9 . எழுகடல் அழைத்த படலம்

405 0

திருவிளையாடற்
புராணம்

9 . எழுகடல் அழைத்த படலம்

9 . எழுகடல் அழைத்த படலம்

நாட்டுக்கு அரசனாக உலகை ஆட்டுவிக்கும் இறைவன் இருந்து ஆட்சி செய்து வந்த நாளில் காட்டுக்குள் திரிந்து தவம்செய்த முனிவர்களும் தவசிகளும் சந்திக்க அங்கு வந்து கூடுவார் ஆயினர். வேதம் கற்ற முனிவன் ஆகிய கவுதமனும் அங்கு வந்து திரும்பும் வேளையில் காஞ்சன மாலையின் இல்லத்து வந்து அமர்ந்தார். அவளும் வரவேற்று முகமன் உரை வழங்கிப் பொன் ஆதனம் இட்டு அஞ்சலி செய்து அரிய தவத்தின் திறம் அறிந்து கொள்ளக் கேட்டாள். தவம் என்றால் என்ன? அதன் அவசியம் யாது? அதனால் உண்டாகும் பயன் யாது? என்று கேட்கத் தொடங்கினாள்.

“உலகீன்ற தடாதகைக்கு நீ தாயானாய்; சிவனுக்கு மருகன் என்னும் சீர் பெற்றாய்; மலையத்துவசனின் மனைவியாக இருந்து பெருமை பெற்றாய். நீ அறியாத தவ விரதங்கள் எவை இருக்கின்றன? என்றாலும் வேத நூலில் உள்ளதைச் சொல்கிறேன் என்று கூறினான்.
“மானதம், வாசிகம், காயிகம் எனத் தவம் மூன்று வகைப்படும். அவற்றுள் சிவனைத் தியானித்தல், புலனடக்கம். தரும தானங்கள் மானதம் எனப்படும். வாசிகமாவது ஐந்தெழுத்து ஓதல்; வேத பாராயணம் செய்தல், தோத்திரங்கள் தருமங்கள் எடுத்துப் பேசுதல் முதலியனவாம். காயிகமாவது சிவத்தலங்களுக்கும் கோயில்களுக்கும் சென்று தீர்த்தங்களில் நீராடி வழிபடுதல் முதலியனவாம். கோயில் திருப்பணியும். இவற்றுள் அடங்கும். இவற்றுள் இம்மூன்று தவங்களுள் காயிகமே மேலான்து ஆகும். அனைவரும் எளிதில் செய்யத் தக்கது ஆகும். அவற்றுள்ளும் தீர்த்த யாத்திரையே மிகச் சிறந்தது ஆகும். கங்கை, யமுனை, முதலிய நீர்களில் நீராடி இறைவனை வழிபடுதல் மிகவும் போற்றத் தக்கதாகும். தனித்தனியாக இந்நீர்களில் நீராடுவதைவிட அது சென்று படியும் கடலில் நீர் ஆடுவது மிகவும் எளியது ஆகும்” என்றான்.

“உப்புக் கரிக்காதா?”

“தப்பு அப்படிச் சொல்வது; சாத்திரம் கூறுவது; அது பழிக்கக் கூடாது” என்றான்.

பொன்மாலைக்குப் புது ஆசை வந்தது. மதுரைக்குக்
கடல் நீர் வருமா என்ற ஆசை உண்டாயிற்று.

கவுதமர் சென்றதும் மகளை அணுகித் தன் ஆசையைத் தெரிவித்தாள்.

“இது என்னம்மா புது ஆசை?”

“உன் கணவனால் முடியாதது என்ன இருக்கிறது; குண்டோதரனுக்குச் சோறு போட்ட போது கங்கையையே அழைக்கவில்லையா, சிவனையே மருமகனாகப் பெற்ற எனக்குச் சீவன் முத்தி அடையச்
செய்வது முடியாதா” என்று மனம் குழைந்து பேசினாள்.

”என்ன அம்மாவிடம் கொஞ்சல்?”

”அது அவர்கள் உம்மிடம் கெஞ்சல்”

”சொல்லு நீ அதை; அதற்காக அஞ்சல்’ என்றார்.

“கடல் வேண்டுமாம் முழுகி எழுவதற்கு, யாரோ முனிவர் சொன்னராம் உடம்புக்கு நல்லது என்று”.

”உடம்புக்கு அல்ல; உயர் தவத்திற்கு உகந்தது”.

“அந்த அவத்தை எல்லாம் எனக்கும் தெரியும்; மருமகனிடம் நேரே சொல்ல வெட்கப்படுகிறாள்”.

”மாமியாரின் லட்சணம் அது தானே; மெச்சினோம்
நாம்; ஒரு கடல் என்ன ஏழு கடலும் கொண்டு வருகிறோம்”.

”அதற்கப்புறம் இங்கு மதுரை இருக்காது; கடல் தான் இருக்கும்” என்றாள்.

“கவலைப்படாதே ஏழுகடல் நீரும் வந்து குவியும்; அதற்கப்புறம் அது தானே வழியும்” என்றார். மதுரையில் கிழக்கே ஒரு குளத்தில் ஏழ்கடல் நீரும் வந்து விழுந்தது. ஏழு நிறங்களோடு அவை விளங்கின.

”காதற் பெண்ணின் கடைக் கண் பார்வையிலே விண்ணையும் சாடுவோம்’ என்று பாரதி சொன்னது இங்கு உண்மையாயிற்று.

தடாதகைப் பிராட்டி காட்டிய குறிப்பில் விடையேறிவரும் விண்ணவன் ஆகிய சிவபெருமான் ஏழுகடலையும் கொண்டு வந்து சேர்த்தார். இதுவும் மதுரைத் தலத்துக்குப் பெருமை சேர்த்தது.


9 . எழுகடல் அழைத்த படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை

பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை

Posted by - மார்ச் 18, 2021 0
பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை (piddukku man sumantha kathai) : ஒரு சமயம்  பாண்டிய நாட்டில் பெருமழை பெய்தது.…

19. நான் மாடக் கூடல் ஆன படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 19. நான் மாடக் கூடல் ஆன படலம்  19. நான் மாடக் கூடல் ஆன படலம் கடல் வற்றிப் போனாலும் செயல் வற்றாத…

62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம் 62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம் அரிமர்த்தன பாண்டியனுக்குப் பின் அவன் சந்ததியர் ஆட்சிக்கு வந்தனர். அவர்களுள்…

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் நல்லான் என்ற வேளாளன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவன்…

முன்னுரை

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் முன்னுரை முன்னுரை தமிழகத்தின் பெருமையே சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும் எழுப்பிய திருக்கோயில்கள்தாம். தேவாரம் திருவாசகம் பாடித் தமிழையும் சைவத்தையும் வளர்த்தார்கள். கோயில்கள் எழுப்பிச் சிற்பக்கலையை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot gacor yang tepat
  21. slot dana
  22. harum4d slot