8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்.

359 0

திருவிளையாடற்
புராணம்

8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்.

8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்.

கருணைக் கடலாகிய சோமசுந்தரக் கடவுள் தடாதகைப் பிராட்டியைப் பார்த்து “இவன் ஒருவன் பசியை உங்களால் அடக்க முடியவில்லையே” என்று பரிந்து பேசினார். அவன் பசியால் துள்ளிக் குதித்தான். எது கிடைத்தாலும் அள்ளிப் பருக ஆவல் காட்டினான். உலகுக்கெல்லாம் உணவு அளிக்கும் அம்மை ஆகிய அன்னபூரணியை அழைத்தார். இறைவன் பணி கேட்டு தயிர்ச் சோற்றுக் குழிகள் நான்கினைக் கொண்டு வந்து
நிறுத்தினாள்.

சோற்றைக் கண்டதும் பசி மூண்டது. அள்ளி அள்ளி வயிற்றில் போட்டு அடைத்தான்; வாங்கி வாங்கி வாய் மடுத்ததும் உடம்பெல்லாம் வயிறாக வீங்கியது. நீர் வேட்கையால் தரை இடிபட மலை ஏறக் கீழே விழுந்து புரண்டான்; குடிக்க நீர் வேண்டிக் கதறினான்; எங்கு நீர் கிடைக்கிறதோ அங்கெல்லாம் தேடி அலைந்தான். ஆறு, குளம், குட்டை, ஏரி வாய்க்கால்களில் அங்கு உள்ள தண்ணீர் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் வறண்டு போகும்படி வாய் வைத்துக் குடித்தான்.

அப்பொழுதும் அவன் வேட்கை அடங்கவில்லை. சுந்தரேசரிடம் வந்து அவர் காலடிகளில் விழுந்து “தண்ணிர் வேண்டும்” என்று முறையிட்டான். அவன் குறையறிந்து இறைவன் தன் சடை மீது இருந்த கங்கையை விளித்து “நீ பகீரதன் பொருட்டு அன்று பாய வட நாடு செழித்துக் கிடக்கிறது; தமிழகத்தில் ஆறுகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது; காவிரி ஒன்று போதாது; அது சோழ நாட்டுக்குச் சோறு தருகிறது. பாண்டிய நாட்டுக்கும் ஒரு நதி தேவைப்படுகிறது; நீ இங்குப் பாய்ந்து ஓடு” என்று கட்டளை இட்டார்.

குண்டோதரனைப் பார்த்து நீ வை கை என்றார்; அவ்வாறு சொன்னதும் அவன் நீர் வரும் திக்கு நோக்கிக் கைகளை விரித்துப் பிடித்துக் காத்திருந்தான். வெள்ள மெனப்பெருகி வந்த நீரை உள்ளம் உவந்து வேட்கை தீரக் குடித்தான்.
பசியும் தாகமும் தணிந்தன. அவன் வயிறு குளிர்ந்தது; அவன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்து சோமசுந்தரரை உணர்ச்சி ததும்பத் துதித்துப் பாடினான். அருட் பாடல் கேட்டு இறைவன் அவனைச் சிவ கணத் தலைவனாக்கி உயர்பதவி அளித்து மகிழ வைத்தார். திருமண வைபவம்முடிந்து மன்னனாக இருந்து அப்பாண்டிய நாட்டைச் சோமசுந்தரக் கடவுள் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தார்.
கங்கை நதி பாய்ந்ததால் வைகை நதியில் நீர்ப் பெருக்கு மிகுந்தது; அது புண்ணிய நதியாக மாறியது. அதனால் அதில் நண்ணி நீராடியவர்கள் நற்கதி அடைந்தனர். கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை அன்றே சிவபெருமான் உருவாக்கி வைத்தார்.

சிவனின் சடையில் இருந்து இறங்கி வந்ததால் அது ‘சிவகங்கை’ என்றும், அதில் முழுகுபர் ஞானம் பெறலாம் என்பதால் ‘சிவஞான நதி’ என்றும், காற்றினும் வேகமாகக் கடுகி வரலால் ‘வேகவதி’ என்றும் பெயர் பெற்றது. நூல்கள் இதனைப் புகழ்ந்து பேசுவதால் ‘கிருத மாலை’ என்றும் இது வழங்கலாயிற்று. புண்ணிய நதிகளுள் இது ஒன்றாக விளங்கியது.


8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம். – திருவிளையாடற்
புராணம்

Related Post

48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் பாண்டிய நாட்டிலே தென் திசையில் ஓர் ஊரில் ஒரு தாமரைக்…

22. யானை எய்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 22. யானை எய்த படலம் 22. யானை எய்த படலம் சோம சுந்தரருக்கு அமைத்த இந்திர விமானத்துக்கு அருகே வடக்கே அழகிய ஒரு கோயில்…

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் சித்திரைத் திங்களில் சித்திரை நாளில்…

15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 15. மேருவைச் செண்டால் அடித்த படலம் 15. மேருவைச் செண்டால் அடித்த படலம் அகத்திய முனிவர் அறிவித்தபடி திங்கள் நாள் விரதத்தை விடாமல் தொடர்ந்து…

49. திருவாலவாயான படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 49. திருவாலவாயான படலம் 49. திருவாலவாயான படலம் சுகுண பாண்டியனுக்குப்பின் அவனுடைய வாரிசுகளில் குறிப்பிடத் தக்கவன் வம்மிச சேகர பாண்டியன் ஆவான். அவன் காலத்தில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot gacor yang tepat
  21. slot dana
  22. harum4d slot