5 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 5 மாத குழந்தை

1219 0

5 மாத குழந்தை வளர்ப்பு

5 மாத குழந்தை வளர்ப்பு:

  • எப்போது திட உணவு கொடுக்க வேண்டும்?
  • என் குழந்தை எப்போது உட்காரும்?

உங்கள் குழந்தையால் பிறழ முடியும் !

உங்களைப் போல உங்கள் குழந்தையால் இன்னமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. ஆனால் தான் கோபமாக இருப்பதையும், அசதியாக அல்லது மகிழ்ச்சியாக இருப்பதையும் உங்களுக்கு அவள் தெரியப்படுத்துவாள். தன் கைகளை தூக்குவதன் மூலம் தன்னை தூக்கிக்கொள்ள வேண்டும் என்று தன் அன்பை உங்களுக்கு வெளிப்படுத்துவாள். நீங்கள் அறையை விட்டு செல்லும்போதும் அவள் அழவும் செய்யலாம்.

ஏறத்தாழ இப்போது, அவள் அதிக வலிமை அடைகிறாள். அவளை தரையில் உட்கார வையுங்கள், சிறிது நேரம் அவளால் தானாக உட்கார முடியும் என்பதை நீங்கள் காணலாம். அவளை சுற்றி தலையணைகளை வைத்துவிட்டு, அவள் விழாமல் தடுக்க அருகிலேயே இருங்கள்.

உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் அவள் திடீரென்று உருண்டுவிடலாம் ! அவள் உருண்டுவிடாதபடி, அவளை படுக்கையின் மேல் அல்லது உயரமான இடங்களில் விட்டுவிடாதீர்கள். தரையில் ஒரு சுத்தமான துணியின் மீது அவள் படுத்திருக்கும்போது, அவளுடைய நேப்பியை மாற்றலாம்.

உங்கள் குழந்தையின் கண்பார்வை இன்னும் வளர்ச்சியடைந்துகொண்டு தான் இருக்கிறது. இப்போது அவளால் சிறு பொருட்களை பார்க்க முடியும், நகரும் பொருட்களை பின் தொடர்ந்து பார்க்க முடியும். அவளுடைய விருப்பமான பொம்மையை, அதன் முனை மட்டும் தெரியும்படி மறைக்க முயற்சி செய்யுங்கள். அதை கண்டுபிடிப்பது அவளுக்கு உற்சாகமூட்டும் !

இப்போது உங்கள் குழந்தையால் நீங்கள் செய்வதை திரும்ப செய்ய முடியும். உங்கள் நாக்கை வெளியே நீட்டுங்கள், உங்கள் கன்னத்தை உப்பும்படி செய்து குத்துங்கள், அதை பார்த்து அவள் செய்கிறாளா என்று பாருங்கள்.

இப்போது உங்கள் குழந்தை ஏறத்தாழ உங்களையும் என்னையும் போலவே உலகத்தை பார்க்கவும் கேட்கவும் முடியும். அவளுடைய உறவாடும் திறனும் வேகமாக வளர்ச்சியடைகின்றது.

அவளுடைய சத்தங்கள் அவளுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. அவள் மகிழ்ச்சியாக, ஆர்வமாக அல்லது ஒரு பிரச்சனையை தீர்த்ததனால் திருப்த்தியாகவும் இருக்கலாம்.

’பா’, ‘மா’, ’கா’ போன்ற ஓசைகளை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தி அவள் மழலைமொழி பேசலாம். அவள் பேசுவதற்கு முன்னேற்றம் அடைவதற்கு முன்பாக இவை அனைத்தும் நடைபெறும்.

எப்போது திட உணவு கொடுக்க வேண்டும்?

4 மாத குழந்தை வளர்ப்புதிட உணவை சாப்பிடுவது ஒரு முக்கியமான நிலையாகும்!

 

திட உணவை சாப்பிடுவதற்கு உங்கள் குழந்தை தயாராக உள்ளதா என்பதை உங்களால் சொல்லிவிட முடியும். அதற்கு 6 மாதம் ஆக வேண்டும். திட உணவைத் தொடங்குவதற்குத் தயாராக உள்ள குழந்தை பொதுவாக கீழ்க்கண்டவற்றைச் செய்யும்:

  • தனது தலையை உயர்த்தி வைத்துக்கொள்ளும்.
  • உதவியுடன் அதனால் நன்றாக உட்கார முடியும். உங்கள் குழந்தையை நீங்கள் முதலில் உங்கள் மடிமீது உட்கார வைக்க வேண்டும்.
  • மெல்லுவது போன்ற அசைவுகளை அது செய்யும். உங்கள் குழந்தையால் உணவை தனது கடைவாய்க்குள் தள்ளி அதனை விழுங்க முடிய வேண்டும்.
  • நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் அதற்கு ஆர்வம் ஏற்படும் மற்றும் அதற்காகத் தனது கைகளை நீட்டும், இது, அவர்கள் திட உணவு சாப்பிடுவதற்கு தயாராகிவிட்டதற்கான அறிகுறியாகும்.
  • குழந்தைக்கு ஆரோக்கியமான எடை இருத்தல். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பிறப்பு எடை இரட்டிப்பாகும்போது மிருதுவான திட உணவு சாப்பிடுவதற்குத் தயாராகிவிடுகின்றனர். இது வழக்கமாக 6 மாதங்களில் நிகழ்கிறது.

உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கு முன்பேகூட இந்த அறிகுறிகளைக் காட்டலாம். ஆனால், மசித்த உணவுகளைக் கொடுப்பதற்கு நீங்கள் 6 மாதங்கள் வரை காத்திருப்பது பாதுகாப்பானதாகும்.

அச்சமயத்தில் குழந்தையின் ஜீரண மண்டலமும் மேலும் பலம் பெற்றுவிடும். அதாவது, குழந்தைக்கு வயிற்றுப் பிரச்னை அல்லது உணவுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

என் குழந்தை எப்போது உட்காரும்?

உங்கள் குழந்தை 4-7 மாதங்களுக்கிடையில் உட்காருவதற்கான போதிய அளவு வலிமையைப் பெறுகிறது.

குழந்தையை உங்கள் மடியில் உட்கார வைத்தாலோ அல்லது தரையில் விட்டாலோ, நீங்கள் பிடித்துக் கொள்ளாமலேயே அதனால் ஒரு நொடிக்கு உட்கார்ந்திருக்க முடியலாம்.

உங்கள் குழந்தை உட்கார உதவும் பொருட்டு, நன்கு பரவலாக இருக்கும்படியும், அதன் எடையை சமன் செய்யும் வகையிலும், அதன் கால்களை நகர்த்தி வையுங்கள். இது குழந்தை விழுந்துவிடும் இடரைக் குறைக்கிறது. இந்த நிலையில் அது அமர்ந்தவுடன், அதற்கு விருப்பமான ஒரு விளையாட்டுப் பொம்மையை அதன் முன்னால் போடுங்கள்.

குழந்தை கீழே விழுந்தால் அடிபடாத வகையில், அதனைச் சுற்றி தலையணைகள் அல்லது கம்பளிகளை அணைவாக வையுங்கள். அதனைக் கவனிப்பதற்கு, அருகிலேயே இருங்கள்.

குப்புறப் படுத்தபடி விளையாடுவதற்கும் உங்கள் குழந்தையை நீங்கள் தூண்டலாம். ஒரு பொம்மையைப் பார்ப்பதற்காக தனது தலையையும், மார்பையும் தூக்குவது, அதன் கழுத்து தசைகள் வலுவடைவதற்கு உதவுவதுடன், உட்காருவதற்கு அதற்குத் தேவைப்படுகின்ற தலைக் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும். குழந்தையை உங்கள் தொடையில் நிற்க வைத்து, அதனை மேலும் கீழுமாகக் குதிக்கச் செய்வதன் மூலம், அதன் கால்கள் வலு பெறவும் நீங்கள் உதவலாம். அது குழந்தையை குலுங்கக் குலுங்க சிரிக்கச் செய்யலாம்!

குழந்தைக்கு 8 மாதங்களாகும்போது, எவ்விதமான ஆதரவுமின்றி, அதனால் உட்கார முடிய வேண்டும்.

 

குழந்தை அழுவாதற்கான கரணங்கக்கள்>>>

குழந்தை பராமரிப்பு : 0 – 12 மாதம் வரை >>>

Related Post

11 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 11 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019 0
11 மாத குழந்தை வளர்ப்பு 11 மாத குழந்தை வளர்ப்பு அவள் வீட்டுக்கு அருகே இருக்கும் எளிமையான கொண்டாட்டங்களை விரும்புவாள். தன்னை சுற்றி அதிகமான மக்கள் இருந்தால்…
8 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 8 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019 0
8 மாத குழந்தை வளர்ப்பு 8 மாத குழந்தை வளர்ப்பு:  என் குழந்தையுடன் உணவு நேரங்கள் என் குழந்தை நடக்கத் தொடங்கிவிட்டது! கவனிக்கவும் ! அங்கே ஒரு…
1 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : முதல் மாதம்

Posted by - அக்டோபர் 20, 2019 0
1 மாத குழந்தை வளர்ப்பு 1 மாத குழந்தை வளர்ப்பு என்பது சவாலான செயல்தான், நம் இரண்டு கண்களையும் குழந்தை மீதே வைது இருக்க வேண்டும். ஏறத்தாழ…
5 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 10 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019 0
10 மாத குழந்தை வளர்ப்பு 10 மாத குழந்தை வளர்ப்பு உங்கள் குழந்தைக்கு  எந்தத் திட உணவு சிறந்தது? உங்கள் குழந்தையால் வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியும்! எளிமையான…
9 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 9 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019 0
9 மாத குழந்தை வளர்ப்பு 9 மாத குழந்தை வளர்ப்பு:  அவளை அதிகமாகப் புகழுங்கள்… ! உங்கள் குழந்தை உங்களை பின்பற்ற முடியும் உங்கள் குழந்தை அவளுடைய சுற்றுச்சூழலுக்கும்,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன