22. யானை எய்த படலம்

383 0

திருவிளையாடற்
புராணம்

22. யானை எய்த படலம்

22. யானை எய்த படலம்

சோம சுந்தரருக்கு அமைத்த இந்திர விமானத்துக்கு அருகே வடக்கே அழகிய ஒரு கோயில் கட்டிச் சித்தருக்கு உருவச் சிலை வைத்து விக்கிரம பாண்டியன் கிரமமாக பூஜித்து வந்தான். சைவம் தழைக்கச் சிவன் கோயில் திருப்யணிகள் செய்து வந்தான்.

அவன் வாழ்ந்த காலத்தில் சோழ நாட்டு அரசன் சமண சமயத்தைத் தழுவி இருந்தான்; அங்கிருந்த சமணர் அரசனைத் தூண்டி விட்டுப் பாண்டியனை அழிக்க வேண்டுதல் விடுத்தனர். அரசியல் காரணம் இன்றிப் போர் தொடுப்பது முறையன்று என எண்ணி அவர்களையே மந்திர சக்தியால் அவனை அழிக்கத் துணையாக்கினான். அழிவு தரும் வேள்வி ஒன்றைச் செய்து அதில் முரட்டு யானை ஒன்றைத் தோற்றுவித்தனர். இதளை ‘அபிசார ஓமம்’ என்பர். வேள்வியிலிருந்து உருத்து எழுந்த யானை படைத்தவர்கள் ஏவலைக் கேட்டுப் பாண்டிய நாடு நோக்கிப் பாய்ந்தது. மதம் கொண்ட யானை ஊழித்தியெனப் புறப்பட்டு வந்தது. அதன் வேகத்தையும் சீற்றத்தையும் கண்டு பாண்டியனின் படையினர் அஞ்சி அதனை எதிர்க்க முடியாது என்பதால் ஓடி ஒளித்தனர். பாண்டியனிடம் பதை பதைப்போடு இச் செய்தியைப் பகர்ந்தனர். விக்கிரமன் தன்னால் அதனை எதிர்த்து ஒழிக்க முடியாது என்பதை அறிந்தவனாய்க் காத்தற் கடவுளாகிய சோமசுந்தரரிடம் சென்று முறையிட்டான்.

அவன் குறை கேட்ட இறைவன் தான் அதனைக் கொல்வதற்கு ஓர் உதவி செய்ய வேண்டும்; உயர இருந்து அம்பு எய்வதற்கு ஏற்றபடி, அட்டாலை மண்டபம் ஒன்று கட்டித் தரக் கேட்டான். பதினாறு தூண்களை உடைய அம்மண்டபம் தற்காப்புடையதாக அமைந்தது.

வில்லைக் கையில் ஏந்தி அம்பறாத்துாணியை முதுகில் தாங்கிக் கரு நிறமுள்ள காளைப்பருவத்து வில் வீரனாக இறைவன் வந்து தோன்றி அம்மண்டபத்தின் மீது ஏறி யானை வரும் திக்கில் நின்று நரசிங்க அத்திரத்தை யானை மீது தொடுத்தார். அது இரணியனைப் போலக் கதறிக் கொண்டு விழுந்தது. அந்த நரசிம்ம வடிவத்தோடு அந்த அம்பு அங்கு நிலைத்து விட்டது. முனிவர்கள் பலர் வந்து வழிபட்டனர். பிரகலாதனும் அங்குவந்து தவம்,செய்து மேன்மைகளைப் பெற்றான் என்று கூறப்படுகிறது.


22. யானை எய்த படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

53. கீரனைக் கரை ஏற்றிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 53. கீரனைக் கரை ஏற்றிய படலம்  53. கீரனைக் கரை ஏற்றிய படலம் நக்கீரனின் அஞ்சாமை போற்றப்படுகிறது. சிவனே ஆயினும் குற்றம் குற்றமே…

27. அங்கம் வெட்டின படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 27. அங்கம் வெட்டின படலம் 27. அங்கம் வெட்டின படலம் இதுவும் குலோத்துங்க சோழன் காலத்து நிகழ்ச்சியாகும். பரதேசி ஒருவன் மதுரைக்கு வந்து சுதேசி…

10. மலையத்துவசனை அழைத்த படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 10. மலையத்துவசனை அழைத்த படலம் 10. மலையத்துவசனை அழைத்த படலம் சுந்தரபாண்டியனாகிய சோமசுந்தரர் தடாதகைப் பிராட்டியை அழைத்துக் கொண்டு ஏழுகடல் வந்து குவிந்த வாவியின்…

47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம் 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம் இராசராசனுக்குப்பின் அவன் மகன் சுகுண பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன்…

46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் 46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் பன்றி மலையில் இப்பன்னிருவரும் பிறந்து கலவைப் பிறப்பாகக் காட்சி அளித்தனர். முகம் மட்டும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன