- 1

35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனை செய்திடுங்க.. இல்லையென்றால் ஆபத்தாம்!

150 0

35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனை செய்திடுங்க.. இல்லையென்றால் ஆபத்தாம்!

பொதுவாக பெண்கள் 35 வயதை எட்டும் போது பலவித நோய்களை வந்து தாக்கிவிடுகின்றது.

குறிப்பாக சக்கரை வியாதி, இதய பிரச்சினை, புற்றுநோய், கொலஸ்ரோல், இரத்த அழுத்தம் போன்றவை நோய்கள் நம்மை வாட்டி வதைக்கும்.

இயல்பாகவே காலம் மாற மாற புதுப் புது நோய்கள் வந்துகொண்டிருக்கின்றன. காரணம் நமது மரபனுக்களில் உண்டான மாற்றங்களே ஆகும்.

இதனை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வதனால் பல நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இதற்கு பரிசோதனைகள் செய்வது அவசியமாகும்.

அந்தவகையில் தற்போது 35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

பாப் ஸ்மியர்

இது பெண்கள் 40 வயதினில் செய்து கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்று நோய் நிறைய பெண்களுக்கு இந்த வயதில் தாக்குகிறது.

இந்த பாப் ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்வதால் ஆரம்ப நிலையிலேயே தடுக்கலாம். ஒரு தடவை செய்தால் 3 வருடங்களுக்கு பிறகு செய்தால் போதும்.

தைராய்டு டெஸ்ட்

பெண்களுக்கு இது 35 வயதிற்கு பின் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். இது முக்கியமான சுரப்பி , பல்வேறு ஹார்மோன்கள் இதனாலேயே இயங்குகின்றன. ஆகவே தைராய்டு டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

மெமோகிராம்

மார்பக புற்று நோயை கண்டறியும் சோதனையாகும். 30 வயது தாண்டினாலே செய்து கொள்ளலாம்.

இது சிறு கட்டிகளையும் காண்பித்துவிடும். இதனால் மிக ஆரம்ப நிலையில் இருக்கும் புற்று நோய்கட்டிகளையும் கண்டறியப்படுவதால், மார்பக புற்று நோயை தடுக்கலாம்.

எலும்பு சோதனை

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சம நிலையற்ற நிலையில் இருக்க நேரிடுவதால், விட்டமின் டி மற்றும் கால்சியம் போதிய அளவு உடலில் எடுத்துக் கொள்ளப்டாமல் இருக்கும். இதனால் எலும்பு தேய்மானம் உண்டாகும்.

இதனால் எலும்பின் அடர்த்தியை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். போதிய அளவு விட்டமின் டி மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இதயம்

அதிகப்படியான மன அழுத்தம், ஹார்மோன்களின் சம நிலையற்ற தன்மையால் உடல் பலவிதங்களில் பாதிக்கும். அதில் இதயமும் ஒன்று. அதோடு கொழுப்புகளும் அதிகமாக உடலில் சேரும்.

அதனால்தான் 40 வயதிற்கு பின் பெண்களின் உடல் பருமன், இதய நோய்கள் வரக் காரனம். ஆகவே இதயத்தையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பப்பை புற்று நோய் சோதனை

கர்ப்பப்பை புற்று நோய் இது மெனோபாஸிர்கு பிறகு வைரஸால் தாக்கப்படுவது ஆகும். இதனை தடுக்க மெனோபாஸ் காலங்களில் கட்டாயம் கர்ப்பப்பை புற்று நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை வியாதி சோதனை

பெண்கள் டைப் 2 சர்க்கரை வியாதியால் அதிகம் பாதிக்க்ப்படுகிறார்கள். அடிக்கடி உணவு வெளியில் சாப்பிடுபவர்கள், போதிய உடல் உழைப்பு இல்லதவர்கள் கட்டாயம் இந்த சோதனையையும் செய்து கொள்ள வேண்டும்.

35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனை செய்திடுங்க.. இல்லையென்றால் ஆபத்தாம்! Source link

Related Post

- 3

மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்?

Posted by - அக்டோபர் 20, 2020 0
மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்?   மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு…
- 5

பெண்களே உஷார்! இந்த அறிகுறி இருந்தால் ஹார்மோன் பிரச்சனையாக கூட இருக்குமாம்

Posted by - நவம்பர் 5, 2020 0
பெண்களே உஷார்! இந்த அறிகுறி இருந்தால் ஹார்மோன் பிரச்சனையாக கூட இருக்குமாம் தற்போதைய காலத்தில் பெண்களுக்கு தாக்கும் ஒரு பிரச்சினை தான் ஹார்மோன் பிரச்சனை. இது அதிக…
- 7

சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்?

Posted by - பிப்ரவரி 20, 2021 0
சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்? பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(பிசிஓஎஸ்) என்கிற சினைப்பை நீர்க்கட்டிகள் உலகில் சுமார் 3 முதல் 10% பெண்களுக்கு வரக்கூடியது. மாதம் ஒரு…
- 11

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்! ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Posted by - ஜனவரி 21, 2021 0
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்! ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவதாக அதிகமாகவுள்ள புற்றுநோய் வகையாக கர்ப்பப்பை வாய்…
- 13

பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க

Posted by - ஜனவரி 25, 2021 0
பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உணவு மட்டும் போதாது சில குறிப்புகளையும் பின்பற்ற…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன