18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

339 0

திருவிளையாடற்
புராணம்

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

சித்திரைத் திங்களில் சித்திரை நாளில் அபிடேக பாண்டியன் சோமசுந்தரக் கடவுளுக்குச் சிறப்புப் பூசனை செய்து நெய் முதல் சந்தனம் ஈறாக மணப்பொருள்களை அபிடேகம் செய்து பச்சைக் கர்ப்பூரம் கலந்த தண்ணீரைக் கொண்டு அபிடேகம் செய்தான். அவரைக் கர்ப்பூர சுந்தரர் என்னும்படி அபிடேகம் செய்து அழகுபடுத்தினார்.

அதே நாளில் வழக்கப்படி பூசை செய்து வரும் இந்திரன் இவன் செய்யும் பூசை முடியும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் தன் சொந்த நகர் திரும்பினான். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணியவனாய்க் கவலை தோய்ந்த முகத்தோடு அவன் காட்சி தந்தான் வருணன் நடந்தது அறிந்து அக்கோயிலின் தலவிசேடம் யாது என்று கேட்டான். தனக்கு ஏற்பட்ட பழியையும் வெள்ளை யானைக்கு ஏற்பட்ட இழிவையும் இறைவன் நீக்கினான் என்று கூறினான். அதற்கு வருணன் “என் வயிற்று நோயை அந்த வைகை நதிக்காவலன் தீர்த்து வைப்பானா” என்று கேட்டான்.

“பிறவி நோயைத் தீர்க்கும் பெருமான் ஆகிய அவனுக்கு வயிற்று நோயைத் தீர்ப்பது தானா முடியாது. அந்த வைத்தியநாதனை நீ சோதித்துப் பார்” என்றான்.

மிரட்டியே எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்த வருணன் தன் ஏழு மேகங்களையும் ஏவி மழைபெய்யச் செய்து கடல் அலையை விளித்துப் பொங்கி எழுமாறு ஆணையிட்டான். மதுரை கடல் நீரில் கலங்கியது; மக்கள் உயிருக்குத் தப்பி ஓட உறைவிடம் தேடினர். பாண்டியன் சோம சுந்தரக் கடவுளிடம் சென்று கடல்கள் செய்யும் இடர்களை எடுத்து உரைத்தான்; அஞ்சற்க என்று சொல்லித் தன் சடையில் மேகங்கள் நான்கினை அழைத்து “நீவிர் நால்வரும் கடல் அலையை உறிஞ்சி வற்றச் செய்வீர்” என்று ஆணையிட்டார்.

மெய்யன்பர்களின் எழுவகைப் பிறப்பையும் தீர்ப்பது போல ஏழுகடலில் நீர் முழுதும் வற்றும்படி செய்ய மறுபடியும் பாண்டிய நாடு பழைய நிலையை அடைந்தது. கடல்கோள் அங்குக் கால்கோள் கொள்ள முடியாமல் போயிற்று. இதெல்லாம் ஈசன் திருவிளையாடல் என்று அறிந்து உணர்ந்து மக்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர்.

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் கொடி போன்ற தடாதகையை மணந்த பின் புவனம் தாங்கும் கண்ணுதல் மூர்த்தியின் திருமணத்திற்கு…

31 உலவாக்கிழி அருளிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 31 உலவாக்கிழி அருளிய படலம் 31 உலவாக்கிழி அருளிய படலம் குணவீர பாண்டியன் தனமெல்லாம் தரும நெறியில் செலவழிக்கப்பட்டது. வளம் குன்றிவிட்டது. எனினும் அவன்…

20. எல்லாம் வல்ல சித்தர் ஆன படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 20. எல்லாம் வல்ல சித்தர் ஆன படலம் 20. எல்லாம் வல்ல சித்தர் ஆன படலம் அபிடேக பாண்டியனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் வேண்டிய…

23. விருத்த குமார பாலரான படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 23. விருத்த குமார பாலரான படலம் 23. விருத்த குமார பாலரான படலம் விக்கிரமன் ஆட்சி செய்து வரும் நாளில் மதுரையில் விருபாக்கன் என்னும்…

26. மாபாதகம் தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 26. மாபாதகம் தீர்த்த படலம் 26. மாபாதகம் தீர்த்த படலம் குலோத்துங்கன் ஆட்சி செய்த காலத்தில் பாண்டிய நாட்டில் அவந்தி என்னும் நகரில் பார்ப்பனன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot dana
  21. harum4d slot