வெள்ளைப்படுதல் பிரச்சினையால் அவதியா? பெண்களே இந்த எளிய வழிமுறையை பின்பற்றுங்க!
பூப்பெய்த பெண்களுக்கு பொதுவாக பெண் உறுப்பிலிருந்து அடர்த்தியான வெள்ளை திரவம் வெளிப்படும். இதனை வெள்ளைபடுதல் என்று அழைக்கப்படுகின்றது.
பெண் உறுப்பில் இருக்கும் கழிவுகள் இயற்கையான முறையில் வெளிவருவது தான் இந்த வெள்ளை படுதல். இது குறைந்த அளவாக இருக்கும் வரை சாதாரணமான ஒரு செயல் பாடுதான் இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது சிறந்ததாகும்.
அதிலும் சில உணவுப்பொருட்களின் மூலமாகவே, வெள்ளைப்படுதல் அதிகமாகாமல் குணப்படுத்த முடியும்.
தற்போது அது எந்தஎந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதிக அளவிலான வெள்ளைப்படுதல் சரியாகும். ஜீரணக் கோளாறுகளும் உங்களை நெருங்கவே முடியாது.
- ஒரு ஸ்பூன் இஞ்சிப் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வேண்டும். அது ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வடிகட்டி குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையை மிக விரைவாகத் தீர்க்க முடியும்.
- பத்து கெய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு கொதித்தபின் வடிகட்டி, குளிர வைக்கவும். அந்த தண்ணீரைக் கொண்டு, பிறப்புறுப்பைக் கழுவினாலும் வெள்ளைப்படுதல் குறையும்.
- தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வருவது கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதோடு, ஒரு கைப்பிடியளவு மாதுளை இலைகளை அரைத்து இரண்டு கிளாஸ் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொண்டு, அதனுடன் மிளகுப்பொடியைச் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வரவும்.
- வெண்டைக்காயை எடுத்துக் கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, குடித்து வர வெள்ளைப்படுதல் நிற்கும். வெண்டைக்காய் வேக வைத்த தண்ணீர் மிகவும் வழவழப்பாக இருக்குமாதலால், சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
…
வெள்ளைப்படுதல் பிரச்சினையால் அவதியா? பெண்களே இந்த எளிய வழிமுறையை பின்பற்றுங்க! Source link