10. மலையத்துவசனை அழைத்த படலம்

351 0

திருவிளையாடற்
புராணம்

10. மலையத்துவசனை அழைத்த படலம்

10. மலையத்துவசனை அழைத்த படலம்

சுந்தரபாண்டியனாகிய சோமசுந்தரர் தடாதகைப் பிராட்டியை அழைத்துக் கொண்டு ஏழுகடல் வந்து குவிந்த வாவியின் கரையிலே அழகிய சோலையில் இருந்து கொண்டு அடுத்துச் செய்ய வேண்டுவது குறித்துப் பேசினார். தீர்த்த மேன்மை அறிந்து அன்னை காஞ்சனைக்காக அழகுற நிரப்பிய கடல் நீரில் வந்து குளித்துப் பயன் பெறுமாறு சுந்தரர் கூற அவ்வாறே காஞ்சனை அம்மையை வாவிக்கரைக்குத் தடாதகை அழைத்து வந்தாள்.

குளித்துக் களித்து மகிழ அவள் அங்கு வரவில்லை; சாத்திரப்படி அதில் முழுகி நற்பயன் பெறவே அங்கு வந்திருந்தாள். சடங்குகள் அறிந்துசொல்வதில் சதுரர்கள் ஆகிய புராண நூல் கேள்வியர் தம்மை நோக்கிக் கடல் நீர் குடைந்திடும் கடமைகள் யாவை எனக் கேட்க விதிமுறை அறிந்த அந்த வேதியர்கள் “மாசற்ற கற்பினாய்! மகிழ்நன், பெற்ற மகள் இவர்கள் கைத்தலம் அல்லது கன்றின் வால் இம்மூன்றுள் ஒன்றைப் பற்றிக் கொண்டே கடல் நீராடுதல் மரபு” என்று ஓதினர்.

“கைப்பிடித்த கணவனும் இல்லை; பெற்று வளர்த்த மகளும் இல்லை; கன்றின் வால் தான் எனக்குக் கிடைத்தது. இது விதியின் செயல் என்று தன் கதியை எடுத்துக் கூறிக் கதறினாள். தடாதகை தன்னுயிர்த் தலைவனை அடைந்து பணிந்து தன் அன்னையின் குறையை எடுத்து உரைக்கத் தென்னவனைக் கொணர்வதற்கு அவர் சிந்தனையுள் ஆழ்ந்தார். அவன் வரவேண்டும் என நினைத்த அளவில் மலையத்துவசன் மண் நோக்கி விண்ணிலிருந்து விரைவாக விமானத்தில் வந்து இறங்கினான்; கண் நிறைந்த அழகனாகிய சுந்தரனைக் கண்டு தழுவித் தன் அன்பைக் காட்டத் துடிதுடித்தான். இறைவனும் தன் மாமனைச் சந்தித்துத் தோள்களில் தழுவிக் கொண்டு பின் அருகு அவனை அமர்த்தினார்.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? மணப் பெண் போல நாணி அவன் முன்னே வந்து நின்றாள்.

மகளின் மணத்தைக் காண நீர்வரவில்லையே” என்றாள்.
“அழைப்பும் ஆண்டவன் அருளும் அன்று கிடைக்க வில்லை” என்றான்.
“தவத்தின் பேறு அடைய நீர் பூதலத்துக்கு வந்தது என் பேறு” என்றாள்.
“கைப்பிடித்துக் கடலில் முழுகுவோம்” என்று கூறி இருவரும் நீரில் மூழ்கினர்.

வேதியர்கள் ஐந்தெழுத்து மந்திரம் சொல்லி மறை நூல் விதிப்படி சடங்குகள் செய்ய இருவரும் கடலில் நீர் ஆடினர்.

மலையத்துவசனும் காஞ்சனையும் புதுப்பிறவி பெற்றது போல் கரை ஏறிக் கறை நீங்கி இறை வடிவம் பெற்றனர். மானுட வடிவம் மாறித் தெய்வ வடிவம் பெற்றுவிட்டனர். அவர்களை அழைத்துச் செல்லத் தெய்வ விமானம் வந்து நின்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவனை வணங்கிவிட்டு விடை பெற்றவராய் விண்ணுலகம் அடைந்தனர். .
புவ லோகம், சுவர்க்கலோகம், மகர்லோகம், சனக லோகம், தவலோகம் சத்தியலோகம் வைகுந்தம் இவற்றைக் கடந்து தலைமைமிக்க சிவலோகத்தை அடைந்தனர்.

கணவனை இழந்தவர்க்குக் காட்டுவது இல்லை என்று சிலப்பதிகாரம் கூறும், கைம்மை நோன்பு நோற்ற காஞ்சனை கணவனின் கரம் பற்றி இறைவன் திருவடி நிழலை அடைந்து அமர வாழ்வைப் பெற்றாள்.


10. மலையத்துவசனை அழைத்த படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

5 . திருமணப்படலம் உலகம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 5 . திருமணப்படலம் உலகம் 5 . திருமணப்படலம் உலகம் ஈன்ற தாயாகிய உமையம்மை இளங்குழவியாகித் தடாதகைப் பிராட்டி என்ற பெயரோடு அரசு பட்டம்…

30. மெய்க் காட்டிட்ட படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 30. மெய்க் காட்டிட்ட படலம் 30. மெய்க் காட்டிட்ட படலம் குணபூடண பாண்டியனுக்கு நம்பிக்கை மிக்க சேனைத் தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர்…

42. திருமுகங் கொடுத்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 42. திருமுகங் கொடுத்த படலம் 42. திருமுகங் கொடுத்த படலம் இறைவன் விறகு வெட்டியாக வந்து பாணபத்திரனுக்கு அருள் செய்தமையின் இறைவனையே பாடும் தொழிலை…

9 . எழுகடல் அழைத்த படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 9 . எழுகடல் அழைத்த படலம் 9 . எழுகடல் அழைத்த படலம் நாட்டுக்கு அரசனாக உலகை ஆட்டுவிக்கும் இறைவன் இருந்து ஆட்சி செய்து…

50. சுந்தரப் பேரம்பு எய்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 50. சுந்தரப் பேரம்பு எய்த படலம் 50. சுந்தரப் பேரம்பு எய்த படலம் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் அவ்வப்பொழுது போர்கள் மூண்டன. பாண்டியர்கள் கோயில் திருப்பணிகளில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot dana
  21. harum4d slot