2 மாத குழந்தை வளர்ப்பு
2 மாத குழந்தை வளர்ப்பு : இப்போது உங்கள் குழந்தை அதிக வலிமையாக இருக்கிறது. சில வினாடிகள் அவளால் தன் தலையை நிமிர்த்தி வைகத்துக் கொள்ளமுடியும்.
இப்போது அவளால் இன்னும் சிறப்பாக தன் கண்களால் கவனிக்க முடியும், அவளுடைய பார்வையும் முன்னேற்றம் அடைந்துகொண்டு இருக்கிறது. உங்கள் குழந்தை அவளுடைய சொந்த கைகளையே பார்த்துக்கொண்டு இருப்பதை நீங்கள் காணலாம். அது தன்னுடைய கை தான் அதை தான் பயன்படுத்த முடியும் என்பதை அவள் புரிந்துகொள்ள தொடங்குகிறாள். சீக்கிரத்தில் பொருட்களை எடுக்க அவள் தன் கையை நீட்டுவாள். அவள் முன்பை விட சிறப்பாக கவனிக்கவும் செய்கிறாள், சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதையும் புரிந்துகொள்கிறாள். சத்தம் வரும் திசையை நோக்கி அவள் தன் தலையை திருப்புவதையும் நீங்கள் பார்க்க முடியும்.
அவள் கற்றுக்கொள்ள உதவுவதற்காக உங்கள் குழந்தையிடம் பேசுங்கள்
ஏறத்தாழ இப்போது, உங்கள் குழந்தை பகல் நேரத்தில் அதிகமாக விழித்து இருப்பதையும், விளையாடுவதற்காக குறிப்பிட்ட நேரங்களை விரும்புவதையும் நீங்கள் கவனிப்பீர்கள். அவள் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்ள தொடங்குகிறாள்.
சீக்கிரத்தில், அவள் தன் கைகளையும் கால்களையும் நீட்டத் தொடங்குவாள். உங்கள் குழந்தை கை கால்களை நீட்டுவதற்கு போதிய இடம் கொடுங்கள். தரையிலே ஒரு போர்வையை விரித்து, அவள் அதிலே நகர்ந்திட விடுங்கள். அவள் குப்புற படுத்திருந்தால், அவள் தன் கால்களை வைத்து அழுத்தத் தொடங்குவாள். இது அவளுடைய வளர்ச்சியடையும் தசைகளை வலிமைப்படுத்த உதவும்.
உங்கள் குழந்தையிடம் பாட்டுப்பாடவோ அல்லது பேசவோ முடியாத அளவுக்கு மிகவும் பச்சிளம் குழந்தையாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் அவ்வாறு செய்தீர்களானால் அது ஒரு நல்ல யோசனையாக இருக்கும். நீங்கள் பாடுவதை அல்லது பேசுவதை கேட்பது அவள் பேச கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.
நீங்கள் பாடும்போது அல்லது பேசும்போது அவள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாலோ அல்லது ஆர்வத்தை இழந்துவிட்டாலோ, வேறு ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள் அல்லது அவள் ஓய்வெடுக்க நேரம் கொடுங்கள்.
குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உள்ளதா?
கீழ்க்கண்டவை காணப்பட்டால், உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருக்கலாம்:
- குழந்தை சளி என்றழைக்கப்படுகின்ற பிசுபிசுப்பான துர்வாடையுடன்கூடிய திரவம் கலந்த வாடைமிக்க, நீர்த்த மலம் கழித்தல்.
- குழந்தை அடிக்கடி மலம் கழித்தல்.
- அதற்குக் காய்ச்சல் இருத்தல்.
- அது எடை இழப்பதைப்போல் தோன்றுதல்.
குழந்தை வளர்ப்பு : இரண்டாம் மாதம்
உங்கள் குழந்தை அசுத்தமான நீரைக் குடித்தாலோ அல்லது அசுத்தமான அல்லது கெட்டுப்போன உணவை உண்டாலோ வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
பிறந்த குழந்தைகள் அடிக்கடி மலம் கழிக்கும், சில சமயங்களில் முதல் மாதத்தில் ஒரு நாளைக்கு 5 முறை வரை கூட மலம் கழிக்கலாம், ஆனால் நீங்கள் அதற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தால், இது வயிற்றுப்போக்காக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
சில சமயங்களில், ஒவ்வொரு முறை தாய்ப்பால் குடித்த பிறகும், குழந்தைகள் மலம் கழிக்கும். இதற்குக் காரணம், அதன் வயிறு பாலினால் நிறையும்போது, அதன் மலக்குடலும் தூண்டப்படுகிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் மலம் வழக்கமாக மஞ்சள் நிறத்திலும், இனிய மணத்துடனும், மிருதுவாகவும் இருக்கும். அவற்றிற்கு 1 மாதம் ஆனவுடன், பெரும்பாலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை மலம் கழிக்கும். சில சமயங்களில் தாய்ப்பாலருந்தும் குழந்தைகள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் மலம் கழிக்கலாம். இதுவும் வழக்கமானதுதான்.
உங்கள் குழந்தையின் மலம் 6 மாதங்கள் ஆகும்போது, அது திட உணவை உட்கொள்ளத் தொடங்கும்போது மாறக்கூடும். உங்கள் குழந்தை புதிய உணவுக்குப் பழகிக் கொள்ளும்போது மலம் கழித்தலும் ஒருவித வரைமுறைக்கு வந்துவிடும்.
