ரம்ஜான் ஸ்பெஷல்: பட்டர் கீமா மசாலா

ரம்ஜான் ஸ்பெஷல்: பட்டர் கீமா மசாலா

பலருக்கும் கீமாவை எப்படி சமைப்பதென்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை கீமா கொண்டு செய்யப்படும் பட்டர் கீமா மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. மேலும் இந்த கீமா மசாலா சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும். ரசம் சாதத்திற்கும் இது சூப்பராக இருக்கும்.

அதிலும் ரம்ஜான் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ரமலான் மாத நோன்பு இருப்போர் மாலை வேளையில் செய்து சாப்பிடும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். சரி, இப்போது பட்டர் கீமா மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

கீமா – 1 கிலோ (நன்கு நீரில் அலசிக் கொள்ளவும்)

வெண்ணெய் – 1 கப்

தயிர் – 500 கிராம்

இஞ்சி பேஸ்ட் – 3 டீஸ்பூன்

பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்

வெங்காயம் – 3 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

கிராம்பு – 5-7

பட்டை – 1 இன்ச்

கருப்பு ஏலக்காய் – 2

பச்சை ஏலக்காய் – 2

பச்சை மிளகாய் – 6-7

பிரியாணி இலை – 2

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீமாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

பின் அதில் வெண்ணெயை சேர்த்து நன்கு பிரட்டி, மற்றொரு அடுப்பில் உள்ள வாணலியில் போட்டு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கீமாவை வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் தயிர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து கீமா தயிரை முற்றிலும் உறிஞ்சியதும், அடுப்பில் இருந்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பட்டர் கீமா மசாலா ரெடி!!!

Source link – Tamil Bold Sky

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: