வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனைவி! பலருக்கும் நம்பிக்கை தரும் செய்தி
வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன், அவர் மனைவியை கண்டவுடன் அப்படியே இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி நின்றுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்து போன்றவை நிறுத்தப்பட்டது.
நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் Darren Hunt(43) என்பவர் மாட்டிக் கொண்டார்.
இதையடுத்து தற்போது வீடு திரும்பிய(கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் கழித்து) அவர், தன் மனைவியைப் பார்த்து, இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
ஏனெனில் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருந்த தன் மனைவியாக இது? என்ற ஆச்சரியமுடன் இருந்தார். Darren Hunt இது குறித்து கூறுகையில், வீட்டிற்கு திரும்புவதில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன்.
ஆனால், அங்கு எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. என் மனைவி அப்படியே ஆள் மாறி போய் இருந்தாள். Darren Hunt மனைவியான, Abigail பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
Abigail(44) தன் உடல் எடை குறைப்பு குறித்து கூறுகையில், இந்த நேரம் சிலருக்கு மிகவும் மன அழுத்தமான நேரமாக இருந்தது.
அதே போன்று தான் எனக்கும், இதனால் நான் என்ன செய்ய வேண்டும் நினைத்தேன். அப்போது, ஊரடங்கின் துவக்கத்தில், என் உடல் மாறுவதையும் என் உடல்நலம் மேம்படுவதையும் உணர முடிந்தது.
நான் எங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட உடற்பயிற்சியைப் பயன்படுத்த முடிவு செய்தேன். தொடர்ந்து நடைப்பயணத்தை மேற்கொண்டேன்.
உடல் எடைகளினால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்காக, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி அவசியம் என்பதை உறுதி செய்தேன்.
ஒவ்வொரு உணவையும் எனக்கு சாதகமானதாக மாற்றிக் கொண்டேன். இந்த நேரத்தில் என் குடும்பம் எனக்கு பின்னால் இருந்தது, எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தனர்.
மேலும், எனக்கு மிக உயர்ந்த இரத்த அழுத்தம் இருந்தது. இதன் விளைவாக எனக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது.
நான் மிகவும் கனமாக இருந்ததால், எழுந்து நிற்கும்போது என் மூட்டுகள் வலிக்கும், எப்போதும் முன்னோக்கி சாய்ந்திருப்பது, என்பது எனக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது.
இப்போது ஆரோக்கியமுடன், தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடுவதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
இவர் தன்னுடைய எடையை இந்த காலக்கட்டத்தில், 40 கிலோவுக்கு மேல் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இருக்கும் ஊரடங்கில் மன அழுத்தம் காரணமாக பலரும் சில அவசியமில்லாத முடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் இந்த ஊரடங்கை நாம் இப்படியும் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை தரும் விஷயத்தை Abigail நினைவுபடுத்தியுள்ளார் என்பது தான் உண்மை.
…
வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனைவி! பலருக்கும் நம்பிக்கை தரும் செய்தி Source link