவும்.
ஹிப் கிராஸோவர்
Google
முழங்காலை மடித்துக்கொண்டு, கால்கள் லேசாக விலகிய நிலையில் மேலே பார்த்தபடி படுத்துக்கொள்ளவும்.
வலது கணுக்காலை இடது முழங்கால் மேலே போட்டுக்கொள்ளவும். உங்கள் கைகளால் வலது முழங்காலை கைகளால் இடது தோள்பட்டை அருகே கொண்டு வர முயற்சிக்கவும். இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
இந்த நிலையில் இருந்து விடுபடும் முன் பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் நீட்சியை உணர வேண்டும். இதே போல ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று முறை செய்யவும்.
அப்டாமினல் பிரேசிங்
முழங்காலை படித்த படி படுத்துக்கொள்ளவும். வலது கையை நோக்கி இடது முழங்காலை கொண்டு வரவும்.
கைகளால் அழுத்தம் கொடுக்கவும். இந்த நிலையில் ஐந்து நொடிகள் இருக்கவும். வலது கை மற்றும் வலது முழங்காலில் இதே போல செய்யவும். ஒவ்வொரு பக்கமும் 10 முறை செய்யவும்.
…
முதுகெலும்பை வலுவாக்கணுமா? இந்த உடற்பயிற்சியை செய்திடுங்கSource link
இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை எளியமுறையில் கரைக்கனுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க இன்று பலரும் இடுப்பு பகுதியில் சதையை குறைக்க பெரும்பாடு பட்டு கொண்டு வருகின்றார்கள்.…
நுரையீரல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா? அப்போ தினமும் இந்த ஆசனங்களை செய்து பாருங்க நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில யோகாசனங்கள் உதவி புரிகின்றது. தற்போது எவை என்னவென்று…
தினமும் ஜாகிங் செல்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? வயது வித்தியாசமின்றி அனைவரும் மேற்கொள்ள ஏற்ற உடற்பயிற்சியில் ஒன்றுதான் மெல்லோட்டம் (Jogging) ஆகும். ஏனெனில் 30…
வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைத்து தட்டையான வயிற்றை பெறனுமா? இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்க இன்று பலரும் அவதிப்படும் தொப்பையை குறைக்க உடற்பயிற்சிகளே பெரிதும் உதவியாக இருக்கின்றது.…
சிறுநீரகம் சிறப்பாக இயங்க இந்த ஆசனத்தை மட்டும் செய்தாலே போதுமாம்! உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு. எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது…