கொரோனா வைரசிடம் இருந்து எப்படி தப்புவது?

கொரோனா வைரசிடம் இருந்து எப்படி தப்புவது

2019-nCoV தொற்றுநோயைத் தடுக்க தற்போது அங்கீகரிக்கபட்ட தடுப்பூசியோ அல்லது குணப்படுத்தும் மருந்தோ இல்லை. நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான சிறந்த வழி, இந்த வைரஸுக்கு ஆளாகாமல் இருப்பதே. இருப்பினும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த வைரஸ் பரவுவதை கணிசமாக தடுக்க

முடியும், வந்த பின்பு தவிப்பதை விட வருமுன் கப்பதே சிறந்தது என்பது நம் தமிழ் பழமொழி.

கொரோனா வைரஸ் அறிகுறிகள்

 • மூக்கு ஒழுகுதல்,
 • இருமல்,
 • தொண்டை புண் மற்றும் சில நேரங்களில் காய்ச்சல்

உள்ளிட்ட சாதாரண சுவாச நோய்த்தொற்றுகளுக்கு வரும் அறிகுறிகள் தான்  பெரும்பாலான கொரோனா வைரஸ்களுக்கும் உள்ளன.
சில சந்தர்ப்பங்களில், உங்ககளுக்கு இருப்பது கொரோனா வைரஸா அல்லது ரைனோ வைரஸா (rhinovirus) என்பது உங்களுக்குத் தெரியாது.

ஒரு வேலை கொரோனா வைரஸ் தொற்று, குறைந்த சுவாசக்குழாயில்(lower respiratory tract) (உங்கள் விண்ட்பைப் மற்றும் உங்கள் நுரையீரல்) பரவினால், அது நிமோனியாவை ஏற்படுத்தும், குறிப்பாக வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள்

தற்காப்பு நடவடிக்கைகள்

 • குறைந்தது 20 விநாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்காவிட்டால் குறைந்தது 60% ஆல்கஹால் கொண்டிருக்கும் ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பானை (Hand wash Liquid) பயன்படுத்தவும்.
 • கழுவப்படாத கைகளால் உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்
 • நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
 • நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே இருங்கள்.
 • சில நாட்களுக்கு கோழி போன்று இறைச்சி உணவுகளை உண்ண வேண்டாம்.
 • உங்கள் இருமல் அல்லது தும்மலை கைக்குட்டையில் அல்லது திசு காகிதம் (tissue paper) மூடி, பின்னர் அதை குப்பையில் எறியுங்கள். (இதனால் தங்ககளிடம் இருந்து

நோய் தொற்று பிறருக்கு பரவுவதை கட்டுபடுத்த  முடியும்.)

கொரோனா-வைரஸ்

 • அடிக்கடி தொட்ட பொருள்கள்(சாவி, கைபேசி உறை .. ) மற்றும் மேற்பரப்புகளை(உணவு மேசைகள் போன்ற… ) சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யுங்கள்.
 • 2019-nCoV க்கு ஆளாகியிருக்கலாம் என்று நினைக்கும் நபர்கள் உடனடியாக தங்கள் மருத்துவரை தொடர்பு கொள்க.
 • வெளியில் செல்லும் போது உங்கள் வாயையும் மூக்கையும் நல்ல திசுவால் (mask) மூடுவும்.
 • உங்கள் கை, விரல்களை உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயிலிருந்து விலக்கி வைக்கவும்.

N95 Mask என்றால் என்ன ?

சீனாவிலிருந்து வரும் இந்த  கொரோனா வைரஸ் (2019-nCoV) காரணமாக, பலர் தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க சிறந்த வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். பலரிடம் இருக்கும் இரண்டு பெரிய கேள்விகள்:

 • முகமூடி அணிவது நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்குமா?
 • அப்படியானால், என்ன வகையான முகமூடி?

இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்>>>

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this: