மூதுரை பாடல்கள் eBook Free

மூதுரை பாடல்கள் eBook Free

2996 0

மூதுரை  புத்தகம்

 moothurai tamil book pdf

மூதுரை இது ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல்களுள் ஒன்று. பழமை வாய்ந்த அறக்கருத்துகளைக் தன்னிடம் கொண்டிருப்பதால் இது (மூப்பு + உரை) மூதுரை என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற மற்றொறு பெயரும் உண்டு. மூதுரையின் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்” என்று அழைக்கப்படுவதால் மூதுரைக்கு இப்பெயர் ஏற்பட்டது.

இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்து கூறுகிறது.

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பொருள்:

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய இலக்குமியின் அன்பும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்

பாடல் 1 :

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
‘என்று தருங்கொல்?’ என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

பொருள்:

ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும்,
நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது.
எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது
வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து
விடும்.  அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய
விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.

Moothurai tamil book pdf free Download 

(for PC & Tab)

Moothurai tamil book ePub free Download 

( for iPhone & android )

Moothurai tamil book Mobi free Download 

(For Kindle Reader, Amazon Kindle app)

 

மூதுரை பாடல்களை இந்த இணையத்திலேயே  படிப்பதற்கு இங்கு சொடுக்கவும் 

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

மூதுரை பாடல், muthurai in tamil, moothurai, மூதுரை பாடல்கள், ஔவையார் மூதுரை பாடல்கள், moothurai tamil book pdf, moothurai in tamil, moothurai padalgal in tamil, avvaiyar moothurai tamil, மூதுரை வரலாறு, மூதுரை பாடல் விளக்கம் pdf

Related Post

ஔவையார் நல்வழி PDF | eBook | Kindle

ஔவையார் நல்வழி PDF | eBook | Kindle

Posted by - ஜூன் 22, 2021 0
நல்வழி நல்வழி  ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் வாழ்க்கையில் பின் பற்றவேண்டிய நல்வழிகளை இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன. (கடவுள் வாழ்து…
ஆத்திசூடி | eBook, Pdf, Mobi, Kindle

ஆத்திசூடி | eBook, Pdf, Mobi, Kindle

Posted by - ஜூன் 23, 2021 0
ஆத்திசூடி 109 – ஔவையார் ஆத்திசூடி ஆத்திச்சூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து…
கொன்றை வேந்தன் PDF | EPUB | Mobi | Kindle

கொன்றை வேந்தன் PDF | EPUB | Mobi | Kindle

Posted by - ஜூன் 23, 2021 0
கொன்றை வேந்தன் eBook Free Download : PDF | EPUB | Mobi | Kindle கொன்றை வேந்தன் கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின்…
ஆசாரக்கோவை Free Download | PDF & eBook

ஆசாரக்கோவை Free Download | PDF & eBook

Posted by - ஜூன் 23, 2021 0
ஆசாரக்கோவை Free Download PDF ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு…

உங்கள் கருத்தை இடுக...