20 மணி நேர பேட்டரி ஆயுளுடன் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் அறிமுகம்! 

ஒன்பிளஸின் புதிய புல்லட் வயர்லெஸ் இசட் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் 2 உடன் ஒப்பிடும்போது வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மிகவும் மலிவாகும். 
 

விலை:

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசடின் விலை 49.95 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,800)ஆகும். இந்தியாவின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் கருப்பு, நீலம், மிண்ட் மற்றும் ஓட் கலர் வேரியண்டுகளில் கிடைக்கும். 

விவரங்கள்:

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட், ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் 2-ல் காணப்படும் அம்சங்களுடன் வருகிறது. Quick Pair சாதனங்களுடன் வேகமாக இணைவதற்கும், Quick Switch செய்வதற்கும் இரண்டு சாதனங்களுக்கு இடையில் எளிதாக மாறுவதற்கு முன்னேறியுள்ளது. இது, வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி 55 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. சூப்பர் பேஸ் டோனை தவிர 9.2 மிமீ டைனமிக் டிரைவரும் உள்ளது.

வயர்லெஸ் ஹெட்ஃபோன்களில் Low Latency மோடும் உள்ளது. இது latency 110 எம்.எஸ் ஆக குறைக்கப்படுகிறது. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசடின் எடை 28 கிராம் ஆகும். மேம்படுத்தப்பட்ட வயர்லெஸ் வரம்பு 10 மீட்டர் என்று கூறப்படுகிறது. இணைப்பில், புளூடூத் வி 5.0 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். மூன்று சிலிக்கான் இயர்பட்ஸ் பேக்கில் வருகின்றன. இது 10 நிமிட சார்ஜ் கொண்ட 10 மணிநேர music playback-ஐ வழங்குகிறது. இதை முழு சார்ஜ் செய்தால் 20 மணிநேர வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

Source link

Tags:

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   Logo
   Register New Account
   Reset Password