சிட்டுக்குருவி

பாரி வள்ளலின் குடும்பத்தின் பசியைப் போக்கிய சிட்டுக்குருவிகள் இன்று பட்டினியில்

1734 2

சிட்டுக்குருவி (chittu kuruvi)

சிட்டுக்குருவி (chittu kuruvi) , இது “பசரீன்கள்” என்னும் குடும்ப தொகுதியைச் சார்ந்த முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினமாகும். இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், ஊர்க்குருவிகள், அடைக்கலக்குருவிகள் (கேரளத்தில்) , சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

இந்த அழகிய பாடலை நீங்ககள் மறந்து இருக்க முடியாது,

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திடக் கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே
வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து
மோதிடக் கண்டேனே! (சிட்டு)

செல்லப்பறவை சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி
ஐரோப்பிய மர சிட்டுக்குருவி

சிட்டுக்குருவியின் வாழ்க்கைமுறை

சிட்டுக்குருவிகள் பல நிறங்களில் காணப்படும ( பழுப்பு சாம்பல், வெள்ளை, மங்கலான ). கூம்பு போன்ற வடிவ அலகுகளை கோண்ட இக்குருவிகள்  27 முதல் 39 கிராம் எடை கொண்டவை.

இச்சிட்டுக்குருவிகள் இறகுகளுக்குக் கீழே இவற்றின் அலகை வைத்து தூங்குகின்றன.

தூங்கும் சிட்டு குருவி
தூங்கும் சிட்டு குருவி
சிட்டு குருவி முட்டைகள்
கூட்டில் உள்ள முட்டைகள்

இச்செல்ல குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். இவற்றின் முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும்.

ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றது. இதன் குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்க்கப்படுகின்றன; அவை பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடும்.

சிட்டு குருவிகள் சராசரி வேகம் 45.5 km/h (28.3 mph) மேலும் 1 நொடிக்கு சுமார் 15 முறை சிறகுகள் அடிக்கின்றன. இந்த அழகிய சிட்டுக்குருவியின் வாழ்நாள் தோராயமக 13 ஆண்டுகள்.

சிட்டுக்குருவியின் வகைகள்

சிட்டுக்குருவி - 5

  • மெல்லிய கோடுகளைக் கொண்ட புல்வெளிக் குருவிகள்
  • மாலைச் சிட்டுகள்
  • தேன் சிட்டு
  • காட்டில் வாழும் நரிச் சிட்டுகள்
  • வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள்
  • கறுப்புச் சிட்டுகள்
  • வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டையைப் பெற்றவை
  • வீட்டுச் சிட்டுக்குருவி

என குருவிகளில் பல வகைகள் உள்ளன.

ஆண் சிட்டுக்குருவி

ஆண் சிட்டுக்குருவியின் தலை, வால், முதுகு, மேல் பகுதி சிறகுகள், பிடரி போன்றவை பழுப்பு கலந்த கருத்த சாம்பல் நிறமும், மேல் முதுகும், இறக்கைகளும் கருப்பு பழுப்பு மற்றும் ஆழ்ந்த பழுப்பு கலந்த நிறத்துடன் காணப்படும்.

பெண் சிட்டுக்குருவி

பெண் சிட்டுக்குருவியின் உடலின் மேல் பகுதியில் மஞ்சள் கல்ந்த பழுப்புக் கோடுகளும், இஹ்டன் உடலமைப்பு சாம்பல் தோய்ந்தும் காணப்படும்.

இதன் மூலம் இக்குருவிகளை மற்ற பறைவகள் போல் இல்லாமல் மிக எளிதில் ஆண் மற்றும் பெண் பறவைகளை அடையாள்ம் கண்டு  கொள்ள முடியும்.

வசிப்பிடம்

இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சிட்டு குருவி இனங்கள் உள்ளன.

இவை வீடுகளின் மறைவான இடங்களிலும், மரத்திலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களின் துனைகொண்டு கூடு கட்டி வாழ்கின்றது ( வாழ்ந்தது ! ). இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்றாக சேர்ந்து இரவு பொழுதை கழிக்கின்றது.

சிட்டுக்குருவியின் உணவுப் பழக்கம்

ஒரு பெண் வீட்டுச் சிட்டுக்குருவி அரிசி தானியங்களை உண்ணுதல்
ஒரு பெண் வீட்டுச் சிட்டுக்குருவி அரிசி தானியங்களை உண்ணுதல்

இந்த சின்ன சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள் ஆகும், அதாவது அந்நேரத்தில் எந்த உணவு கிடைக்கின்றதோ அதை உண்ணக்கூடியது. சில குருவிகள் பூ மொட்டுகளை உண்ணுகின்றது.

Chittu kuruvi
ஓட்டலில் எஞ்சிய உணவை இரண்டு பெண் சிட்டுகள் உண்ணுதல்.

பெரும்பாலான இடங்களில், வெட்டுக்கிளிகள் மற்றும் விட்டிகள் போன்றவையே இதன் குஞ்சு குருவிகளுக்குக் கிடைக்கும் மிகுதியான உணவுகள் ஆகும்.

மேலும் இதன் முக்கிய உணவு தானியங்களே ஆகும். நெல், மக்காச் சேளம், பயிறு வகைகள், சோளம், புல்லரிசி, கோதுமை போன்றவற்றை இவை விரும்பி சாப்பிடுகின்றன. கிராமப்புறங்களில் வீட்டுவாசலில் கட்டி தொங்கவிடப்படும் நெற்கதிர்களை இந்த அழகிய குருவிகள் மனிதர்களின் பயமின்றி உண்கின்றன.

உடல் பராமரிப்பு

சிட்டுக்குருவி
சிட்டு குருவி குளியல்

இந்த குட்டி குருவிகள் அடிக்கடி கூட்டமாக இருக்கும்போது புழுதி குளியல் அல்லது தண்ணீர் குளியல்கள் என பொழுதை கழிக்கின்றன.

மனிதர்களுடன் உறவுகள்

காகத்திற்கு அடுத்தபடியாக மனிதன் நன்கு அறிந்த பறவை இந்த சிட்டுக்குருவிகளே.

சிட்டுக்குருவி - 10

வீட்டுச் சிட்டுக்குருவிகள் மனிதர்களுடன் மிக நெருக்கமாகத் தொடர்புடையது. இவை தோராயமாக 10,000 ஆண்டுகளுக்கு முன் இருந்தே மனிதர்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக அறியப்படுகிறது.  இக்குட்டி வீட்டு குருவிகள் பூச்சிகளை உண்டு மனிதர்களுக்கு நன்மையை தருகின்றது..

இச்செல்லக குருவிகள் வனப்பகுதிகளில் வாழ்வதை விட மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே பெரும்பாலும் விரும்புகின்றது.

தமிழ் இலக்கியங்களில் சிட்டுக்குருவி

தொல்காப்பியத்தில் தொல்காப்பியரும், மேலும் பாரதியாரும் தன்நுடைய கவிதைகளில் இக்குருவியின் பெருமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். புறநானூற்றுப் பாடலில் இந்த குருவிகளை ‘குரீஇ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தச் சொல்லே பின் மருவிக் குருவியானது.

மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் சங்க இலக்கியங்கள் ‘மனையுறைக் குருவி’ என்று சிட்டு குருவி குறிப்பிடுகின்றது.

பழக்கப்பட்ட இந்த குருவிகள் பறம்புமலையை மூவேந்தர்களும் முற்றுகை இட்டிருந்தபோது பாரி வள்ளலின் குடும்பத்தின் பசியைப் போக்க நெற்கதிர்களைக் கொண்டுவந்து கொடுத்ததாக ஒரு பாடல் தெரிவிக்கிறது.

வண்புகழ் பாரி பறம்பின்
நிறைபறைக் குரீஇ இனம் காலை போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஒராங்கு
இரைதேர் கொட்பின ஆகி பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந்து ஆங்கு
வருவர்

                                      – அகம் 303

செல்லப்பறவையின் இன்றைய பரிதாப நிலை

கடந்த சில 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை திரும்பிய திசை என எல்லா இடங்களிளும் சிறகடித்து பறந்து கொண்டிருந்த இந்த செல்ல குருவிகள் இன்று மனிதரை விட்டு விலகிச்செல்ல காரணம் ? நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளிலும் கூடுகட்டி வாழ்ந்தவை இன்று மாயமானதன் மர்மம் !

சிட்டு குருவியின் மரணம்
சிட்டு குருவியின் மரணம்

இந்த அழகிய சிட்டுக்குருவிகளை இனி கற்பனை மற்றும் கதைகளிலும் மட்டுமே பார்க்க முடியும் என்ற அளவுக்கு, அழிவின் விளிம்புக்கு இதன் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது.

வலிமைபடைத்த உயிரினங்களின் வாழ்க்கையையே கபளீகரம் செய்துவிட்ட உலகமயமாக்கலின் ராட்சச கரங்கள், மிகச்சிறிய இந்த சிட்டுக்குருவிகளை மட்டும் விட்டுவைக்குமா என்ன?.

ஆம் இப்போது இந்த குட்டி உயிரிமான சிட்டுக்குருவிகள், அழிந்து வரும் அரியவகைப் பறவை இனமாகிவிட்டது. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டது.

சுற்றுச் சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச் சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன.

உயிர்வாழ்தல் விகிதம்

சிட்டு குருவியின் மரணம்
சிட்டு குருவியின் மரணம்

பெற்றோரின் கவனிப்பில் இருந்து பறக்க பழகி விடுபட்ட பிறகு, இளம் சிட்டு குருவிகளின் இறப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அவை வளர வளர இது குறைந்து கொண்டே செல்கிறது. பிறப்பதில் 20 முதல் 25% பறவைகள் மட்டுமே பெற்றோர் ஆகும் வயது வரை உயிரோடிருக்கின்றது.

சிட்டுக்குருவியின் அழிவுக்கான காரணங்கள்

உலகின் பல பகுதிகளிலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த வீழ்ச்சிகள் முதலில் வட அமெரிக்காவில் காணப்பட்டது.

கிரேட் பிரிட்டனில், 1970 களின் பிற்பகுதியில் இவற்றின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்ட்டு பின்பு இதில் தற்போது 68% பறவைகள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டது. சில பகுதிகளில் 90% பறவைகள் அழிந்துவிட்டன. லண்டனில், வீட்டுச் சிட்டுக்குருவி கிட்டத்தட்ட முற்றிலும் மறைந்துவிட்டது. நெதர்லாந்தில் வீட்டுச் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 1980 களில் இருந்த்தை விட இன்று பாதியாகக் குறைந்துவிட்டது.

சமீபத்திய ஆண்டுகளில், பல ஆசிய நாடுகளில் வீட்டுச் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை மிக மோசமாக குறந்து விட்டது. இந்த தாக்கம் இந்தியாவில் மிகவும் தெள்ள தெளிவாகத் தெரிகின்றது.

உலகம் முழுவதும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடுகிறது. மேலும், பல நாடுகள் இதன் அஞ்சல் தலைகளை வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

சிட்டுக்குருவி முற்காலத்தில் உலகின் பல பகுதிகளில் மக்களால் உண்ணப்பட்டது. இன்றும் சில மத்தியத்தரைக் கடல் பகுதிகளில் மனிதர்களால் உண்ணப்படுகிறது.

மனையிடங்களாக மாறி வரும் காடுகள் மற்றும் தோப்புகளால் இதன் வாழ்விடங்கள் மனிதனால் அழிக்கப்படுகின்றது. அடுக்குமாடி குடியிருப்புகள், சிட்டுக்குருவிகள் பொதுவாக வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. இப்போது கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.

நம் இயற்கை வளங்கள் எங்கே !

என, சிட்டுக்குருவி எனும் அந்தச் சின்னஞ்சிறு உயிர்கள் வாழ இடமில்லாத, வறண்ட உலகமாக மாறி வருகிறது இந்தப் பூமிப்பந்து.

மதுரையில் இந்த குருவிக்காக ஒரு கோவிலை சுதந்திர போராட்ட வீரர் கோவிந்தசாமி என்பவர் கட்டியுள்ளார்.

அரிசி மாவு கோலம்
அரிசி மாவு கோலம்

இதன் அழிவிற்கு மற்றொரு காரணம் உணவு  கிடைப்பது தடைபடுதல். ஆம், முன்பெல்லாம் அதிகாலையில் நம் வீட்டின் முன்பு மாவு கோலங்கள் போடுவோம். இவை சிறு பறவைகள், எறும்புகள் போன்றவற்றுக்கு உணவாகும். இன்று மாவு கோலம் முற்றிலும் நகரத்தில் இல்லை. நெல் மற்றும் தானியங்களை வீட்டின் மொட்டை மாடியில் காயவைப்போம் இவையும் நகரத்தில் வழக்கொழிந்துவிட்டது. பறவைகள் நீர் அருந்த இடங்களும் சென்னையில் குறைந்துவிட்டது. நகரத்தில் உருவாகும் அதிகபடியான வாகன சத்தத்தால், கூட்டில் இருக்கும் குட்டிகள் கொடுக்கும் குரல் தாய் பறவைக்கு கேட்பதும் இல்லை.

இவை தவிர இதன் அழிவுக்கு முக்கிய காரணியாக விளங்குவது நாம் கணக்கின்றி கொட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளே.

பூச்சிக்கொல்லி

DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து தானியங்களுக்கு தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக் குருவிகள் இறக்க நேருகிறது. சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக இதையே பல பறவையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். DDT என்ற பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட தானியங்களை உண்ணும் சிட்டுக்குருவிகளின் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி. உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு இனம் அழிவுக்குள்ளாகிறது.

சிட்டுக்குருவி - 15

இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்துவது குருவிகளுக்கு மட்டுமில்லாமல் மனிதர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

இந்த பறவைகளின் முக்கியத்டுவத்தை உணர்த்த மற்றும் பாதுகாக்கப்படுவதற்கு, 2012 இல், புது தில்லி அரசு இதனை ( வீட்டுச் சிட்டுக்குருவி ) தில்லியின் மாநில பறவை என ஆறிவித்த்து.

இனி சிட்டுக்குருவியை (chittu kuruvi) எப்படி காப்பாற்றளாம் ?

சிட்டுக்குருவிகள் (chittu kuruvi) போன்ற பறவை இனங்கள் அழிவது, சுற்றுச்சூழல் சமன்பாட்டில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து தானியங்களுக்கு தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக் குருவிகள் இறக்க நேருகிறது. சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக இதையே பல பறவையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். DDT என்ற பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட தானியங்களை உண்ணும் சிட்டுக்குருவிகளின் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி. உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு இனம் அழிவுக்குள்ளாகிறது.
சிட்டுக்குருவிக்கு உணவு குடி நீர்

வீட்டின் முற்றத்திலும், வாசல்களிலும் சுதந்திரமாக வந்து தானியங்களை கொத்தித்தின்ற பறவையான சிட்டுக்குருவி இனி பாடப் புத்தகத்திலும், படங்களிலும் மட்டுமே இடம்பெறும் நிலைக்கு வந்துள்ளது.

சிட்டுக்குருவி - 18

நவீனத்தின் கொடும் சக்கரங்களில் சிக்கி சிதையும் இயற்கையின் அரிய படைப்பான எளிய சிட்டுக்குருவிகளை எப்படிக் காக்கப் போகிறோம்?

சிட்டுக்குருவிக்கு கூடு…

வீடுகளில் சிட்டுக்குருவிகள் தங்கும் வகையில் கூடுகளை அமைத்து, அந்த இனத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சிட்டுக் குருவிகளை மீண்டும் வரவைப்பதற்கு, அவை இனப்பெருக்க செய்வதற்கு தேவையான கூடு இன்று விற்கபடுகிறது. அவற்றை நீங்கள் உங்கள் வீட்டில் தொங்கவிடலாம். அல்லது அட்டைபெட்டி ஒன்றில் குருவி வந்து போகும் அளவு ஓட்டை போட்டு, வீட்டின் முன்பு, பூனை போன்ற உயிரிணங்களுக்கு எட்டாதவாறு அல்லது மரத்திலோ தொங்க விட்டால் கூட சிட்டுக்குருவிகளுக்குப் போதுமானது என்கிறார்கள் பறவை ஆர்வலர்கள்.

சிட்டுக்குருவி - 20

ஒரு பாத்தரத்தில் நீர் மாடியில் வைத்துவிடுங்கள். மற்றும் சிறு தட்டில் அரசி, தானியங்கள் போன்றவற்றை கொட்டி வைத்தால் சிட்டுக் குருவிகளை நகரத்திலும் வரவைக்கலாம். இவையெல்லாம் செய்தால் உடனே வருமா என்றால்? உடனே வராது என்று சொல்லலாம். வருவதற்கு சில மாதங்கள் ஆகும். பறவைகளுக்கு இங்கு சென்றால் ஆபத்து இல்லை என்று தெரிந்து அருகில் வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதால் பொறுமையாக இவற்றை செய்து வரவேண்டும்.

ஆரம்பத்தில் நிங்கள் வைக்கும் நீர், உணவு போன்றவற்றை சாப்பிட வேறு சில பறவைகளும் வர தொடங்கும். அவற்றை விரட்டாதிர்கள். இவற்றுடனே தான் நாம் சிட்டுக் குருவிகளையும் வரவைக்கமுடியும்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அலேபுரம் கிராமத்தினர், சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது ஓர் ஆறுதலான செய்தி.

இந்த இனத்தின் அழிவு நிலையைக்கண்டு புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு தம்பதிகள் அவர்களின் வீட்டில் கூடுகள் அமைத்து பராமரித்து வருகின்றனர்.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில்

ஓசூர், டி.வி.எஸ்., நிறுவனத்தின் சீனிவாசன் அறக்கட்டளை, ஓசூர், தளி மற்றும் கர்நாடக எல்லை பகுதியை ஓட்டியுள்ள, 100 கிராமங்களில் உள்ள வீடுகளில், சிட்டுக்குருவிகள் வாழும் சூழ்நிலையை உருவாக்கி, அவை தங்குவதற்கு அட்டை கூடுகள் வழங்கி, சிட்டு குருவி வளர்க்க மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

சிட்டுக்குருவி - 22

சீனிவாசன் அறக்கட்டளை கள பணியாளர் துரையன் கூறியதாவது:ஓசூர் அடுத்த, கும்மாளாபுரம், கொத்தகொண்டப்பள்ளி, முத்ததுார், தளி சுற்று வட்டார பகுதிளில் உள்ள மொத்தம், 236 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்க திட்டமிட்டு தற்போது, 80 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சிட்டுக்குருவி - 24

கர்நாடக மாநிலம், ஆனைக்கல் பகுதியில், 44 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு இதில், 20 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்கப்பட்டள்ளது. எங்களது இந்த முயற்சியால் தற்போது, 10 ஆயிரம் வீடுகளில் சிட்டு குருவிகள் வாழ்வதற்கு வசதியாக அட்டை கூடுகள் வைக்கப்பட்டுள்ளது. சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள், 13 ஆண்டு தான். இந்த குருவிகள் வனப்பகுதிகளில் வாழ்வதை விட, மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே விரும்புகின்றன.

மொபைல் ஃபோன் கோபுரம் கதிர்வீச்சால் சிட்டு குருவிகள் அழிந்து வருவதாக கூறுவது மட்டும் காரணமல்ல, குருவிகள் வாழ்வதற்கான இருப்பிடம் இல்லாமல் போனதும், வயல்வெளிகளில் பயிர்களுக்கு ரசாயனம் தெளிப்பு அதிகரிப்பே முக்கிய காரணம். சிட்டு குருவிகள் முட்டை இடுவதற்காவே கூட்டை தேடுகிறது.

சிட்டுக்குருவி - 26

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

– பாரதி

100-கிராமங்களில் சிட்டுக்குருவி வளர்ப்பு அழியும் இனத்தைக் காக்க முயற்சி

சிட்டுக்குருவிக்கு கூடு செய்வது எப்படி?

[content-egg module=Youtube template=custom/simple]

காக்கையும், குருவியும் நம் சாதியென்போம் சிட்டுக்குருவிகளை காப்போம்,

நன்பர்களுக்கும் இதை பகிருங்கள்…

நன்றி….

There are 2 comments

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன