19. நான் மாடக் கூடல் ஆன படலம்

131 0

திருவிளையாடற்
புராணம்

19. நான் மாடக் கூடல் ஆன படலம்19. நான் மாடக் கூடல் ஆன படலம்

கடல் வற்றிப் போனாலும் செயல் வற்றாத வருணன் ஒரு கை பார்த்து விடுவது என்று தீர்மானித்து ஏழு மேகங்களையும் அழைத்து “மதுரை அழிந்து போகும் வரை சூழ்ந்து பெய்க” என்று கட்டளை இட்டான். மழை விடாது பெய்து மதுரையை நீர் சூழச்செய்து அவர்கள் வாழ்க்கையைச்சின்ன பின்னப்படுத்தியது. நகர மக்களும் நாட்டு அரசனும் சோமசுந்தரரை அணுகித் தம்மைக் காத்தருளுமாறு வேண்டினர்.

இறைவன் தன் முடி மீது தவழ்ந்து கிடந்த மேகங்கள் நான்கினை விளித்து மறுபடியும் நீர் சென்று நான்கு மாடங்களாக மதுரைக்கு மூடியாக அமைந்து தண்ணீர் கொட்டாதவாறு தடுக்கவேண்டும்” என்றான். நான்கு மேகங்கள் மாடங்களாக அமைந்து அங்கு ஒரு சேரக் கூடியதால் அந்நகருக்கு ‘நான் மாடக்கூடல்’ என்ற பெயரும் வழங்குவது ஆயிற்று.

மேகங்கள் நான்கைக் கொண்டு மதுரையைக் காத்தான். இடியும் மின்னலும் கொண்டு தாக்கிய போதும் ஒரு சொட்டுத் தண்ணீரும் உள் நுழையாமல் மேகங்கள் பாய் விரித்தது போலப் படிந்து காத்தன. கடல் ஏழும் முழுகி வயிறாரப் பருகி இங்கே வந்து கொட்டிய அவ்வளவு நீரும் மலைக்கற்களில் பெய்த அலைகள் ஆயின. உடற் பருத்துக் கறுத்து வந்த மேகங்கள் எல்லாம் மெலிந்து நலிந்து வெளுத்துவிட்டன. ஆணையை நிறைவேற்ற முடியாமல் புதுமணப் பெண்போல வெட்கித் தலை சாய்ந்து வருணன் முன் நின்றன. விதவைக் கோலத்தில் வந்த மேகங்களைக் கண்டு வருணனும் சினம் அடங்கிவேறுவழி இன்றிச் சிவனிடம்வந்து சரண் அடைந்தான். தன் ஆணவத்தால் அறிவு கெட்டு இந்த அவல நிலைக்கு ஆளானதை வருணன் உணர்ந்து வானத்து வீதியில் சென்று ஈசனைத் தரிசித்து மன்னிக்கும்படி வேண்டினான்.

இரக்கமே உருவான இறைவன் அவனை மன்னித்து “உனக்கு என்ன வேண்டும்?” என்று வினவினார். தான் மிரட்டித் தன் வயிற்று நோயைத் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கருதி அதனால் ஏழு மேகங்களை விரட்டி இங்கு அனுப்பியதாக உரைத்தான். சூலை நோய் தந்து நாவுக்கரசரை ஆட்கொண்ட சிவபெருமான் வருணனின் வயிற்று நோயைத் தீர்த்துக் கொடுத்தார். ஆணவம் நீங்கி அடக்கம் மேற்கொண்டு இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு ஏனைய மேகங்களை விடுவித்துக்கொண்டு தன் கடலை இருப்பிடமாக அடைந்தான்.


19. நான் மாடக் கூடல் ஆன படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் 55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் தமிழ்ச் சங்கம் முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம்…

27. அங்கம் வெட்டின படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 27. அங்கம் வெட்டின படலம் 27. அங்கம் வெட்டின படலம் இதுவும் குலோத்துங்க சோழன் காலத்து நிகழ்ச்சியாகும். பரதேசி ஒருவன் மதுரைக்கு வந்து சுதேசி…

16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் 16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் வேதம் என்ற சொல் “வித்யா” என்ற பொருளுடையது.…

40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம்  40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம் வரகுணபாண்டியன் நல்லாட்சி செய்து நாட்டைக் காத்து வந்தான். வேட்டை…

திருவிளையாடற் புராணம்1. இந்திரன் பழி தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் திருவிளையாடற் புராணம்1. இந்திரன் பழி தீர்த்த படலம்  திருவிளையாடற் புராணம் 1. இந்திரன் பழி தீர்த்த படலம் சசியைப் பெற்று சாயுச்ய பதவி…

உங்கள் கருத்தை இடுக...