மோடி அறிவித்த சேவைக்கு இப்படியொரு நிலையா..?

மோடி அறிவித்த சேவைக்கு இப்படியொரு நிலையா..?

NPCI அமைப்பு

NPCI அமைப்பு

NPCI அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஜனவரி மாதம் மட்டும் யூபிஐ தளத்தின் வாயிலாகப் பேடிஎம் நிறுவனம் சுமார் 221 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது, இதைத் தொடர்ந்து கூகிள் பே மற்றும் போன் பே ஆகிய நிறுவனங்கள் தலா 220 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது.

போன்பே

போன்பே

இதுகுறித்துப் போன்பே கூறுகையில் ஜனவரி மாதம் சுமார் 225 மில்லியன் பேமெண்ட்களின் வாயிலாகச் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் என்சிபிஐ அமைப்பு 220 மில்லியன் பணப் பரிமாற்றங்களை மட்டுமே செய்துள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யூபிஐ பரிமாற்றங்கள்

யூபிஐ பரிமாற்றங்கள்

இப்படி ஜனவரி மாதம் யூபிஐ வாயிலாக மொத்தம் 672 மில்லியன் பேமெண்ட்களைச் செய்யப்பட்டுள்ளது, இதுவே டிசம்பர் மாதம் 620 மில்லியன் பேமெண்ட்கள் மட்டுமே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

BHIM செயலியின் நிலை

BHIM செயலியின் நிலை

இதுவே BHIM செயலியின் வாயிலாக வெறும் 13.9 மில்லியன் பரிமாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, இது டிசம்பர் மாதத்தில் இதன் எண்ணிக்கை 17.06 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள்

டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள்

என்னதான் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்தாலும் தனிநபர் – தனிநபர் இடையிலான பரிமாற்றங்களே அதிகரித்து வருகிறது. வணிகர்கள் மத்தியிலான பரிமாற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்.

வணிகப் பணப் பரிமாற்றம்

வணிகப் பணப் பரிமாற்றம்

ஜனவரி மாதம் செய்யப்பட்ட மொத்த 672 யூபிஐ பரிமாற்றங்களில் வெறும் 100-120 மில்லியன் பரிமாற்றங்கள் மட்டுமே தனிநபர் – வணிகர்கள் மற்றும் வணிகர்கள்- வணிகர்கள் இடையில் நடந்துள்ளது.

மாபெரும் தோல்வி

மாபெரும் தோல்வி

இப்படிப்பார்க்கும் போது இந்தியாவில் அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் பணப் பரிமாற்ற புரட்சி அனைத்தும் வீண் ஆகியுள்ளது. ஏனெனில் இந்தியாவில் ஏற்கனவே தனிநபர்கள் இடையிலான பணப் பரிமாற்றங்கள் இணைய வங்கி வாயிலாக நடந்து வந்தவை தான்.

மோடி அறிவித்த சேவைக்கு இப்படியொரு நிலையா..?

VIew Source Page

Tags:

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: