- 1

2 வாரத்தில் உடல் எடையை குறைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க

162 0

2 வாரத்தில் உடல் எடையை குறைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க


உடற்பயிற்சிகள் நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது.


தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டால் இருதய நோய், உடற்பருமன், நீரிழிவு போன்ற பல பிரச்சினைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ நன்மை பயக்கும்.


முதுமை அடையும் போது நிலையான உடற்பயிற்சிகள் உங்கள் காலில் நிலையாக நிற்க வழிவகுக்கும். நமது உடலில் பார்வை, காது, காற்தசைகள், முட்டுகள் ஆகியவை இழக்க ஆரம்பிக்கும். உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அந்த பிரச்சினைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம்.


உணவு முறை


- 3

 • ஜங்க் உணவுகளை தவிர்த்துவிட்டு ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • சத்துகள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பீன்ஸ், நட்ஸ், பயிறுகள் சாப்பிட வேண்டும்.
 • தினமும் 10-12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலை சுத்தம் செய்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.


உடற்பயிற்சி


- 5

 • வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்ற வேண்டும்.
 • நீங்கள் உடற்பயிற்சி செய்யாதவராக இருந்தால், 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.
 • குத்த வைத்து மூச்சு விடுவது போன்ற உடற்பயிற்சிகளை செய்தால் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கலாம். குத்த வைத்து உட்காரும் போது, உங்கள் கீழ் பகுதியை முடிந்த வரையில் குறைக்கும். குறைக்கும் போது மூச்சை இழுக்கவும். சில நிமிடங்கள் காத்திருப்புக்கு பின் மெதுவாக மூச்சை வெளியே விட்டு குறைத்த பகுதியை மேல் கொண்டு வரவும். இந்த உடற்பயிற்சியை 20 முறை தொடர்ந்து செய்யவும்.
 • வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க க்ரஞ்சஸ் வகையிலான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உங்கள் தலைக்கு பின்னால் கைகளை கட்டிக்கொண்டு, முட்டியை மடக்கி வைத்து, கால்களை தரையில் திடமாக ஊன்ற வேண்டும். வயிற்று தசைகளை இறுக்கி, உங்கள் தோள்பட்டையை தரையில் இருந்து தூக்கவும். இதனை 10 முறையாவது செய்ய வேண்டும்.
 • அதிக அளவிலான தண்ணீரை குடித்து உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும். பின்புறமாக படுத்து, முட்டியை மடக்கி, பாதத்தை தரையில் வைக்க வேண்டும். கைகளை படர்ந்து விரித்து, விரல்களை மேற்புறம் பார்த்தவாறு வைக்கவும். மூச்சை வெளியற்றி மெதுவாக உட்கார முயற்சிக்க வேண்டும். மூச்சை உள்வாங்கி மீண்டும் மெதுவாக படுக்க வேண்டும்.
 • நடைபயிற்சி முதல் உட்கார்ந்து எழுந்திருப்பது வரை அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
 • கொழுப்புகளை வேகமாக குறைக்க வேண்டுமானால், க்ரஞ்சஸ் மற்றும் உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.


- 7

 • தற்போது செய்து வரும் உடற்பயிற்சியுடன் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியையும் தொடருங்கள். அல்லது ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டும் தொடருங்கள். உடற்பயிற்சியை மாற்றுவதால் உடலில் அதிர்வு ஏற்பட்டு, மெட்டபாலிக் வீதம் அதிகரிக்கும். அதனால் வயிற்றில் இருந்து கொழுப்பு வேகமாக கரையும். ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியை 30 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும்.
 • நீச்சல் பயிற்சிகளில் ஈடுபடலாம். நடை பயிற்சியை 40 நிமிடங்களுக்கு அதிகரிக்கலாம். உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யலாம். இது போல் மேற்கொண்டால் சீக்கிரம் உடல் எடையை குறைக்கலாம்.

2 வாரத்தில் உடல் எடையை குறைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க Source link

Related Post

- 9

உச்சி முதல் பாதம் வரை பயன் பெற வேண்டுமா? இந்த பயிற்சி மட்டும் போதுமே!

Posted by - அக்டோபர் 22, 2020 0
உச்சி முதல் பாதம் வரை பயன் பெற வேண்டுமா? இந்த பயிற்சி மட்டும் போதுமே! தொடை, குதிக்கால், கைகள், முழங்கால், இடுப்பு, முதுகு என அனைத்து பாகங்களுக்கும்…
- 13

பெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்! அது என்னென்ன தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்! அது என்னென்ன தெரியுமா? உடல் உழைப்பு இல்லாமல் போவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து வேலை பார்ப்பது, தூக்கமின்மை…
- 15

தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கணுமா? இந்த பயற்சியை மட்டும் செய்து பாருங்க

Posted by - அக்டோபர் 20, 2020 0
தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கணுமா? இந்த பயற்சியை மட்டும் செய்து பாருங்க பொதுவாக பெண்களுக்கு இன்றைய காலக்கட்டத்தில் உடல் எடையை குறைப்பது பெரிதும் சவாலாகவே உள்ளது.…
- 19

உங்கள் தொடை பெருத்து அசிங்கமா இருக்கா? அதனை குறைக்க இதோ எளிய உடற்பயிற்சி

Posted by - அக்டோபர் 22, 2020 0
உங்கள் தொடை பெருத்து அசிங்கமா இருக்கா? அதனை குறைக்க இதோ எளிய உடற்பயிற்சி பொதுவாக சில பெண்களுக்கு தொடை பெருத்து அசிங்கமாக காணப்படுவதுண்டு. குறிப்பாக பலருக்கும் முறையற்ற…
வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து எளிதில் விடுபட

உங்களுக்கு வாயுத்தொல்லையும் அசிடிட்டியும் இருக்கா? இந்த ஆசனத்தை மட்டும் பண்ணுங்க

Posted by - நவம்பர் 17, 2020 0
உங்களுக்கு வாயுத்தொல்லையும் அசிடிட்டியும் இருக்கா? இந்த ஆசனத்தை மட்டும் பண்ணுங்க   பவன்முக்தசனா பயிற்சி செய்வது செரிமானத்தை மேம்படுத்தவும் எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும். இந்த நிலை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன