5 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 10 மாத குழந்தை

1161 0

10 மாத குழந்தை வளர்ப்பு

10 மாத குழந்தை வளர்ப்பு

உங்கள் குழந்தைக்கு  எந்தத் திட உணவு சிறந்தது?

உங்கள் குழந்தையால் வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியும்!

எளிமையான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் உங்கள் குழந்தை புரிந்துகொள்ளத் தொடங்குகிறது. பெரியவர்கள் பேசும் மொழியிலே அவனிடம் வார்த்தைகளை அவனிடமே திரும்பி சொல்லுங்கள்.

மெதுவாக, அவன் சுதந்திரமாக இருக்க கற்றுக்கொள்வான், நீங்கள் அவனை விட்டுச் சென்றால் அழுவதை குறைத்துக்கொள்வான். ஆனால், சில நேரம் அவனை விட்டுச் செல்வது தவறாகச் சென்றால் அவன் கண்ணீர் வடிப்பான் ! உங்களுடைய வாசனை உடைய துணி போன்ற ஏதாகிலும் இருந்தால், அவன் சற்று அமைதியாக இருக்க உதவும்.

இந்த வயதில், உங்கள் குழந்தை தைரியமாக உட்கார்ந்துகொள்ளலாம், ஏதாகிலும் ஒரு பொருளை பிடித்துக்கொண்டு நடக்கலாம். ஒரு வினாடி எதையும் பிடிக்காமலும் அவன் நிற்கலாம், அல்லது அவன் கையை பிடித்துக்கொண்டால் சில அடிகள் அவன் நடக்கவும் முடியலாம்.

ஏறத்தாழ இந்த வயதில், உங்கள் குழந்தை ஒரு முழு சாப்பாட்டையும் தானாக கையில் எடுத்து சாப்பிட கற்றுக்கொள்வான். ஒரு கோப்பையில் இருந்து குடிக்க விரும்புவான். இது ஒரு புதிய திறன், இதை எவ்வாறு செய்வது என்பதை கற்றுக்கொள்ள சில மாதங்கள் பயிற்சிசெய்ய வேண்டும் !

உங்கள் குழந்தை இப்போது எளிமையான அறிவுரைகளை புரிந்துகொள்ள முடியும். ஆனால் ‘இல்லை’ என்கிற வார்த்தைக்கு அவன் கவனம் செலுத்துவான் என்பது இதன் அர்த்தம் அல்ல! சரி மற்றும் தவறு எது, பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பற்றது என்பதை வித்தியாசப்படுத்த உதவும்படி அது பயன்படுத்தப்பட்டால் அவன் ‘இல்லை’ என்கிற வார்த்தையை சிறப்பாக புரிந்துகொள்வான்.

எந்தத் திட உணவு சிறந்தது?

உங்கள் குழந்தைக்கு 6 மாதங்களாகும்போது, அதற்கு சிறிய அளவுகளில் மிருதுவான, மசித்த குடும்ப உணவு மட்டுமின்றி தாய்ப்பாலும் கொடுக்கலாம்.

முதலில் ஒரு ஸ்பூன் நிறையக் கொடுத்தால் போதும். குழந்தையைப் பார்த்து அமர்ந்தபடி, உங்கள் சுத்தமான விரல்களால் அல்லது ஸ்பூனால் சிறிது மிருதுவான உணவைக் கொடுங்கள். உணவைத் தனது நாக்கினால் சுழற்றி எவ்வாறு விழுங்குவது என்பதை அறிந்து கொள்வதற்கு குழந்தைக்கு சிறிது நேரமாகலாம். பொறுமையுடன் இருங்கள். அது கற்றுக் கொள்ளும்.

ஆரம்பத்தில், ஒரு நாளில் ஒரு முறை மட்டும் மசித்த உணவைக் கொடுங்கள், பின்னர் ஒரு நாளில் இருமுறை அதன்பின், ஒரு நாளில் 3 முறை என அதிகரித்துக் கொள்ளுங்கள். மசித்த உணவு கொடுப்பதற்கு முன்பும், பின்பும் தாய்ப்பாலூட்டுங்கள்.

 

7 மாத குழந்தை வளர்ப்பு

 

குழந்தை மேலும் தைரியமாக சாப்பிடத் தொடங்கியபின், மேலும் திடமான உணவுகளுக்கு அது முன்னேறலாம். வேறுவிதமான பதத்திலுள்ள உணவுகளை எப்படிச் சாப்பிடுவது என்பதை குழந்தை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக, நன்கு சமைக்கப்பட்ட ரவை (உப்புமா, கீர் அல்லது அல்வா), பருப்பு, கிச்சடி, பருப்பு சாதம் ஆகியவற்றை நீங்கள் கொடுக்கத் தொடங்கலாம்.

உணவு சாப்பிடத் தொடங்கியபின் உங்கள் குழந்தையின் மலத்தில் மாற்றம் ஏற்படும், அது மேலும் இருண்ட நிறத்திலும், வாடையுடனும் இருக்கும். இது வழக்கமானதுதான்.

உங்கள் குழந்தை தானே எடுத்துச் சாப்பிடத் தொடங்கும்போது, மேலும் நிறைவான உணவு கொடுப்பதற்கான தருணம் இதுவென்று உங்களுக்குத் தெரிந்துவிடும்.

நன்கு வேகவைத்த முட்டை, எலும்பு நீக்கப்பட்ட, மசித்த மீன் அல்லது இறைச்சி அல்லது மசித்த பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை நீங்கள் முயற்சிக்கலாம், அல்லது குழந்தைக்கு பல் முளைக்குமானால், உலர் ரொட்டி அல்லது வர்க்கியை முயற்சிக்கலாம். உங்கள் குழந்தையின் உணவில் உப்பு அல்லது மசாலாக்களை சேர்க்காதீர்கள்.

இப்போது குழந்தை நடமாடத் தொடங்கிவிட்டது. உங்கள் குழந்தை ஒரு நாளில் 3 அல்லது 4 முறை சாப்பிட வேண்டும். அதற்கு உணவு மட்டுமின்றி சிற்றுண்டிகளும் கொடுங்கள். குழந்தை தனது நாவினால் உணவை மசித்து விழுங்குவதற்கு ஏதுவாக, அதன் உணவு மிருதுவாக இருக்க வேண்டும். குழந்தை சாப்பிடும்போது விக்கிக் கொள்ளக்கூடும் என்பதால், கூடவே இருங்கள்.

குழந்தை சாப்பிடத் தொடங்குவதற்குமுன், அதன் கைகளை சோப் மற்றும் சுத்தமான நீரில் கழுவுங்கள்.

உங்கள் தாய்ப்பால் இன்னமும் குழந்தைக்கு ஆரோக்கியமானது, எனவே அதற்குத் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பாலூட்டுங்கள்.

இப்போது குழந்தை வளர்ந்துவிட்டது, அது சுத்தமான, பாதுகாப்பான நீர் குடிக்கலாம், ஆனால் கோலா, தேநீர், காப்பி அல்லது சர்க்கரை சேர்த்த பானங்கள் கூடாது.

குழந்தை அழுவாதற்கான கரணங்கக்கள்>>>

குழந்தை பராமரிப்பு : 0 – 12 மாதம் வரை >>>

Related Post

- 3

3 மாத குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

Posted by - அக்டோபர் 20, 2019 0
3 மாத குழந்தை வளர்ப்பு 3 மாத குழந்தை வளர்ப்பு: உங்கள் குழந்தை அதிக வளைவுத் தன்மையைப் பெறுகின்றது. தன் விரல்களை திறப்பதையும் மூடுவதையும், கைகளை தட்டுவதையும் அவன்…
9 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 9 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019 0
9 மாத குழந்தை வளர்ப்பு 9 மாத குழந்தை வளர்ப்பு:  அவளை அதிகமாகப் புகழுங்கள்… ! உங்கள் குழந்தை உங்களை பின்பற்ற முடியும் உங்கள் குழந்தை அவளுடைய சுற்றுச்சூழலுக்கும்,…
பச்சிளம் குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

Posted by - அக்டோபர் 20, 2019 0
பச்சிளம் குழந்தை பராமரிப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு: பிறந்து 28 நாட்களுக்கு உட்பட்ட குழந்தைகயை பிறந்த குழந்தை (அ) பச்சிளம் குழந்தை (அ) நியோனேட் (Neonate) என்கிறோம்.…
பிறந்த குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவை

பிறந்த குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவை தெறியுமா?

Posted by - அக்டோபர் 18, 2019 0
பிறந்த குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவை பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகள் நிறைய நேரம் தூங்கி கொண்டே இருப்பார்கள். குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரோ எப்பவுமே குழந்தை…
1 வயது குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 1 வயது குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019 0
1 வயது குழந்தை வளர்ப்பு 1 வயது குழந்தை வளர்ப்பு: பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் அடிகளை 12 மாதம் ஆகும்போது எடுத்து வைக்கின்றன. கவனமாக இருங்கள்,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot gacor yang tepat
  21. slot dana
  22. harum4d slot