வாழ்க்கை தத்துவங்கள்

வாழ்க்கை தத்துவங்கள் உங்களுக்காக

2503 0

வாழ்க்கை தத்துவங்கள்

வாழ்க்கை தத்துவங்கள் அப்படினா ஏதோ மந்திரம், கடவுள் சொன்ன வார்த்தைகள் அப்படினு எதிர்பாகக்காதீங்க, எந்த சிந்தனை உங்களை மனிதனாக, பிறருக்கு இடையூறு செய்யாமல் வாழ வழிவகை செய்யுமோ  அந்த சிந்தனையை தூண்டும் வார்த்தைகளே வாழ்க்கை தத்துவம் (அ) வாழ்க்கை தத்துவங்கள்.

அப்படிபட்ட சில வாழ்க்கை தத்துவங்கள் (தத்துவ வார்த்தைகளை) இனி பார்ப்போம்.  

உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்…. ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!

 • ஒருவனின் வார்த்தை தரும் வலியை விட அவன் செய்யும் செயலின் வலி அதிகம்.
 • அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.

உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே….!

 • ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது..

Periyar Quotes Tamil - தத்துவம்

 • ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் அது சரி தப்பு என்று முடிவு எடுத்து விடுகிறோம். அதை நாம் எப்போது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை அப்படி நாம் ஆராய்ந்து பார்த்து விட்டால் சந்தேகங்கள் மனிதர் இடையே தோன்றாது.

ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்துகொண்டுதான் இருக்கிறது.அதை முட்டாள்கள் கண்களிலும்,அறிவாளிகள் புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள்.

 • இழப்பு அல்லது பிரிவின்றி எவரும் ஒன்றின் அருமையை உணருவதில்லை.
 • ஆயிரம் பேரின் கண்கள் உன்னை எரித்து நோக்கினாலும் இரு கண்கள் மட்டுமே என்றும் உன்னை அன்பாக நோக்கும் – அம்மா.
 • ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது.
 • போகும்போதே என்னை ரசித்துகொண்டே போ, திரும்பி வரமாட்டேன்உனக்காக. இப்படிக்கு – வாழ்க்கை.

 சிந்தனை செய், கோபப்படாதே. வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை. அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட்டு போ.

 • வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல,நீ மற்றவர்கள் மனதில் வாழும்வரை.
 •  தனிமை கொஞ்சம் வித்தியாசமானது.நாமே அதை எடுத்துக்கொண்டால் அதுஇனிக்கும், மற்றவர்கள் நமக்கு அதைகொடுத்தால் கசக்கும்.
 • தவறே செய்யாத மனிதன் இல்லை,தவறை திருத்திக் கொள்ளாதவன்மனிதனே இல்லை.

வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பைகேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம்கற்றுக்கொண்டால்.

 • மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச்சிறந்த வக்கீலாகவும், பிறர் செய்ததவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும்இருக்க விரும்புகிறான்.
 • அழும்போது தனிமையில் அழு,சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி;கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்,தனிமையில் சிரித்தால் பைத்தியம்என்பார்கள்.
 • நல்லவனாய் இரு. ஆனால் அதைநிருபிக்க முயற்சி செய்யாதே. அதை விடமுட்டாள்தனமான விஷயம்எதுவுமில்லை.

வாழ்க்கை தத்துவம் - பெரியார்

வாழ்க்கை தத்துவம்

வாழ்க்கையில் பெறவேண்டிய பதினாறுபேறுகள்:

 1. புகழ்.
 2. கல்வி.
 3. வலிமை.
 4. வெற்றி.
 5. நன்மக்கள்.
 6. பொன்.
 7. நெல்.
 8. நல்விதி.
 9. நுகர்ச்சி.
 10. அறிவு.
 11. அழகு.
 12. பெருமை.
 13. இனிமை.
 14. துணிவு.
 15. நோயின்மை.
 16. நீண்ட ஆயுள்.

Periyar Ponmozhigal

வாழ்க்கை தத்துவம்

மௌனத்தில் வார்த்தைகளையும்,கோபத்தில் அன்பையும்உணர்ந்துகொள்வது தான் உறவு; புரிதல்இருந்தால் பிரிதல் இல்லை.

 • கெட்டவனாக இருந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பதைவிட.. நல்லவனாய் இருந்து கெட்ட பெயர் எடுப்பது எவ்வளவோ மேல்..
 • கடல் எல்லையைத் தாண்டினால் நிலம் அழிந்துவிடும். உன் எல்லையத் தாண்டினால் நீ அழிந்து விடுவாய்.

தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை தனயன்(மகன்) வழிதவறான். தாயின் அன்பு இல்லையானால் தனபதியாய்(குபேரன்) இருந்தும் பயன் இல்லை. சகோதரர் துணையிருப்பின் ஒரு போதும் தனியன்(தனித்த ஆள்) ஆகான்.

 • வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்
 • வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்
 • வாழப் போறவனுக்கு மனம் பதில் சொல்லும்.

கண்ணை மூடும் போது தூங்குகிறோம். கண்ணைத் திறக்கும் போது எழுகிறோம். அது போல் விழுகிற போது எழுந்துவிடு எழும் போது விழுவது சகஜம் அதற்காக விழுந்த படியே இருந்து விடாதே..

 • குறை உடலில் இருந்தால் அதை நீ பொருட்ப்படுத்தாதே. உள்ளத்தில் உள்ளதா முதல் அதை நிவர்த்தி செய்து விடு நீ உன்னை நேசிப்பாய் பின் மற்றவர்கள் உன்னை நேசிப்பர்.

உனக்கு ஒரு பொருள் பிடித்திருந்தால் உன் பெற்றோரைத் தானே முதல் கேட்க்கிறாய்.. என் நீ வளர்ந்த பிறகு அவர்களிடம் கேட்பதை விட்டு உன்வழி போகிறாய். நீயும் ஒரு நாள் பெற்றோர் ஆவாய் என்பதை மறந்து விட்டாயோ?

 • நம்பிக்கை நற்கனவை நனவாக்கிவிடும். அவநம்பிக்கை உன் வாழ்க்கையையே கனவாக்கிவிடும்
 • ஒருவரின் அன்பு பற்றி நீ அறிய வேண்டுமா.. ஒரு முறை பிரிவை சந்தித்து விடு…
 • பொய்யை அறிந்து கொள்வதை விட உண்மையை அறிந்து கொள்வது இலகு.

தோல்வி ஏற்ப்படின் தோற்று விட்டோமே என்று எண்ணாதே நீ ஒரு நாள் வென்று விடுவாய், ஆனால் நேரத்தை வீணாக்காதே அது உன் தோல்வியை பல மடங்கு அதிகரித்து விடும்.

 • உனது பொறுமையே உன் வயதினை சித்தரிக்கும்..
 • அழுவதற்கு எனக்கு மனம் இல்லை காரணம் நான் அழுதால் என் தாய் அழுது விடுவாளே என்று..
 • வாழ்க்கையில எவ்வளவு தான் உச்சிக்கு போனாலும் கடைசில ஒரு பெட்டிக்குள் தான் முடியும்.
 • படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும் இழக்கத் தயாராக இருங்கள். எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை இழக்கத் தயாராகி விடாதீர்கள்!
 • கலகலப்பாய் இருங்கள் வேண்டாம் என்று ஒரு போதும் உங்களுக்கு சொல்லவில்லை ஆனால் மற்றவனை கலங்கப்படுத்தாது இருங்கள்

நாம் எப்போதும் மேலே போகும் விமானத்தை அண்ணார்ந்து பார்த்து கழுத்தை நோக வைப்பதை விட நேரே பார்த்து எமது முன்னேற்றத்தை பார்த்திருந்தால் என்றோ வாழ்க்கையில் முன்னேறியிருப்போம். இது மேல் அண்ணார்ந்து பார்க்கும் விமானத்துக்கு மட்டும் அல்ல அடுத்தவனை பார்த்து செய்வதற்கும் பொருந்தும்…

 • எதையும் தூரத்தில் இருந்து பார்த்து நம்பாதீர்கள்….அங்கே என்ன நடக்குது என்ன நடந்தது என்று தெரியாமல் கதைக்காதீர்கள்….  இதுக்கு தான் சொல்வார்கள் காதால் கேட்பதும் பொய் கண்ணால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று..
 • கடன் கொடுங்கள் அதை திரும்பப் பெற்று விடுவீர்கள் ஆனால் களவு கொடுத்து விடாதீர்கள் அதை திரும்பப் பெற முடியாது…
 • அனைவரையும் நேசி, சிலரை மட்டும்நம்பு, ஒருவரை பின்பற்று, ஆனால்ஒவ்வொருவரிடம் இருந்து கற்றுக்கொள்.
 • இருளைத் தூற்றுவதற்குப் பதில் அகலை ஏற்றுங்கள். (பிறரை குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட நீ உருப்படியாக ஏதாவது செய்.)

வீரனைப் போரிலும், யோக்கியனை கடனிலும், மனைவியை வறுமையிலும், நண்பனை கஷ்டகாலத்திலும்அறிந்துகொள்ளலாம்.

 • பணத்தின் உண்மையான மதிப்புபிறரிடம் கடன் கேட்கும்போதுதான்தெரியும்.
 • கீழே விழாமல் இருப்பதுபெருமையில்லை, விழுந்தபொழுதெல்லாம் எழுந்திருப்பதேபெருமை.
 • இதயத்தால் காதல் கொள், கண்களால்அல்ல.

படிக்க வேண்டிய புத்தகம்

மின் புத்தகம் வாங்க 

 

நம்மை உயர்த்தும் 7 தத்துவங்கள்

 1. ஏழ்மையிலும் நேர்மை.
 2. கோபத்திலும் பொறுமை.
 3. தோல்வியிலும் விடாமுயற்சி.
 4. வறுமையிலும் உதவி செய்யும்மனம்.
 5. துன்பத்திலும் துணிவு.
 6. செல்வத்திலும் எளிமை.
 7. பதவியிலும் பணிவு.

உங்களுக்காக இன்னும் சில பதிவுகள்:

 

Related Post

இராசகோபாலாச்சாரி பொன்மொழிகள்

இராசகோபாலாச்சாரி பொன்மொழிகள்

Posted by - ஜூலை 4, 2020 0
இராசகோபாலாச்சாரி இராசகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 – 25 திசம்பர் 1972),தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில்…
அண்ணாதுரை பொன்மொழிகள்

அண்ணாதுரை பொன்மொழிகள்

Posted by - ஜூலை 5, 2020 0
அண்ணாதுரை பொன்மொழிகள் அண்ணாதுரை பொன்மொழிகள்: ஒன்றே குலம், ஒருவனே தேவன். அறிஞர் அண்ணாதுரை அறிஞர் அண்ணா என அறியப்படும் சி. என். அண்ணாத்துரை தமிழக அரசியல்வாதியும் அறிஞரும்…
தந்தை பெரியார் பொன்மொழிகள் - இந்து

பெரியார் பொன்மொழிகள் – சாதி, மதம், கடவுள் பற்றி…

Posted by - ஜூன் 11, 2020 0
தந்தை பெரியார் பொன்மொழிகள் தந்தை பெரியார் பொன்மொழிகள் (Thanthai Periyar Ponmozhigal) அனைத்தும் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமானவை குறிப்பாக தமிழத்தில். இவர் பல துறைகள் தலைப்புகள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன