வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சி தினமும் செய்யுங்க
இன்றைய காலத்தில் பலருக்கும் வயிற்று கொழுப்பை கரைப்பது என்பது ஒரு தலை அடியாகவே காணப்படுகின்றது.
அளவுக்கு அதிகமாக வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பு நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு, உயர் இரத்த சர்க்கரை, உயர் கொழுப்பு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான பல பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
எனவே இவற்றை ஆரம்பத்திலே கரைப்பது நல்லது. இதற்கு சில உடற்பயிற்சிகள் கூட உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
க்ரன்ச்செஸ் (Crunches)
க்ரன்ச்செஸ் என்று அழைக்கப்படும் உடற்பயிற்சி வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. இதை கொழுப்பைக் குறைக்கும் உடற்பயிற்சி என்று கூட அழைக்கலாம்.
தரையில் பாய் அல்லது துணியை விரித்து அதில் மல்லாக்க படுத்துக் கொள்ள வேண்டும். கால் முட்டிகளை மடக்கி வைத்து பாதங்கள் இரண்டையும் தரையில் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். பின் கைகள் இரண்டையும் தூக்கி நமது தலைக்குப் பின்புறம் வைக்க வேண்டும்.
கைகளை நெஞ்சில் குறுக்காகவும் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் இந்த உடற்பயிற்சியைச் செய்யும் போது நாம் எவ்வாறு மூச்சுவிடுகிறோம் என்பதைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.
இந்த உடற்பயிற்சி வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதோடு வயிற்றுத் தசைகளையும் வலுவாக்குகிறது.
நடைப்பயிற்சி
இதயத்தை நலமாக வைத்திருப்பதற்கு பெரிதும் உதவும் உடற்பயிற்சி நடைப்பயிற்சி ஆகும். நடைப்பயிற்சி வயிற்றுக் கொழுப்பைக் குறைத்து நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக சமச்சீரான உணவுப் பழக்கத்தோடு, நடைப்பயிற்சியையும் தொடர்ந்து செய்து வந்தால் கணிசமான அளவிற்கு கொழுப்பைக் குறைக்கலாம்.
சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் 30 நிமிடங்கள் தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால், அது வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்கும். அதோடு நமது வளர்சிதை மாற்றம் மற்றும் இதயத்துடிப்பையும் சீர்படுத்தும்.
ஜூம்பா (Zumba) நடனப்பயிற்சி
ஜூம்பா நடனப்பயிற்சி தீவிரமான பயிற்சிகளைக் கொண்டது. அது இதய நாளங்களை வலுப்படுத்துகிறது. வயிற்றுக் கொழுப்பு மற்றும் உயர் இரத்த சர்க்கரையின் அளவை விரைவாகக் குறைக்கிறது.
மிதிவண்டி ஓட்டுதல்
மிதிவண்டி ஓட்டுவது தொடைகள் மற்றும் இடுப்பு ஆகியவற்றின் எடையைக் குறைக்கிறது. ஆகவே வெளியில் செல்லும் போது இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மிதிவண்டியில் பயணம் செய்யலாம். மிதிவண்டியை தொடர்ந்து ஓட்டி வந்தால் பெரிய அளவில் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கலாம்.
வெர்டிக்கல் லெக் (Vertical leg) பயிற்சிகள்
முதலில் தரையில் மல்லாக்கப் படுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நமது உள்ளங்கைகளை இடுப்புக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது நமது கால்களை 90 டிகிரி அளவிற்கு நேராக கூரையை நோக்கி மெதுவாக உயர்த்த வேண்டும். கால் முட்டிகளை
சிறிது நேரம் கால்களை அப்படியே உயர்த்தி வைத்திருக்க வேண்டும். பின் மூச்சை விட்டுக் கொண்டே மெதுவாக கால்களைக் கீழிறக்க வேண்டும்.
திரும்பத் திரும்ப இந்த பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை சிறிது வேகமாகச் செய்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
ஏரோபிக்ஸ்/இசை நடனப்பயிற்சி (Aerobics)
உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்லாமல் வயிற்றுக் கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்த சிறந்த பயிற்சிகளாக இசை நடனப்பயிற்சிகள் அமைகின்றன.
இவை தீவிர உடற்பயிற்சிகளாகக் கருதப்படுகின்றன. ஆகவே இசையைத் தவழவிட்டு அதற்கு ஏற்ப நடனம் ஆடினால் அது நல்ல பலனைத் தரும்.
…
வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சி தினமும் செய்யுங்க Source link