வெள்ளைப்படுதலா? பெண்களே! கவலை விடுங்க..இதனை சரி செய்ய இதோ சில குறிப்புக்கள்
பொதுவாக பெண் உறுப்பில் இருந்து ஒருவித வெள்ளைநிறத்தில் திரவம் போன்று வெளியேறு தான் வெள்ளைப்படுதல்.
இது சாம்பல், வெள்ளை, பச்சை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் வெளியேறும். இது அதிகப்படியாக வெளியேறும் போது அதிகப்படியாக உடலை பலவீனமாக்கும் மேலும் நோய் தொற்றுக்களை அதிகரிக்கும். எனவே இதற்கு சிகிச்சையளிப்பது மிக முக்கியமாகும்.
லேசான வெளியேற்றம் உள்ளவர்களுக்கு சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினாலே போதும். இந்த வைத்தியங்கள் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது.
அந்தவகையில் தற்போது அந்த வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- தண்ணீரில் வேகவைத்த வெந்தயமானது வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்கிறது. 500 மி.லி வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து நீர் குளிர்ந்த பிறகு குடிக்கலாம்.
- வெண்டைக்காயை தண்ணீரில் கொதிக்கவைத்து பிறகு மிக்சியில் அரைக்கவும். சிலர் வெண்டைக்காயை தயிரில் ஊற வைத்து கூட உண்கின்றனர்.
- சில கொத்தமல்லி விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது வெள்ளைப்படுதலுக்கு நல்ல சிகிச்சை முறையாகும்.
- நெல்லிக்காய்கள் வெள்ளைப்படுதலுக்கு நல்ல மருந்தாகும். எனவே நெல்லிக்காயை உண்பவர்கள் அதை தூளாகவோ அல்லது சாறு செய்தோ எப்படி வேண்டுமானாலும் உண்ணலாம்.
- துளசியை தண்ணீரில் அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம். இந்த பானத்தை தினமும் இரண்டு முறை சாப்பிடுவதன் மூலம் வெள்ளைப்படுதலை சரி செய்ய முடியும். துளசியை பாலுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
- வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்ய வேகவைத்த அரிசியின் நீரை தொடர்ந்து குடிக்கலாம். இது வெள்ளைப்படுதலுக்கு எதிராக சிறப்பாக செயல்ப்படுகிறது.
- பிறப்புறுப்பில் அரிப்புடன் கூடிய வெளியேற்றம் இருந்தால், அதற்கு கொய்யா இலை சரியான மருந்தாக இருக்கும். கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அது குளிர்ந்த பிறகு குடிக்கலாம். இவ்வாறு தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.
…
வெள்ளைப்படுதலா? பெண்களே! கவலை விடுங்க..இதனை சரி செய்ய இதோ சில குறிப்புக்கள் Source link