வெள்ளை படுதல் – பெண்களே இந்த ஆடைகளை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்! தீர்வுகள்
பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளை படுதல் பிரச்னை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும் வந்த பிறகும் வெள்ளைப்படுதல் வரும். இது இயல்புதான். சிலருக்கு எப்போதுமே வெள்ளை படுதல் பிரச்னை இருக்கும்.
வெள்ளை படுதல் அதிகமாகவோ, அரிப்பு எடுத்தாலோ, துர்நாற்றம் அடித்தாலோ, நிறம் மாறி இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். இந்த பிரச்னைகளுக்கு வீட்டு வைத்திய முறைகளும் நல்ல பலன்களை அளிக்கும். மேலும் பெண்கள் சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
இந்த பிரச்னைக்கு தீர்வு தரம் சில வழிகள்
- மிகவும் இறுக்கமான உடைகளை அணிவதைக் கட்டாயமாக நிறுத்தி கொள்ளுங்கள்.
- லெக்கிங்ஸ், ஜெக்கிங்ஸ், டைட்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம்.
- சிந்தட்டிக் உள்ளாடையை அவசியம் தவிருங்கள்.
- தளர்வான, காற்றோட்டமான பருத்தி உள்ளாடையை அணியுங்கள்.
- முடிந்தவரை இண்டியன் டாய்லெட் பயன்படுத்துங்கள்.
- வெந்நீரில் குளிக்க கூடாது. வெந்நீரை அந்தரங்க உறுப்புகளில் ஊற்றி கழுவ கூடாது. இதனால் நல்ல பாக்டீரியாகூட நீங்கிவிடும். இளஞ்சூடாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் உண்ண கூடாது.
- வாசம் மிகுந்த சோப், சானிடரி நாப்கின், பவுடர் போட கூடாது.
- 3 மணி நேரத்துக்கு ஒரு முறை சானிடரி நாப்கின் மாற்றுங்கள்.
வீட்டு வைத்தியம்
- எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகியவற்றை ஜூஸாக குடித்து வரலாம். சாத்துக்குடி, ஆரஞ்சு பழத்தை பழமாகவும் சாப்பிட்டு வரலாம். விட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடன்டும் பாக்டீரியாவின் வளர்ச்சியை அழித்துவிடும். அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றத்தை இந்தப் பழங்கள் போக்கும்.
- ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் எல்லாக் கிருமிகளும் நீங்கிவிடும்.
- ஆலிவ் எண்ணெய் கலந்த பழ சாலட்டை சாப்பிடுங்கள்.
- தினமும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் 48 நாட்களிலே முழுமையான குணம் கிடைக்கும்.
- இந்த அன்னாசி பூ ஒன்றை எடுத்து, இடித்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விட்டு பின்னர் வடிகட்டி அருந்துங்கள்.
…
வெள்ளை படுதல் – பெண்களே இந்த ஆடைகளை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்! தீர்வுகள் Source link