எனவே, உங்கள் குழந்தையின் மலத்தைக் கவனியுங்கள். உங்கள் குழந்தை அடிக்கடி துர்வாடையுடன்கூடிய, நீர்த்த, சளி கலந்த மலம் கழித்தாலோ, அதற்குக் காய்ச்சல் இருந்தாலோ அல்லது அதன் எடை குறைந்தாலோ, உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருக்கும் சாத்தியமுள்ளது. குழந்தையை ஓர் மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள்.
எனது சுகவீனமான குழந்தைக்கு நான் பாலூட்டலாமா?
தனது பலத்தைத் திரும்பப் பெறுவதற்கு உங்கள் குழந்தைக்குத் தேவைப்படுவதெல்லாம் உணவுதான்.
குழந்தைகள் அனவருமே சில நேரங்களில் நோயுறுகின்றனர். உங்கள் குழந்தை உடல்நலமின்றி இருப்பதைப் பார்ப்பது வருத்தமான ஒன்றுதான், என்றாலும் அதற்குச் சரியான பராமரிப்பையும், சிகிச்சையையும் கொடுத்து, நன்றாக உணவளிப்பதன் மூலம், குழந்தை குணமடைவதற்கு உங்களால் உதவ முடியும்.
உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவானதாக இருந்தால், உங்கள் தாய்ப்பால் அது குணமடைய உதவும். உங்கள் தாய்ப்பால் அதற்கு ஆரோக்கியமானது.
அது உங்கள் குழந்தை பலம் பெற உதவும். உங்கள் குழந்தைக்கு நீர்த்த மலம் அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால், தாய்ப்பால் அதன் வயிற்றுக்கு இதமாக இருப்பதுடன், குழந்தை நோயுற்றிருக்கும் சமயத்தில் இழந்த அனைத்து நன்மைகளையும் அது திரும்பத் தரும்.
உங்கள் குழந்தைக்கு 6 மாதங்களுக்கும் அதிகமாக ஆகியிருந்தால், கிச்சடி போன்ற மசித்த உணவுகள், மசித்த வாழைப்பழம் அல்லது உருளைக்கிழங்கு ஆகியவற்றைத் தொடர்ந்து கொடுத்து வாருங்கள். அதனை இன்னும் நன்றாக ஆக்குவதற்காக சிறிது வெண்ணெய், நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். கழந்தை வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாலும், அதற்கு வயிற்றுப்போக்கு இருந்தாலும், அது சாப்பிட வேண்டியது அவசியம். உணவு அது குணமடைவதற்கு உதவும்.
குழந்தை சாப்பிடுவதற்கு மறுத்தால், நாள் முழுவதும் அதற்கு சிறிது சிறிதாக உணவளியுங்கள். இது குழந்தையின் உடல் குணமடைவதற்கு உதவும்.
ஒரு நாளுக்குப் பிறகும் உங்கள் குழந்தை நோயுற்றிருந்தால், அல்லது அதனுடைய வயிற்றுப்போக்கு ஒரு நாளுக்குப் பின்பும் நீடித்தால், குழந்தையை ஒரு மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள்.
உங்கள் குழந்தை நன்றாக உணரத் தொடங்கும்போது, 2 வாரங்களுக்கு அதற்கு ஒரு நாளுக்கு 2 கூடுதல் உணவுகளைக் கொடுங்கள். இது, குழந்தையின் வழக்கமான ஆரோக்கியத்தைத் திரும்பப் பெற அதற்கு உதவும்.
என் குழந்தை எப்போது புன்னகை புரியும்?
பெரும்பாலான குழந்தைகள், தங்களுடைய 6 மற்றும் 8 வாரங்களுக்கிடையில், தங்கள் முதல் புன்னகையை பூக்கின்றன. ஆனால் உங்கள் குழந்தை இக்காலகட்டத்திற்கு முன்போ அல்லது பின்போகூட புன்னகை புரியலாம்.
உங்கள் குழந்தையை புன்னகை புரிவதற்கு நீங்கள் ஊக்கமளிக்க விரும்பினால், அது அமைதியாகவும், விழிப்புடனும் இருக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் குழந்தை உங்களைப் பார்த்து, உங்கள் முகத்தை ஆராய்கின்ற தருணத்தைக் கவனியுங்கள்.
உங்கள் குழந்தையை உங்களுக்கு முன்னால் பிடித்துக் கொண்டு, உங்கள் முகங்கள் நெருக்கமாக இருக்கும் வகையில் வைத்தபடி, அதனுடன் பேசுங்கள். உங்கள் குழந்தைக்கு இது பிடிக்காவிட்டால், அதனைச் சிறிது தள்ளிப் பிடித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
முதலில் குழந்தை உங்களை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கலாம், எனவே அமைதியாக அதனுடன் பேசுங்கள், பின்னர் உங்களுக்கு அந்த முதல் புன்னகை எனும் பரிசு கிடைக்கலாம்!
புன்னகை புரிவதற்கு குழந்தை கற்றுக் கொண்டபின், விரைவிலேயே உங்கள் குழந்தையால் சிரிக்கவும் முடியும்!
பெரும்பாலான குழந்தைகள், தங்களது 2 மற்றும் 4 மாதங்களுக்கிடையில் சிரிக்கத் தொடங்கும். வேடிக்கையான முகபாவங்களைக் காட்டவும், ஒலிகளை எழுப்பவும், அதற்குக் கிச்சு கிச்சு மூட்டவும் முயன்று பாருங்கள்.
பிறந்த குழந்தை முதல் 12 மாதம் வரை வளர்ப்பு முறைகக்கு: