31 உலவாக்கிழி அருளிய படலம்

288 0

திருவிளையாடற்
புராணம்

31 உலவாக்கிழி அருளிய படலம்

31 உலவாக்கிழி அருளிய படலம்

குணவீர பாண்டியன் தனமெல்லாம் தரும நெறியில் செலவழிக்கப்பட்டது. வளம் குன்றிவிட்டது. எனினும் அவன் இறைவனையே நம்பி விரதங்களைச் செய்து நியம நிட்டைகள் தவறாமல் வழிபட்டு வந்தான். தவவலியால் அந்தணர்களையும் வேத வித்தகரையும் அவன் மதிக்கவில்லை. அதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

வேதம் ஓதாமையாலும் வேள்விகள் நடத்தாமையாலும் மழை வளம் குன்றியது.

“மழை வளம் கரப்பின் வான் பேரச்சம் பிழையுயிர் எய்தின் பெரும் பேர் அச்சம்” என்று சிலப்பதிகாரம்கூறும்.

மகளிர் கற்பாலும், வேதியர் நல்லொழுக்கத்தாலும், அரசரின் நெறி முறையாலும் மழை பொழியும் என்று கூறுவர். வேதியர்கள் தம்முடைய கடமைகளைச் செய்யாததால் மழை பிழைத்துவிட்டது. கோயில் நற்பணிகளுக்கும் அரசன் அரண்மனையில் பொருள் வளம் இல்லை; இப்படித் தேய்ந்துவிட்ட நிலையில் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்து ஆடின; வேறு வழியில்லை.

வழிபடும் தெய்வமே அவனுக்கு வாழ்வு அளிக்க வேண்டி இருந்தது. இறைவன் அவன் கனவில் வந்து “அழியாத பொன் முடிப்பு” ஒன்று தந்து விட்டு மறைந்தார். கனவு மறைந்தாலும் முடிப்பு மறையவில்லை. “எடுக்க எடுக்கக் குறையாத அட்சய பாத்திரம் போன்று இந்த முடிப்பு உன்னிடம் தரப்பட்டுள்ளது. இதை வைத்து வேதியருக்கும் வேத நூல் கல்விக்கும் பயன் படுத்துக” என்று சொல்லி மறைந்தார்.

உலவாக்கிழியாகிய பொன்முடிப்பை எடுத்து தெய்வப்பணிகள் செய்தான்; வேதம் ஓதும் வேதியர்களை வாழ வைத்தான்; மறுபடியும் சோறும் சுகமும் மட்டும் அன்றி அறிவும் ஞானமும் பெருகி நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தது.

மனிதர் சோறு மட்டும் தின்று வாழ்வதில்லை; தெய்வ வழிபாடு மட்டும் போதாது, கல்வியும் ஞானமும் பெருக வேண்டும். அவற்றை வளர்க்க வேண்டும். அதுவே நாட்டுக்குப் பெருமை தருவதாகும். தமிழருக்கு வள்ளுவர் குறள் அழியாச் செல்வம்; வடமொழியாளருக்கு வேதம் அழியாத செல்வம்; இத்தகைய உயர்ந்த நூல்கள் மாந்தரிடைப் பரவினால் அவர்கள் நன்னெறியோடு வாழ்வர். ஒழுக்கம் குறையாது; மழையும் பெய்யும் என்பதை இறைவன் இத்திருவிளையாடல் கொண்டு உணர்த்தினார்.

31 உலவாக்கிழி அருளிய படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் சித்திரைத் திங்களில் சித்திரை நாளில்…

63. சமணரைக் கழுவேற்றிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 63. சமணரைக் கழுவேற்றிய படலம் 63. சமணரைக் கழுவேற்றிய படலம் கூன் பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்த அற்புதம் பெரிய மாற்றத்தை விளைவித்தது; பாண்டியனின்…

53. கீரனைக் கரை ஏற்றிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 53. கீரனைக் கரை ஏற்றிய படலம்  53. கீரனைக் கரை ஏற்றிய படலம் நக்கீரனின் அஞ்சாமை போற்றப்படுகிறது. சிவனே ஆயினும் குற்றம் குற்றமே…

29. மாயப் பசுவை வதைத்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 29. மாயப் பசுவை வதைத்த படலம் 29. மாயப் பசுவை வதைத்த படலம் யானையை ஏவியும் பயன் இல்லை; நாகத்தினை அனுப்பியும் பயனில்லை; அவர்கள்…

58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தவர் மாணிக்க வாசகர்.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன