15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

311 0

திருவிளையாடற்
புராணம்

15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

அகத்திய முனிவர் அறிவித்தபடி திங்கள் நாள் விரதத்தை விடாமல் தொடர்ந்து அனுஷ்டித்து வந்தமையால் மங்காத செல்வம் பெற்று உக்கிர பாண்டியன் வாழ்ந்து வந்தான்; காந்திமதியின் காதல் வாழ்க்கையில் வீரபாண்டியன் என்ற நன்மகனைப் பெற்றான். அவன் வளர்பிறை போல வளர்ந்து கலைகள் பலவும் கற்றுப் பூரண நிலவு போல முகப்பொலிவோடு விளங்கினான். இவ்வாறு வாழும் நாளில் நிலை திரிந்து பருவ மழை பெய்யாது நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது; கோள்கள் சூரியனை நோக்கி நிற்பதால் ஓர் ஆண்டுக்கு மழை பெய்யாது என்று சோதிடர்கள் தாள்கள் கொண்டு அவனுக்கு அறிவித்து வேதனை உண்டாக்கினர்.

சோதனை தந்த வேதத் தலைவனைத் தன் ஏதங்களை நீக்குமாறு வேண்டினான். காது கொடுத்துக் கேட்ட கடவுள் அவன் கண்குளிரச் சித்தராய்க் கனவில் வந்து விரும்பியதைப் பெற வழி காட்டினார்.

மழை வளம் குறைந்ததால் தானியங்கள் அருகி விட்டன; பொன்னையும் மணிகளையும் உயர் பண்டங்களையும் விற்று நாட்டு மக்கள் ஓடும் கையுமாக இருக்கும் நிலை அடைந்தனர்; குன்று போல் குவிந்திருந்த செல்வம் மணல்போல் கரைந்துவிட்டதால் இழந்த செல்வம் ஈட்ட வழியில்லாமல் வகையில்லாமல் விழித்தனர்.

மழை பெய்தால் அவர்கள் பசியற்று வாழ முடியுமேயன்றி வசியும் வளமும் பெற்று வாழ முடியாது. அதனால் வட புலத்தில் மேருமலையில் பொதிந்து கிடக்கும் பொன்னையும் உயர் மணிகளையும் மற்றும் வேண்டும் பொருள்களையும் வேண்டிய அளவு எடுத்து வரும்படி சித்தர் கனவில் கூறினார்.

அடியாத மாடு படியாது; அதனால் செண்டு கொண்டு அதன் சிகரத்தை அடித்தால்தான் கரம்குவித்துவேண்டியன நல்கும் என்று சொல்லி மறைந்தார். “உன் ஆணைக்கு அடி பணியும் மேருமலையில் தேவையானவற்றை எடுத்து வருக! மறுபடியும் அதை மூடி வைத்து உன் பொறியும் குறியும் பொறித்து விடுக” என்றும் கூறினார்.

உடனே உக்கிர பாண்டியன் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு நிமலனாகிய சோம சுந்தரக் கடவுளை வழிபட்டு நால்வகைச் சேனையோடு நான்கு வேதம் கற்ற வேதியர் வாழ்த்தி அனுப்பத் தேர் ஏறி வடநாடு புறப்பட்டான். பாண்டிய நாட்டையும் சோழ நாட்டையும் வேங்கடத்தையும் கருநாடகம், மாளவம், விராடம், மத்தியதேசம் கடந்து காசியை அடைந்தான். கங்கையில் முழுகிக் காசி விசுவநாதனை வழிபட்டுப் பின் குமரிக்கண்டத்தையும் பாரத கண்டத்தையும் கடந்து இமயத்தை அடைந்தான்; கிம்புருடம் ஏமகூடம், அரிவருடம், நிடதமலை, இளாவிருது வருடம் முதலிய இடங்களைக் கடந்து மேருமலையை அடைந்தான்.

படைகளை ஒரு புறம் நிறுத்தி விட்டுத் தான் மட்டும் தனியனாய் நின்று மேருமலைத் தலைவனை நேரில்வரும்படி அழைத்தான். உச்சி நிமிர்ந்த தலைவணங்காத அக்காவலன் இவன் ஏவலை மதிக்கவில்லை. சிவன் அனுப்பிய சிறுவன் என்று சொல்லியும் அவன் புறக்கணித்தான். வேறு வழியில்லை; தான் கொண்டு வந்த செண்டைக் கொண்டு அவன் சிண்டை அடித்தான். அந்த மண்டு வெகுண்டு எழாமல் வேண்டுவது யாது என்றான். அடி அடித்தால் அம்மியும் நகரும் என்னும் பழமொழி உண்மையாயிற்று. இம்மியும் நகராத அவன் இமைப்பொழுதில் வந்து ஏவல் கேட்டான்.

பொற்குவியல் இருக்கும் இடத்தைக் காட்டு என்றான்: “மாமர நிழலில் உள்ள பாறையின் கீழ் புதையல் இருக்கிறது.” என்று மேருமலைத் தலைவன் சொல்ல அவன் கூறியபடியே பாறையைத் தள்ளி வேண்டிய அளவு வாரி எடுத்துக் கொண்டு மறுபடியும் பாறை கொண்டு அவ்வழியை மறைத்து தன் பெயரையும் பெருமையையும் பொறித்து வந்தான்.

பொற்சுமையைத் தன் தோளிலும் மற்றுமுள்ள வாகனங்களிலும் வைத்துக் காவலர் சூழப் பாண்டிய நாடு கொண்டு வந்து சேர்த்தான். சோம சுந்தரக் கடவுளை வணங்கி நன்றி நவின்று, கொண்டு வந்த பொருளைச் சேர்த்துப் பொதித்து வைக்காமல் அறங்களுக்கும் பொருள் அற்றவர்களுக்கும் வாரி வழங்கினான். நகையில்லாத முகத்தைக் காணமுடிந்தது; ஆனால் நகை அணியாத பெண்களைக்காண முடியாமல் அணிகலன்கள் அணிந்திருந்தனர்

கோள்கள் உரிய இடத்தில் நிலை பெற நாள்கள் நன்மை பெற்றன. மழை உரிய காலத்தில் பெய்ய வறிய நிலை மாறியது. மன நிறைவு பெற்று அவன் தன் கடமை முடிந்தது என்று கருதி ஆட்சியைத் தன் மகனின் கையில் ஒப்புவித்துப் பொறுப்புகளினின்று தப்புவித்துக் கொண்டான்; முதுமை தரும் ஓய்வு அவனுக்கு ஆறுதல் அளித்தது. உலக வாழ்லில் பற்று நீங்கி இறைத் திருவடிகளில் சேர்ந்து இறைவனோடு இரண்டறக் கலந்தான்.


15. மேருவைச் செண்டால் அடித்த படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

முன்னுரை

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் முன்னுரை முன்னுரை தமிழகத்தின் பெருமையே சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும் எழுப்பிய திருக்கோயில்கள்தாம். தேவாரம் திருவாசகம் பாடித் தமிழையும் சைவத்தையும் வளர்த்தார்கள். கோயில்கள் எழுப்பிச் சிற்பக்கலையை…

58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தவர் மாணிக்க வாசகர்.…

திருவிளையாடற் புராணம்1. இந்திரன் பழி தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் திருவிளையாடற் புராணம்1. இந்திரன் பழி தீர்த்த படலம்  திருவிளையாடற் புராணம் 1. இந்திரன் பழி தீர்த்த படலம் சசியைப் பெற்று சாயுச்ய பதவி…

10. மலையத்துவசனை அழைத்த படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 10. மலையத்துவசனை அழைத்த படலம் 10. மலையத்துவசனை அழைத்த படலம் சுந்தரபாண்டியனாகிய சோமசுந்தரர் தடாதகைப் பிராட்டியை அழைத்துக் கொண்டு ஏழுகடல் வந்து குவிந்த வாவியின்…

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் நல்லான் என்ற வேளாளன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot gacor yang tepat
  21. slot dana
  22. harum4d slot