Gmail Tricks: காலாவதி தேதியுடன் இமெயில் அனுப்புவது எப்படி?-பாதுகாப்பு அம்சமும் இருக்கு!
Gmail Tricks: காலாவதி தேதியுடன் இமெயில் அனுப்புவது எப்படி?-பாதுகாப்பு அம்சமும் இருக்கு!
கான்ஃபிடென்ஷியல் மோட்
மின்னஞ்சல் சேவையில் அதிகம் பேசப்பட்ட கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) சேர்க்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்புவோரின் தனியுரிமையை வழங்கியது. பெரும்பாலான பயனர்களால் அதிகம் விரும்பப்படும் அம்சமாக இருக்கும் இந்த வசதி இருந்தது.

புதிய இன்டர்ஃபேஸ் கணினி மட்டுமின்றி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்
ஜிமெயில் தளத்தின் புதிய இன்டர்ஃபேஸ் கணினி மட்டுமின்றி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் கிடைக்கிறது. புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் மூலம் பயனர்கள் அனுப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு பாஸ்வேர்ட் செட் செய்ய முடியும். இத்துடன் அதற்கான வேலிடிட்டி தேதியை செட் செய்தால், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மின்னஞ்சல் தானாகவே அழிந்து விடும்.

எப்படி ஆக்டிவேட் செய்வது
ஜிமெயிலில் இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்து பார்க்கலாம். இதன் மூலம் மெயில் அனுப்பப்படும் போது காலாவதி தேதியை 1 நாள், 1 வாரம், 1 மாதம் என தேர்ந்தெடுக்கலாம். சராசரியாக மெயில் அனுப்புவதுபோல் நீங்கள் Compose தேர்வை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.
கொரோனாவின்போது 1 மணிநேரத்துக்கு ரூ.90 கோடி ஈட்டிய அம்பானி: ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி?

Confidential mode என்ற விருப்பம்
தேவையான தகவல்களை டைப் செய்து கீழே இருக்கும் ஆப்ஷன்களில் Confidential mode என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் தங்களுக்கு தேவையான காலாவதி நேரத்தை குறிப்பிட வேண்டும். பின் பாஸ்வேர்ட் தேர்வையும் தேர்ந்தெடுக்கலாம்.

பாஸ்கோட் பயன்முறையை தேர்வு செய்யலாம்
பாஸ்கோட் தேர்வை தேர்ந்தெடுத்தவுடன் No Sms passcode மற்றும் sms passcode என காண்பிக்கும். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம். எஸ்எம்எஸ் பாஸ்கோடை தேர்ந்தெடுத்தால் மொபைல் எண் கேட்கும் அதை குறிப்பிட வேண்டும். பின் பெறுநர் மெயிலை ஓபன் செய்யும்போது நீங்கள் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு கூகுள் வெரிபிகேஷன் கோட் கேட்கும் அதை பதிவு செய்தால் மட்டுமே அவர்கள் மெயிலை ஓபன் செய்ய முடியும்.

முன்னதாகவே இமெயிலை டெலிட் செய்யலாம்
அதேபோல் காலாவதி தேதிக்கு முன்னதாகவும் இமெயிலை அகற்ற முடியும். தங்களது சாதனத்தில் ஜிமெயிலை திறந்து அனுப்பிய ஃபோல்டரை பார்வையிட வேண்டும். அதன்பின் ரகசியல மின்னஞ்சலை டெலிட் தேர்வை கிளிக் செய்து டெலிட் செய்து கொள்ளலாம்.
Gmail Tricks: காலாவதி தேதியுடன் இமெயில் அனுப்புவது எப்படி?-பாதுகாப்பு அம்சமும் இருக்கு! Source link
Tags: How to Tech