Aqua Aerobics நீச்சல் பயிற்சி இவர்களெல்லாம் செய்யகூடாது
Aqua Aerobics நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எளிதில் அழகான உடல் வடிவத்தைப் பெறவும் மிகவும் உதவி செய்கிறது.
இப்பயிற்சி உடலுக்கு புத்துணர்வு அளிக்கிறது. இது தவிர உடல் ஆரோக்கியத்தையும் பேணிக் காக்கிறது.
நீரானது காற்றைவிட 800 மடங்கு அடர்த்தியாக இருப்பதால், நீங்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிக்கு இயற்கையாகவே ஒரு எதிர்ப்புசக்தி எப்போதும் உங்களுக்கு இருக்கும். இதனால் நீச்சல் குளத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு அசைவுக்கும் கூடுதல் ஆற்றல் செலவாகும்.
எடுத்துக்காட்டாக, நீரில் நீங்கள் ஜாகிங் செய்தால், நிமிடத்துக்கு 11 முதல் 12 கலோரிகள் வரை குறையும். ஆனால் ஜிம்மில் ஒரு நிமிடத்துக்கு 8 முதல் 9 கலோரிகள் மட்டுமே செலவாகும்.
அகுவா ஏரோபிக்ஸ் பயன்கள்
- அகுவா ஏரோபிக்ஸ், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை அதிகரித்து, உடலின் எல்லா முதன்மையான தசைப் பகுதிகளையும் வலுவாக்கும்.
- அகுவா ஏரோபிக்ஸ் கார்டியோவாஸ்குலர் ஃபிட்னெஸ் வலிமைக்கான பயிற்சிகளுக்கு உதவுகிறது.
- நடன அசைவுகளும், சீரான அசைவுகளும் இதில் இருப்பதால், உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிக்கிறது.
- செரிமானம், ரத்த ஓட்டம் போன்ற செயல்பாடுகளைத் தூண்டி, மனஅழுத்தத்தையும் குறைக்கும்.
- நீரின் மிதக்கவைக்கும் தன்மை, உடல் எடையை பெருமளவு குறைப்பதால், மூட்டுகள் மற்றும் தசைகளில் சுமையை குறைக்கும்.
இப்பயிற்சி செய்ய தகுதியானவர்கள்
எல்லா வயதினரும் அகுவா ஏரோபிக்ஸை தாராளமாகச் செய்யலாம். ஆனால் கர்ப்பமடைந்த பெண்கள், மூட்டு பிரச்சினைகள் கொண்ட முதியவர்கள், மற்றவர்கள் பார்க்குமாறு ஜிம்மில் பயிற்சி செய்ய தயங்குபவர்கள் போன்றவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்ள கூடாது. ஆனாலும் ஒரு டாக்டரின் ஆலோசனையைப் பெற்ற பின் செய்வது மிகவும் நல்லது.
…
Aqua Aerobics நீச்சல் பயிற்சி இவர்களெல்லாம் செய்யகூடாது Source link