கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

2420 0

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

இது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் (Eastern Ghats), இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலைகளை போல் தொடர்ச்சியாக இல்லாமல்,  அதாவது தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகிறது. இதன் உயரம் சராசரியாக 1000 மீ முதல் 1500 மீ வரை உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த மலைத்தொடர் வடக்கே மேற்கு வங்காளத்தில் தொடங்குகின்றது, பிறகு ஒடிசா, ஆந்திரா வழியாக தமிழ்நாடு வரை பரவியுள்ளது. இதன் சிறுபகுதி கர்நாடக மாநிலத்திலும் உள்ளது.

இது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாகும். தீபகற்ப இந்தியாவின் 4 முக்கிய ஆறுகளான காவேரி, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா,  ஆகியவை இம்மலைத் தொடர்களின் இடையே பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பே ஆகும். இம் மலைத்தொடர் வங்காளவிரி குடாவிற்கு இணையாக நீண்டிருக்கிறது.

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

மலைவளம்

இம்மலைத்தொடர் முழுவதும்

 • பாக்சைட்
 • சுண்ணாம்புக்கல்
 • இரும்பு தாது

போன்ற கனிமங்களும், மேலும் சார்னோகைட் பாறைகள், கருங்கல் பாறைகள், உருமாறிய தகட்டுப்பாறையான கோண்டாலைட் மற்றும் படிகப்பாறைகள் ஆகியவையும் கலந்துள்ளது.

தமிழ்நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைகள் வடக்கில் மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக தமிழ்நாடு வரை பரவியுள்ளது, இதன் சிறுபகுதி கர்நாடகத்திலும் உள்ளது. இதில் நாம் குறிப்பாக தமிழக எல்லைக்குல் உள்ள மலைகலைப் பற்றி இப்போதுது பார்போம்.

சவ்வாது மலை

ஜவ்வாது மலை
போளூரிலிருந்து ஜவ்வாது மலையின் காட்சி

ஜவ்வாது மலை அல்லது சவ்வாது மலை (Javadi Hills) இது கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் ஆகும். இங்குள்ள ஏலகிரி ஒரு கோடை  வாழிடமாகும்.

மாவட்டம்

இம்மலைத் தொடர்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. இதன் பரப்பு சுமார் 262 ச.கி.மீ ஆகும். (கிழக்குத் தொடர்ச்சி மலைகள்)

உயரம்:

இதன் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும்.

சிறப்பு:

இம்மலைத்தொடரில் உள்ள காவலூர் வானியல் ஆய்வகமும் பீமன்மடவு அருவியும் முக்கிய சுற்றுலா இடங்களாகும்.

வைணு பாப்பு வானாய்வகம்

வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) இங்கு தான் அமைந்துள்ளது. இந்திய வானியல் முன்னோடியும், இந்திய இயற்பியலாளருமான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக,  இவர் பெயர் சூட்டப்பட்டது. இது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டு, 1986-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.

Vainu Bappu Observatory
Vainu Bappu Observatory

இங்குள்ள 2.34 மீ. விட்டமுடைய தொலைநோக்கி தான் ஆசியாவிலேயே மிக பெரியதாகும், இந்த காவலூர் வானியல் ஆய்வு மையம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பொதுமக்கள் பார்வையிடுதல்

ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு காட்டப்படும்.

வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ பார்வையாளர் தொலைநோக்கி மூலம் இரவு வானம் காட்டப்படும்.

ஏலகிரி மலை

ஏலகிரி மலை
ஏலகிரி மலைக்குச் செல்லும் சாலை

ஏலகிரி மலையில் துணிவு விளையாட்டுகளான மலையேற்றம் ( Trekking), ஏவூர்தி நழுவுதல் (Para Gliding),  போன்றவற்றை இங்கு பிறபலம். இதனால் இதனைச் சுற்றுலா இடமாக்கும் பணிகள் இப்போது நடக்கிறது. ஏலகிரியில் அழகிய 14 சிறு கிராமங்களும், சில கோவில்களும் அமைந்துள்ளன. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 31° C, குறைந்தபட்ச வெப்பநிலை 11° C பதிவாகிறது.

 சுற்றிப்பார்க்க

சலகாம்பாறை அருவி

ஏலகிரி மலையில் உருவாகும் அட்டாறு, சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவியே சலகம்பாறை அருவி என்று அழைக்கப்படுகிறது.

மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக ஆறு வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு..

பூங்கானூர் ஏரியும் குழந்தைகள் பூங்காவும்

இந்தபூங்கானூர் ஏரி மனிதனால் கட்டப்பட்ட ஊர் ஏரியாகும்.

ஏரியைச்சுற்றிலும் 1 கி.மீட்டர் தொலைவுக்கு நடைவழி பாதையும், ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்காவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு படகு சவாரி வசதியும் உண்டு.

ஏலகிரி மலை
ஏலகிரி மலை

மற்ற சுற்றுலா இடங்கள்

 • அரசு மூலிகைப்பண்ணை, பழப்பண்ணைகள்
 • சுவாமிமலை- மலையேற்றம் நடக்குமிடம்
 • இயற்கைப்பூங்கா
 • முருகன் கோவில்
 • தொலைநோக்கி இல்லம்
 • நிலாவூர் ஏரியும், பூங்காவும்
 • ஆஞ்சநேயர் ஆலயம்
 • மங்கலம் தாமரைக்குளம்

இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகமான வைணு பாப்பு வானாய்வகம் ஏலகிரி மலைக்கு அருகிலுள்ள சவ்வாது மலையில் உள்ள காவலூரில் (25 கி.மீ தொலைவில்) உள்ளது.

– சுற்றுலாக்கு இந்த ஏலகிரி மலை ஒரு சிறந்த இடம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

 மாவட்டம்:

ஏலகிரி (Yelagiri) என்னும் மலைவாழிடம் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், உள்ளது.

உயரம்:

ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,048 மீ உயரத்தில் உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்கள்.

 ஏலகிரி மலைக்குச் செல்ல:

வாணியம்பாடி,சோலையார் பேட்டை, வேலூர், சென்னை, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் உண்டு.

அருகில் உள்ள இரயில் நிலையம்:

சோலையார் பேட்டை இரயில் நிலையம்(19 கி.மீ தொலைவில் உள்ளது).
சென்னையில்இருந்து 219 கிலோமீட்டர் மற்றும்,
பெங்களூரில் இருந்து 193 கி.மீ தொலைவிலும் இந்த ஏலகிரி மலை அமைந்துள்ளது.

கல்வராயன் மலை

கல்வராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்-ன் ஒரு பகுதி ஆகும், இதில் வெள்ளாற்றின் துணை ஆறுகள் உற்பத்தியாகின்றன. மேலும் இந்த கல்வராயன் மலையில் தான் கோமுகி ஆறு உற்பத்தியாகி காவிரிக்கு இணையாகப் பாய்ந்து சென்று வங்கக்கடலில் கலக்கிறது.

கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்க பட்டுள்ளது.  அவை

 • வடபகுதி : சின்னக் கல்வராயன்
 • தென்பகுதி: பெரிய கல்வராயன்

மாவட்டம்:

கல்வராயன் மலைகளின் மேற்குப்பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வரையும், தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வரையும் வடக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையும் பரவியுள்ளது.

உயரம்:

இம்மலைகளின் உயரம் 650 மீ முதல் 1250 மீ வரை உள்ளது.
பரப்பளவு : 1095 சதுர கிமீ

சுற்றுலா இடங்கள்

கோமுகி அணையின் தோற்றம்
கல்வராயன் மலையின் மீதிருந்து கோமுகி அணையின் தோற்றம்

கல்வராயன் மலையின் மேற்கே சித்தேரி மலையும், தெற்கே ஆத்தூர் கணவாயும், வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், கிழக்கே மணிமுத்தாறு அணையும்,  அமைந்துள்ளன.

கல்வராயன்மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணையுள்ளாது, மேலும் இங்கு சுமார் 15 ஏக்கர் அளவில் அழகிய பூங்கா ஒன்று உள்ளது.

அருவிகள் | படகு பயணம்

பெரியார், மேகம், பண்ணியப்பாடி போன்ற அருவிகள் இங்கு உள்ளது, மேலும் குளியலறை வசதிகளும் இங்கு அருவிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் சென்று ரசிக்க படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

செந்நாய், காட்டுப் பன்றி, கரடி, மான் போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் இங்கு கிடைக்கும்.

கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் வசதிக்காக, வனத்துறையினரால் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ள்து. இங்கு தங்க முன் அனுமதி வாங்கிச் செல்வது நல்லது. அல்லது காலையில் சென்று, மாலையில் திரும்பலாம்.

அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம்:

விழுப்புரம் தொடர்வண்டி நிலையமாகும், கள்ளக்குறிச்சியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி கல்வராயன் மலைக்கு உள்ளது.

சேர்வராயன் மலை

சேர்வராயன் மலை-ஏற்காடு ஏரி
சேர்வராயன் மலை-ஏற்காடு ஏரி

சேர்வராயன் மலையில் மூலிகைச் செடிகளும், அதிக மரங்களும், காட்டு விலங்குகளும் உள்ளன. இது

இந்த மலையில் காப்பி (Coffee) , மற்றும் பழவகைகள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மேலும் இங்கு பாக்சைட் தாதுக்களும் கிடைக்கின்றது.

இம்மலையில் உள்ள ஒரு பெரிய ஊர் தான் ஏற்காடு. கடல் மட்டத்திலிருந்து ஏற்காடு 1623மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள்.இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலா நகரம் ஆகும்.

மாவட்டம்:

சேர்வராயன் மலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் நகருக்கு அருகில் காணப்படும் கிழக்கு தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாகும்.

உயரம்:

இம்மலை தோராயமாக கடல்மட்டத்திலிரு ந்து 1600 மீ. உயரமாகும்.

இது கல்வராயன் மலையின் மேற்கில் 400 சதுர. கி.மீ. பகுதியை தனக்காக கொண்டுள்ளது.

பச்சை மலை

பச்சைமலை
பச்சைமலை

பச்சைமலையில் 154 விதமான பறவை இனங்களும், 135 விதமான பட்டாம்பூச்சி வகைகளும், நூற்றுக்கணகான மான்கள் வாழ்கின்றன. இங்கு தான் சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு போன்ற நதிகள்  உற்பத்தியாகின்றன.

இம்மலைவாழ் மக்களுக்கு வேளாண்மையே முக்கியத் தொழில். பச்சைமலையில், தாவர இனங்கள், மூலிகை வகைகள் மற்றும் தேன் ஆகியவை காணக்கிடைக்கின்றது. மேலும் இங்கு தான் உலகிலேயே முதல் தர கருப்பு கருங்கல் கிடைக்கின்றன.

மாவட்டம்:

பச்சைமலை1
பச்சைமலை1

பச்சைமலை,  திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்,சேலம் ஆகிய மாவட்டங்களில் பரவி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் பச்சைமலைக்கு செல்ல துறையூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

உயரம்:

கடல் மட்டத்தில் இருந்து இதன் உயரம் 1072 மீட்டர்கள்.

இதன் பரப்பளவு  சுமார் 527 சதுர. கி.மீ

கொல்லி மலை

ஒரு சிறிய மலைத்தொடராகும். இந்த கொல்லி மலைகளில் காணப்படும் அதிகமான மூலிகைகளினால் இதற்கு ‘மூலிகைகளின் ராணி’ என சிறப்பு பெயரும் உண்டு. வேட்டைக்காரன் மலை என இதற்கு மற்றொரு பெயரும் உண்டு. மேலும் இங்கு பாக்சைட் தாதுவும் கிடைக்கின்றது.

கொல்லி மலை
கொல்லி மலை

கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி சுமார் கி.பி 200 இல்,  இந்தப் பகுதியை ஆண்டு வந்தார் இன்பது குறிப்பிடதக்கது. மேலும் சித்தர்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இடம் இந்த கொல்லி மலைகள்.

மாவட்டம்:

நாமக்கல்மாவட்டம். ( நாமக்கல் நகரில் இருந்து கொல்லிமலை 55 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.)

உயரம்:

 • இதன் உயரம் சுமார் 1000 முதல் 1300 மீட்டர்கள்.
 • இதன் பரப்பளவு : 280 சதுர கிமீ
 • இதன் உயர்ந்த சிகரம் 1400மீட்டர்கள்.

சுற்றுலாத் தலங்கள்

ஆகாய கங்கை அருவி

ஆகாயகங்கை அருவி
ஆகாயகங்கை அருவி – கொல்லி மலை

கொல்லிமலையில் அய்யாறு ஆற்றின் மீது அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி  உள்ளது.

இதன் உயரம் 600 அடி,  இந்த அருவியில் குளிப்பதால் செய்த பாவங்கள் நீங்கும் என சொல்லப்படுகின்றது.

கொல்லிப் பாவைக் கோவில்

இது குடைவரை கோயில் வகையை சேற்ந்தது.  தமிழர்களின் தெய்வமாக  இந்த பாவை பார்க்கப்படுகின்றது.  இந்த கோயில் கிட்டத்தட்ட 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக  சித்தர்களால் சொல்லப்படுகிறது. இதற்கு சான்றாக சங்ககால ஓலைசுவடிகள் இருக்கின்றன.

பழங்குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு விழா எடுத்து கொண்டாடி வந்திருக்கிறார்கள். அவை, மூங்கில்பாவை விழா, மரப்பாவை விழா, இஞ்சிப்பாவை விழா போன்றவையகும்.

இப்பாவைக்கு 9 கோவில்கள் இருந்து அதில் 8 கோவில் கடல்கோளினால் அழிந்து. தற்போது இது ஒரு கோயில் மட்டும் இன்னமும் இருப்பதாகவும், மேலும் இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், தேவையில்லை எனவும் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

அறப்பளீஸ்வரர் கோவில்
அறப்பளீஸ்வரர் கோவில் – கொல்லிமலை

மேலும் இங்கு 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த அறப்பளீஸ்வரர் கோவில், பழமை வாய்ந்த  முருகன் கோவில் இக்கோவிலில் முருகர் வேட்டுவர் தோற்றத்தில் உள்ளார்.  சிவன், விஷ்ணு,பார்வதி,  இடும்பன்  இங்கு கோயில்கள் உள்ளன.

படகு சவாரி

வாசலூர்பட்டி படகுத் துறை
வாசலூர்பட்டி படகுத் துறை

தமிழ்நாடு சுற்றுலாத்துறை  வாசலூர்பட்டில் சுற்றூலா பயணிகளுக்காக அழகான படகுத் துறையை அமைத்துள்ளது.

வல்வில் ஓரி பண்டிகை

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சித்தேரி மலை

சித்தேரி மலை
சித்தேரி மலை

இந்த மலையின் உச்சியில் சில கிருத்துவ கல்வி அமைப்புகளும், ஆங்காங்கே சில மலை கிராமங்களும் உள்ளது. வள்ளிமதுரை என்னும் அணை இந்த சித்தேரி மலையின் அடிவாரத்தில்  அமைந்துள்ளது.

மாவட்டம்:

இந்த சித்தேரி மலை: தர்மபுரி மாவட்டம். (பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்.)

உயரம்:

கடல் மட்டத்தில் இருந்து இதன் உயரம் சுமார்  1100 மீட்டர்கள்.

கபிலர் குன்று

கபிலர் குன்று
கபிலர் குன்று

கபிலர் குன்று என்பது கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த ஓர் இடமாகும். இது உள்ள இடம் திருக்கோவிலூர். (கிழக்குத் தொடர்ச்சி மலைகள்)

நெருங்கிய நண்பரும் வள்ளலும் ஆன  பாரி மன்னனின் மறைவுக்கு பிறகு, பாரிய்ன் மகளிர் அங்கவை மற்றும் சங்கவை என்பவர்களை திருக்கோவிலூரில்  திருமணம் செய்து வைத்துவிட்டு, பிறகு, தென்பெண்ணை ஆற்றில் உள்ள இந்த  குன்றில் வடக்கு பக்கம் அமர்ந்தவாரு உண்ணாமல் நோன்பிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு.

மாவட்டம்:

விழுப்புரம் ( திருக்கோவிலூர் பேரூராட்சி )

சமணர் மலை, மதுரை

சமணர் மலை
சமணர் மலை

மதுரையில் இருந்து 12கி.மீ தொலைவில் மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு குன்று தான் இந்த சமணர் மலை ஆகும். இது கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

இங்கு பழமையன சமணச் சிற்பங்களும், தமிழிக் கல்வெட்டுக்களும், சமணப் படுகைகளும் காணப்படுகின்றது.

பேச்சிப்பள்ளம்

தீர்த்தங்கரர்களின் சிற்பம்
தீர்த்தங்கரர்களின் சிற்பம்-சமணர் மலை

இந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது.இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.பேச்சிப்பள்ளத்தில் 8 தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்கலளோடு உள்ளது.
இந்த பேச்சிப்பள்ளத்திற்கு கொஞ்சம் மேலே உள்ள இடத்தில் கி.பி.10 நூற்றாண்டில் செயல்பட்ட ஒரு சமணப்பள்ளியின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது இதன் பெயர் “மாதேவிப் பெரும்பள்ளி” ஆகும்.

பர்வத மலை

பர்வத மலை
பர்வத மலை

இம்மலை. போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் பரப்பு : 5500 ஏக்கர்ஆகும். இது சித்தர்களால் புகழ்பெற்ற ஒரு மலையாகும். பர்வதம் என்பதர்கு மலை என பொருள்.

பர்வதமலைக்கு வழங்கும் வேறு பெயர்கள்
தென்கயிலாயம், சஞ்ஜீவிகிரி, நவிரமலை, திரிசூலகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை.

மல்லிகார்சுனர் கோயில்

கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டிய மல்லிகார்சுனர், பிரமராம்பிகை கோயில் இம்மலைமீது உள்ளது. இதிப்பற்றி இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது

மாவட்டம்:

திருவண்ணாமலை ( கலசப்பாக்கம் வட்டம் )

நன்றி :

மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழக மலைகள் பற்றியும் கட்டாயம் படியுங்கள்

Related Post

ஐராவதீசுவரர் கோயில்

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் | உலகப் பாரம்பரிய சின்னம்

Posted by - ஆகஸ்ட் 28, 2018 0
தேரை இழுத்துச் செல்வது போல் உள்ள சிற்பத்தின் சக்கரம் இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இங்கு உள்ள குளத்திர்க்கு திருக்குளத்திர்க்கு எமதீர்த்தம் என பெயர். இங்குதான்…
சேர்வராயன் மலை

தமிழக மலைகள் ஒரு பார்வை

Posted by - செப்டம்பர் 11, 2018 0
குறிஞ்சி நிலம் என்பது, மலையும் மலை சார்ந்த இடங்களும் ஆகும்... மேற்குத் தொடர்ச்சி  மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய 2 மலைகளும் அமையப் பெற்ற ஒரே…
Doddabetta

தொட்டபெட்டா மலை | சுற்றுலாத் தலம்

Posted by - டிசம்பர் 18, 2017 4
தொட்டபெட்டா தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர்......நாளொன்றுக்கு சுமார்…
மேற்குத் தொடர்ச்சி மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் | மற்றும் சுற்றுலா தலங்கள்

Posted by - செப்டம்பர் 11, 2018 0
மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகின் பாரம்பரியக் இடங்களில் ஒன்றாக UNESCO அறிவித்துள்ளது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 படுதிகளில் இதுவும் ஒன்று. இங்கு சுமார், 139…
ஊட்டி சுற்றுலா பயணம்

அழகிய 20 ஊட்டியின் சுற்றுலா இடங்கள்

Posted by - செப்டம்பர் 2, 2018 0
ஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்கள் தென் இந்தியர்களுக்கு ஒரு வரம் | ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர்கள், ஊட்டிக்கு 'மலைப்பிரதேசங்களின் ராணி' என பெயர்...

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன