வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைத்து தட்டையான வயிற்றை பெறனுமா? இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்க
இன்று பலரும் அவதிப்படும் தொப்பையை குறைக்க உடற்பயிற்சிகளே பெரிதும் உதவியாக இருக்கின்றது.
ஏனெனில் உடற்பயிற்சி உங்கள் தொப்பையில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும்.
தொடர்ந்து செய்யும் போது நீங்களே அசரும் வகையில் தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறைந்து தட்டையான வயிற்றை பெறுவீர்கள்
அந்தவகையில் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைத்து தட்டையான வயிற்றை பெற எத்தனையோ உடற்பயிற்சிகள் உள்ளது.
அதில் வாக்யூம் என்ற உடற்பயிற்சி உதவி புரிகின்றறது. தற்போது அந்த உடற்பயிற்சியை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

- முதலில் எழுந்து நின்று உங்கள் இடுப்பில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு ஆழ்ந்த சுவாசத்தை இழுத்து நுரையீரல் முழுவதும் காற்றை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் இதே நிலையில் நிற்க வேண்டும்.
- பிறகு 60 விநாடிகள் உங்கள் வயிற்றை உள் நோக்கி இழுத்து பிடிக்க வேண்டும். அப்பொழுது சிறிய சுவாசங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதைச் செய்யும் போது உங்கள் வயிற்று தசைகளை தளர்த்த கூடாது.
- மெதுவாக சுவாசித்து கொண்டே உங்க தொப்புள் முதுகெலும்பை தெடுகிற மாதிரி வயிற்றை உள் நோக்கி இழுத்துப் பிடிக்க வேண்டும். நீங்கள் செய்து வர செய்து வர சரி ஆகி விடும்.
- பிறகு வயிற்று தசைகளை தளர்த்தி பழைய நிலைக்கு வாருங்கள். பிறகு ஒரு ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொண்டு மறுபடியும் நுரையீரல் முழுவதும் காற்றை நிரப்பி கொள்ளுங்கள்.
- மறுபடியும் வயிற்றை உள்நோக்கி பிடித்து மெதுவாக சுவாசித்துக் கொள்ளுங்கள். இப்படியே பலமுறை செய்து வாருங்கள்.
- வாக்யூம் உடற்பயிற்சியை ஒரு வாரத்தில் 3 நாளைக்கு 3 தடவை செய்து வந்தால் நல்ல தட்டையான வயிற்றை பெற முடியும்.
…
வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைத்து தட்டையான வயிற்றை பெறனுமா? இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்க Source link