34. விடை இலச்சினை இட்ட படலம்

269 0

திருவிளையாடற்
புராணம்

34. விடை இலச்சினை இட்ட படலம்

34. விடை இலச்சினை இட்ட படலம்

சோழனுக்கும் பாண்டியனுக்கும் அக்காலத்தில் நல்லுறவு இல்லாமல் இருந்தது. பொதுவாகச் சோழர்கள் அக்காலத்தில் சமண சமயத்தை ஆதரித்து வந்தனர். விதி விலக்காக ஒரு சோழன் இருந்தான். அவன் காடு வெட்டிச் சோழன் என்று அழைக்கப்பட்டான்.
காடு திருத்தி நாடு ஆக்கியமையால் அவன் காடு வெட்டிச் சோழன் என அழைக்கப்பட்டான். அவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டிருந்தான்.
அவன் மதுரை சென்று சொக்கனை வழிபட வேண்டு மென்று சதா ஏக்கம் கொண்டிருந்தான்; தூக்கத்திலும் அந்நினைவோடு இருந்தான், சித்தர் வடிவில் சிவனார் வந்து அவன் மெத்த மகிழ்ச்சி அடையும்படி அவனைப் பாண்டிய நாட்டுக்கு வரச் சொன்னார். அன்று இரவே அவன் மதுரை நோக்கி வந்தபோது வைகையில் வெள்ளம் வந்து அவன் வருகையைத் தடுத்தது. அவன் அங்கயற் கண்ணி மணாளனை நினைத்து முறையிட அவர் அவனுக்காக நீரைக் குறைத்துக் கரை ஏற்றினார். அவனை வடக்கு வழியாக வரச்சொல்லிச் சித்தர் வடிவிலே சென்று அவனைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். தாமரைக் குளத்தில் அவன் முழுகி எழுந்து பார்வதி மணாளனை வணங்கி வழிபட்டு மனநிறைவோடு திரும்பிச் க்சன்றான்; வடக்கு வழியிலேயே அவனைப் போகவிட்டுக் கோபுர வாயிலின் பெருங் கதவுகளுக்குத் தாளிட்டு இடப இலச்சனையை முத்திரையாக இட்டுத் தம் திருக்கோயில் விமானத்தை அடைந்தார்.

பொழுது விடிந்தது. தொழு பணி செய்யும் காவலாளிகள் இடபக் குறி இட்டு இருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்; கயற் குறி இருந்த இடத்தில் வேறு ஓர் அயற்குறி இருத்தல் கண்டு அரசனிடம் சென்று முறையிட்டனர். அக்காலத்தில் மதுரையை ஆண்டவன் இராசேந்திரன் ஆவான்.

இடபத்துக்கு உரியவன் இருடிகளின் தலைவனாகிய கயிலை மன்னன் என்பது அறிந்து எல்லாம் அவர் அழகிய திருவிளையாடல் என உணர்ந்து எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தான். சைவ சமயம் ஓர் எல்லைக்கு உட்பட்டதன்று; சோழநாடு பாண்டியநாடு மட்டும் அல்ல அரசுகள் எல்லாம் பேரரசு ஆகிய பெருமானின் முன் நில்லா என்பதை உணர்ந்தான் ; சோழனையும் தன் ஆருயிர் நண்பனாக மதிக்கத் தொடங்கினான். யார் வந்து வணங்கினாலும் அதற்குத் தடைகூடாது என்று திருந்திய மனம் பெற்றான்.


34. விடை இலச்சினை இட்ட படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்  56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் சண்பகப் பாண்டியனுக்குப் பின் அவன் சந்ததியில் குலசேகர பாண்டியன்…

48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் பாண்டிய நாட்டிலே தென் திசையில் ஓர் ஊரில் ஒரு தாமரைக்…

12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம் 12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம் உற்ற வயது வந்ததும் கற்ற…

42. திருமுகங் கொடுத்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 42. திருமுகங் கொடுத்த படலம் 42. திருமுகங் கொடுத்த படலம் இறைவன் விறகு வெட்டியாக வந்து பாணபத்திரனுக்கு அருள் செய்தமையின் இறைவனையே பாடும் தொழிலை…

47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம் 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம் இராசராசனுக்குப்பின் அவன் மகன் சுகுண பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன