- 1

மென்ஸ்சுரல் கப் வாங்குவதற்கு முன் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

182 0

மென்ஸ்சுரல் கப் வாங்குவதற்கு முன் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

​பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெரும்பாலான பெண்கள் சானிட்டரி நாப்கினே அதிகம் பயன்படுத்துவதுண்டு.

சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் போது சில மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றி கொண்டே இருக்க வேண்டும். இதனால் வெளியில் செல்லும் பெண்களுக்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகுவதுண்டு.

இவற்றுக்கு பதிலாக மென்ஸ்சுரல் கப்கள் தற்போது பெண்கள் மத்தியில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

ஏனெனில் இதனை குறைந்தது 10 மணித்தியாலங்கள் வைத்திருக்க முடியும். இருப்பினும் இதை பற்றி சில பெண்களுக்கு போதியளவு விழிப்புணர்வு இல்லை.

அந்தவகையில் மென்ஸ்சுரல் கப் வாங்கும்போது தெரிந்து வைத்து கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

எந்த அளவு பொருத்தமாக இருக்கும்?

மாதவிடாய் கப்கள் வாங்குவதற்கு முன்பு எந்த அளவு உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

சிறியது

நீங்கள் இன்னும் உங்க மாதவிடாய் காலங்களில் குறைந்த அல்லது நடுத்தர இரத்த போக்கை பெற்று இருந்தால் உங்களுக்கு சிறிய அளவு போதுமானது.

மீடியம்

உங்க வயது 20 மற்றும் 30 ஆக இருந்து இன்னமும் நீங்கள் குழந்தை பிரசவிக்க இல்லை என்றால் உங்களுக்கு மீடிய வடிவம் பொருத்தமாக இருக்கும்.

பெரிய அளவு

உங்க வயது 30 க்கு மேல் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்று இருந்தால் உங்க மாதவிடாய் காலங்களுக்கு பெரிய அளவு மாதவிடாய் கப் பொருத்தமாக இருக்கும். அதே மாதிரி உங்க மாதவிடாய் இரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால் பெரிய அளவை தேர்ந்தெடுங்கள்.

​உங்க குழப்பத்தை தீர்க்க வழிகள்

நீங்கள் முதன் முதலில் மாதவிடாய் கப்யை அணியும் போது நீங்கள் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. காரணம் அதை எப்படி அணிய வேண்டும் எப்போது ரிமூவ் செய்ய வேண்டும் போன்ற குழப்பங்கள் ஏற்படலாம்.

முதன்முறையாக அதைச் சொருகுவதும் பயன்படுத்துவதும் உங்களுக்கு கடினமான நேரத்தைத் தரும். ஆனால் சில முயற்சிகள் மற்றும் பயிற்சிகளுக்குப் பிறகு நீங்கள் அதை சீராக வைக்க முடியும்.

இது முற்றிலும் பாதுகாப்பானதா?

நீங்கள் ஒரு கப்பை பயன்படுத்தும் போது, ரத்தம் கப்பால் உறிஞ்சப்படுவதில்லை. மாறாக, அதில் சேகரிக்கப்பட்டு, மாதவிடாய் இரத்த போக்கு தடையில்லாமல் நடக்கும்.

மேலும், இது சிலிகானால் ஆனது, இது முற்றிலும் பாதுகாப்பானது. எனவே இது நச்சு அதிர்ச்சி நோய்க்குறியை ஏற்படுத்தாது.

இதில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பில்லை. எனவே நீங்கள் எந்தவொரு தொல்லையும் இல்லாமல் மாதவிடாய் காலங்களில் 10 மணி நேரம் வரைக் கூட மாதவிடாய் கப்களை நீங்கள் அணியலாம்.

மென்ஸ்சுரல் கப் வாங்குவதற்கு முன் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? Source link

Related Post

- 3

பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க

Posted by - ஜனவரி 25, 2021 0
பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உணவு மட்டும் போதாது சில குறிப்புகளையும் பின்பற்ற…
- 9

பெண்களே பி.சி.ஓ.டி பிரச்சினையால் அவதியா? இதை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க போதும்

Posted by - அக்டோபர் 20, 2020 0
பெண்களே பி.சி.ஓ.டி பிரச்சினையால் அவதியா? இதை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க போதும் பெண்கள் சிலருக்கு போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லையெனில் அது பி.சி.ஓ.டி என…
- 11

பெண்களே! ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்!

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே! ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்! இன்றைய காலத்தில் பல பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையிலிருந்து சிக்கி தவித்து வருகின்றார்கள். ஒழுங்கற்ற…
- 13

பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போவதற்கான ஏழு காரணங்கள் என்னென்ன தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போவதற்கான ஏழு காரணங்கள் என்னென்ன தெரியுமா? பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு இந்த பிரச்சினைகளை எப்படி…
- 15

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்! ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Posted by - ஜனவரி 21, 2021 0
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்! ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவதாக அதிகமாகவுள்ள புற்றுநோய் வகையாக கர்ப்பப்பை வாய்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன