இந்தி தேசிய மொழியாக ஆக முடியாது

இந்தி இந்தியாவின் தேசிய மொழியா?

521 0

இந்தி இந்தியாவின் தேசிய மொழியா ?

உங்களில் பல பேர் இதில் என்ன சந்தேகம் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என நினைப்பீர்கள்…

சில நாட்களுக்கு முன்பு நான் வானொலியில் பாடல் கேட்டுக்கொண்டு இருந்தேன். தமிழகத்தில் இந்தி திணிப்பு என்ற தலைப்பில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு நேயர்: தான் வெளி நாடுகளில் வேலை பார்க்கும்போது வட மாநிலத்தவர் அவரிடம்,

தமிழர்களுக்கு மட்டும்தான் இந்தி தெரிய மாட்டுது, இந்தியாவின் தேசிய மொழியை எப்படி கற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்களே, உங்களுக்கு இது அசிங்கமாக இல்லையா என கேட்டதாகவும்,

எனவே இந்தியாவின் தேசியமொழியான இந்தியை நாம் கட்டாயம் கற்க வேண்டும் எனவும் வானொலியில் கூறினார்.
அப்போது ஒருகணம், அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் (RJ) இந்தி நமது தேசிய மொழி அல்ல என விளக்கம் கூறுவார் என என்னி காத்து இருந்தேன்,

ஆனால் அதற்கு பதிலாக, நீங்கள் கூறுவது சரிதான்,
உங்களுக்காக அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் என கூறி பாடல் போட்டுவிட்டார்.

இந்தி இந்தியாவின் தேசிய மொழியா

அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது படித்தவர்களுக்கும் கூட சில முக்கியமான தகவல்கள் தெரியாது என்று.
எனவேதான் இந்த பதிவை எழுத தொடங்கினேன்.

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தியா ?

இதற்கு நேரடியான பதில்:  இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை. (உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு)

பிறகு இந்தியாவின் தேசிய மொழி என்ன ?? அதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள நமக்கு இந்த இரண்டை பற்றிய புரிதல்கள் வேண்டும்.

 1. அலுவல் மொழி (official language)
 2. தேசிய மொழி (National Language)

அலுவல் மொழி (official language)

இந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ள உரிமை உண்டு. மாநிலங்கள் தங்கள் அலுவல்பணிகளுக்கான மொழியை சட்டப்பேரவை மூலம் தீர்மானிக்கின்றன. ஆகையால் அலுவல்மொழிகள் குறித்து இந்திய அரசியலமைப்பு மிக விவரமான அரசியலமைப்பு அங்கங்களை கொண்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 22 மொழிகளுக்கு அலுவல் அலுவல் மொழி அதிகாரம் வழங்கப்படுகிறது() இந்த மொழிகள் அனைத்தும் சமமான அதிகாரத்தைக் கொண்டுள்ளன, மேலும் அரசாங்க ஆவணங்களை இந்த மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம். 

மேலும், இந்தியா அரசு தமிழ் , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , மற்றும் ஒடியா ஆகிய மொழிகள் பாரம்பரிய மொழிகள் (Classical Languages) என அறிவித்துள்ளது. 

Language region map of India. Note that although there is no specific state or Union territory, almost every state uses the Sindhi language and Sindhi is an official language of India (as can be seen on Indian currency notes)- it is the seveneenth most spoken language

தேசிய மொழி வரலாறு

பிரிட்டிஷ் இந்தியாவின் அலுவல் மொழிகள் ஆங்கிலம், உருது மற்றும் இந்தி ஆகும்.

1947- ல் ஆங்கில அரசிடம் இருந்து (இங்கிலாந்து) விடுதலை பெற்ற இந்தியா நாட்டில் தேசிய கோடி தயாராக இருந்தது. இப்போது தேவை ஒரு தேசிய மொழி.

எனவே, தேசிய மொழி குறித்து நீண்ட நெடிய விவாதம் நடைபெற்றது. அப்போது எந்தவொரு தனிப்பட்ட மொழியின் அடிப்படையிலும் இந்திய ஒன்றியம் உருவாக்கப்படவில்லை. இருந்தும், இந்தி ஏகாதிபத்திய மற்றும் பேரினவாதக் கொள்கைகள் தலை உயர்த்த  தொடங்கியது. இந்தி பேசும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தியை அனைத்து இந்தியர்களுக்கும் தேசிய மொழியாக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இந்தி தெரியாதவர்கள் அரசியல் சாசனக் குழுவில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள் என்று ஒன்றிய மாகாணங்களின் பேரவை உறுப்பினரான ஆர்.வி.துலேகர் வெளிப்படையாகவே கூறினார்.

இதே கோரிக்கையை அரசியல் சாசனக் குழுவின் பல உறுப்பினர்களும் (இந்தி பேசும் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்) எதிரொலிக்கத் தொடங்கினர். இதன் காரணமாக இந்தியை எதிர்க்கும் இந்தி சாராத மக்களுக்கும், இந்தியை மற்றவர்கள் மீது திணிக்க விரும்பிய இந்தி மொழியை பேசும் மக்களுக்கும் இடையே விவாதம் வலுத்து.

இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை

இறுதியாக பல உரையாடல்களுக்குப் பின் ஜவஹர்லால் நேருவால் சமாதானப்படுத்தப்பட்டு. தற்காலிகமாக இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து வைத்திருக்கப்பட்டது. அதோடு இந்தியும் (தேவநாகரி எழுத்துருவில்) மற்றொரு அலுவலக மொழியாக இருக்கும்படி முடிவு செய்யப்பட்டது. 

மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல்மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளபட்டது. 

இந்தியாவின் புதிய அரசியலமைப்பு சனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. எனவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொண்டபடி 1965 ஆண்டிலிருந்து இந்தி மட்டுமே அரசுப்பணிமொழியாக விளங்க இந்தியா அரசு மேற்கோண்ட பல முயற்சிகள் இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலைகளை உண்டாக்கின குறிப்பாக தமிழகம்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

எனவே, இந்தி பேசாத மாநிலங்களின் இந்த வெறுப்பு அலையாய் சமாதானம் செய்ய,  அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1963ஆம் ஆண்டில் கொண்டு வந்த இந்தியா அலுவல் மொழிகள் சட்டத்தில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் ஆங்கிலம் அரசுமொழியாக விளங்க வழி செய்வதாக கூறினார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்இருப்பினும், அவரது வாய்மொழி வாக்குறுதிகள் பிந்தைய அரசுகளால் ஏற்கப்படாமல் போகலாம் என்ற அச்சத்தினை அப்போதைய தமிழக தலைவர்கள் வெளியிட்டனர்.

26 சனவரி,1965 நாள் (இந்திய குடியரசுதினம்) நெருக்த்தில் தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலுக்கத் துவங்கியது. அந்த குடியரசு நாளை கருப்புதினமாகக் கொண்டாட தி. மு. க அழைப்பு விடுத்திருந்தது.

போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் ஈடுபட்டனர். 25 சனவரி அன்று மதுரையில் மாணவர்களுக்கும் காங்கிரசு உறுப்பினர் சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் கலவரமாக மாறியது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய இந்த கலவரம், காவலர்களால் அடக்க முடியாத அளவில் அடுத்த 2 மாதங்கள் தொடர்ந்து நடந்தது.

தாயை பழித்தவனை யார் தடுத்தலும் விடாதே..
தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே…

– பாரதி தாசன்

பெரும் அளவில் வன்முறை, தீவைப்பு எனப் போராட்டக்காரர்களும் தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் காவல் துறையினரும் மோதினர். இக்கலவரங்களில் இரு காவல்துறையினர் உட்பட 70 பேர்கள் (அதிகாரப்பூர்வமாக) இறந்தனர்.

தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே

நிலைமையைக் கட்டுபடுத்த அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி,

இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார்.

இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர் போராட்டம் ஓய்ந்தது.

இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு 1967ஆம் ஆண்டு, அலுவல் மொழி சட்டத்தில் என்றென்றும் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளும் அரசுமொழிகளாக விளங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவந்தது.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பற்றி விரிவாக இங்கு பார்க்க.

இந்தியாவின் அலுவல் மொழிகள்

இந்திய அரசியலமைப்பின் 8-வது பட்டியலில் உள்ள 344(1) மற்றும் 351 ஆவது கட்டுரைகள் இந்த 22 இந்திய மொழிகளை குறிப்பிடுகின்றது. மேலும் அரசு பொது தேர்வில் (public service examination) எழுதும் ஒரு வேட்பாளர் இந்த மொழிகளிலில் ஏதேனும் ஒன்றை  பயன்படுத்தி எழுதும் உரிமை உண்டு.

இந்தியாவில் இந்தியின் பங்கு என்ன ?

இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி, இந்தி 44 சதவீதத்துக்கும் குறைவான இந்தியர்களின் பேச்சு மொழியும், இந்தியாவில் 25 சதவீதமான மக்களின் தாய்மொழியும் தான்.

தகவல் பரிமாற்றம் மற்றும் நிர்வாக நோக்கத்திற்காக மத்திய அரசு, பிற மாநில அரசுசுகளுடன் தொடர்பு கொள்ள இரண்டு  அலுவல் மொழிகள் (Official language) உண்டு அவை:  ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகும்.

இந்தியா அரசியலமைப்பின் படி;

 • பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடிய இரண்டு மொழிகளில் இந்தி ஒன்றாகும், மற்றொன்று ஆங்கிலம்.
 • இது அந்தந்த மாநிலங்களின் உத்தியோகபூர்வ மொழிகள் (உம்: தமிழ், மலையாளம்…) மற்றும் ஆங்கிலத்துடன் சட்டமன்றக் கூட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம்.
 • இது நீதித்துறையிலும் ஒரு பங்கைக் கொண்டுள்ளது, அங்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள அனைத்து உத்தியோகபூர்வ நோக்கங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய மொழிகளில் இந்தி ஒன்றாகும்.
 • மத்திய அரசுடன் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புக்கு பயன்படுத்தலாம் (இந்தி அல்லது ஆங்கிலம்).
 • இந்தி அந்தந்த மாநிலங்களால் உத்தியோகபூர்வ மொழியாக நியமிக்கப்படலாம் (மக்களும் அரசும் விருப்பபட்டால்).

மத்திய அரசு மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒரே வழி இந்தி தானா?

இது உண்மை இல்லை. அதிகாரப்பூர்வ மொழிகள் விதிகள், 1976 படி மத்திய அரசு மற்ற மாநில அரசாங்கம் அல்லது நிறுவனங்களுக்கிடையேயான தொடர்பு கொள்ள பின்பற்றப்பட செயல்முறைகள் பற்றி குறிப்பிட்டுள்ளது. 

இந்தியாவில் உள்ள மொழிகளின் பன்முகத்தன்மையையும், மாநிலங்கள் பயன்படுத்தும் பல்வேறு உத்தியோகபூர்வ (Official language) மொழிகளையும் கருத்தில் கொண்டு, இந்தியை திணித்து பிற மாநிலங்களின் இறையாண்மையை கெடுக்க கூடாது என முடிவெடுக்கப்படது.

அதன்படி, அனைத்து மாநிலங்களும் 3 வெவ்வேறு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 • Region A: இந்தி வட்டம் (Hindi Belt) எனப்படும் மாநிலங்கள். இவை இந்தியை அலுவல் மொழியாக கொண்டவை.
 • Region B: குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் சண்டிகர், டியு & தமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (Diu & Daman, Dadra & Nagar Haveli) ஆகிய யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது.
 • Region C: மேற்கண்ட இரண்டு வகைகளின் கீழ் வராத மற்ற அனைத்து மாநிலங்களும். இந்த மாநிலங்களில் இந்தி அவர்களின் அலுவல் மொழியாக (Official language) இல்லை. (இதில் அனைத்து தென் மாநிலங்கள், ஒடிசா, மேற்கு வங்கம் போன்றவையும் அடங்கும்.)

இதை பற்றிய மேலும் விவரங்களுக்கு : அதிகாரப்பூர்வ மொழிகள் விதிகள், 1976 

ஒரு அரசு அதிகாரியிடமோ அல்லது அதிகாரத்திடமோ ஒரு குறைகளைத் தீர்ப்பதற்கான மனுவை சமர்ப்பிக்கும் ஒவ்வொரு இந்தியா குடிமகனுக்கும்,

இந்தியாவில் பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும் சமர்ப்பிக்க அரசியலமைப்பு உரிமை உண்டு.

இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகள்

வ.மொழிபேச்சாளர்கள்
(கோடிகள்,2011)
1.இந்தி49.8
2.பெங்காலி9.7
3.மராத்தி8.3
4.தெலுங்கு8.1
5.தமிழ்7.5
6.குஜராத்தி5.5
7.உருது5.5
சமஸ்கிருதம்0.02 (20 ஆயிரம்)

 

இந்தியை எப்படி வளர்க்கின்றார்கள் ? அல்லது இந்திக்கு என்ன முன்னுரிமைகளை மத்திய அரசு கொடுக்கின்றது ?

இந்தி பயன்பாடு மற்றும் பழக்கவழக்கங்களை விரிவாக செயல்படுத்த; இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

 • தென்னிந்திய மாநிலங்களில் இந்தி பரப்புவதற்காக சென்னை தலைமையிடமாகக் கொண்ட தட்சிண பாரத் இந்தி பிரச்சார் சபை உருவாக்கப்பட்டது
 • மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்தி செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க பெங்களூரு , திருவனந்தபுரம் , மும்பை , கொல்கத்தா , குவஹாத்தி , போபால் , டெல்லி மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் பிராந்திய இந்தி அமலாக்க அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
 • இந்தியில் எழுதப்படும் கடிதத் தொடர்புகள் குறித்து அதிகாரப்பூர்வ மொழித் துறையால் ஆண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. 
 • 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட உத்தியோகபூர்வ மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அவ்வப்போது இந்தி பயன்பாட்டின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஜனாதிபதியிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கிறது.
 • கொள்கை முடிவுகளை எடுக்கவும் இந்தி ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் கேந்திரியா இந்தி சமிதி (Kendriya Hindi Samiti (est. 1967).) என்ற அமைப்பை இந்தியா அரசு நிறுவியது.
 •  10-க்கும் மேற்பட்ட மத்திய அரசு அலுவலகங்களைக் கொண்ட ஒவ்வொரு நகரத்திலும், ஒரு நகர அதிகாரப்பூர்வ மொழி அமலாக்கக் குழு நிறுவப்பட்டு, இந்தியில் புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர்களுக்கு ரொக்க விருதுகள் வழங்கப்படுகின்றன.
 • அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களில் இந்தி மொழியை ஊக்குவிக்கவும் செயல்படுத்தவும் கட்டாயம் இந்தி கலங்களை நிறுவ வேண்டும்.
 • தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் இந்தியை ஊக்குவிக்கும் திட்டங்களை 2016 ஆம் ஆண்டில் அரசாங்கம் அறிவித்தது .

ஆனால் தமிழக அரசு தமிழை வளர்க்க என்ன செய்கிறதோ தெரியவில்லை….

இந்தியாவிற்கு ஏன் ஒரே தேசிய மொழி வேண்டாம்

இந்தியத் துணைக் கண்டம்

இந்தியத் துணைக் கண்டம் பிற நாடுகளை போல அல்ல, இந்தியாவின் அனைத்தும் பகுதி மக்களும் அவர்களுக்கென தனி வரலாறு, மொழி, காலச்சரம், உடைகள், உணவு, பழக்க வழக்கம் என அனைத்திலும் வெறுபடுகின்றோம். ஏனெனில் இந்தியா பழங்காலம் தொட்டு இன்றுவரை ஒரே தேசமாக இருந்தது இல்லை.

இந்தியா மதச்சார்பற்ற நாடக இல்லாவிட்டால், இந்தியா இந்தியா அல்ல.

இப்படி இருந்த இந்த இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேலாக கடைசியாக ஆண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். இவர்களிடம் இருந்து சுத்தந்திரம் பெற்ற பிறகு, இந்தியா பல்வேறு சிறு சிறு பகுதிகளாக உடைய ஆரம்பித்தது.

சிறு அரசுகள், தனி சமஸ்தானங்கள், நாடுகள் என பிரிய தொடங்கியது. மிகவும் சிரமப்பட்டு பல்வேறு அரசியல், அடக்குமுறை, ராஜதந்திரம், சலுகைகள், வாக்குறுதி இவற்றின் அடிப்படையில் அவர் அவர்களின் மொழி, கலாச்சாரம், உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் படி இந்தியா என்ற குடையின் கீழ் இணைந்தன.

இன்று இந்தியாவில் இத்தனை வேறுபாடுகள் இருப்பினும், இந்தியர் என்ற ஒற்றை சொல்லின் மூலமே நாம் வேற்றமைகளை மறந்து ஒற்றுமையாக இருக்கின்றோம்.

இது கடைசி வரை ஒரே நாடு என்ற ஒற்றை சொல்லின் மூலமே இருக்க வேண்டுமே தவிர, ஒரே மொழி என்ற இரண்டாவது சொல் வர வேண்டாம். அப்படி வந்தால் வேற்றுமையில் ஒற்றுமை எனற சொல் அர்த்தமில்லாமல் போய்விடும். இந்தியாவிற்கு பெருமையே இந்த வேற்றுமையில் ஒற்றுமைதான்.

இந்தியா மதச்சார்பற்ற நாடக இல்லாவிட்டால், இந்தியா இந்தியா அல்ல. – திரு.அடல் பிஹாரி வாஜ்பாய்

இந்தியா நாடு அல்ல; துணைக் கண்டம்

நிறைய வட மாநிலத்தவர் அல்லது பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள், இந்தியாவில் ஒரே மொழி இருப்பது நல்லதுதான் என்று.

இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதாரம் பெருகும், இந்திய இன்னும் வளர்ச்சி அடையும் மேலும் இதன்மூலம் பல வகைகளில் இந்தியாவின்  செலவுகள் மிச்சமாகும் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியா பல தேசங்களின் கூட்டு (இந்திய ஒன்றியம் / Indian Union). இந்தியர்கள் அனைவரையும் ஒரே மதம், ஒரே இனம், ஒரே காலச்சரம் என்று எப்படி இணைக்க முடியாதோ அப்படியே, இவர்களை ஒரே மொழியில் இணைக்க முடியாது.

ஒரு வேலை ஒரே மொழி கொள்கை வந்தால் இதன்மூலம் ஒருவேளை நமக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்றப்படலாம், ஆனால் அதற்கு நாம் கொடுத்த விலை, நமது வரலாற்றை அழித்துவிடும்.

இந்தி’யை தேசிய மொழியாக மாற்றி அதன்மூலம் இந்தியாவை வல்லரசு ஆக்குவது தான் இந்தி திணிப்பை ஆதரிப்பவர்களின்  திட்டம் என்றால்,

இந்தியாவில் உள்ள அனைத்து சாதியினைரையும் (1,000-க்கும் மேற்ப்பட்ட) ஒருவருக்கு ஒருவர் அனைவரும் சமம் என்று சட்டம் (நடைமுறையில்) கொண்டுவந்து,

அனைத்து அரசு பதிவுகளில் இருந்தும் சாதி என்ற வார்த்தையை நீக்கிவிட்டாலே, இந்த சாதி அரசியலில் இருந்து விடுபட்டு இந்தியா பெரிய வல்லரசு நாடாகிவிடும். அவர்கள் இதற்கு உடன்படுவார்களா? (இப்படி செய்வதால்தான் உண்மையான பலன் கிடைக்கும், மாறாக ஒரு மொழியை உயர்த்தி பிற மொழிகளை இதன்வழியே கொஞ்சசம் கொஞ்சசமாக அழிப்பதல் நற்பலன் ஏதும் இல்லை)

ஒரு உதாரணம் சொல்லவேண்டுமானல்: இருக்கும் அனைத்து காடுகளையும் அழித்துவிட்டு வீடு கட்டினால், மனிதர்களுக்கு இடம் பற்றாக்குறை இருக்காது நல்ல வசதியாக இடம் கிடைக்கும்.

அதற்காக காடுகளை அழிக்க தொடங்கினால் அதன்மூலம் கிடக்கும் அந்த வசதிகளை விட அந்த காடு இல்லாததால் கிடைத்த துன்பங்களே நமக்கு அதிகமாக இருக்கும். இதுபோலதான் தொன்மையான இந்தியா மொழிகளுக்கும்.

வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தால், பல நூறு வருடங்களாகவே இந்தியாவை ஆண்டு வந்தவர்கள் அவர் அவர் மதத்தை,மொழியை நாடு முழுவதும் பரப்ப பல்வேறு முயர்ச்சிகள் மேற்கொண்டார்கள்.

சைவம், வைணவம், புத்தம், இஸ்லாம், கிருத்துவம் யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.

கடைசிவரை அவர்களால் முடியவில்லை. அரசர்கள் ஆண்ட அந்த காலத்திலே முடியாத போது, இந்த சுத்தந்திர மக்களாட்சியில் முடியுமா ?

இந்த இந்தி திணிப்பு, ஒரே மொழி கொள்கை

இவர்களது உண்மையான நோக்கம் இந்தியா வல்லரசு ஆவதோ அல்லது இந்தியா மக்களுக்கு நன்மை பயப்பதோ ஏதும் இல்லை, அப்படி இருந்தால் இதைவிட எவ்வளவோ காரியங்களை செய்து இந்தியாவின், இந்தியர்களின் வளர்ச்சியை மேம்படுத்தலாம். ஆனால் அதை செய்யமாட்டார்கள்.

இந்த இந்தி திணிப்பு, ஒரே மொழி கொள்கை இவைகளெல்லாம் 100 சதம் சுயநலம் மற்றும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே தவிர நாட்டுக்கும், மக்களுக்கும் இதன்மூலம் நல்ல பயன் ஏதும் இல்லை.

அப்படி ஒரு சில பயன்கள் இருந்தாலும் அவை “கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” என்பது போன்றதே (கனியும் காயும் ஓரிடத்தே இருக்கக் கண்டவன் கனியை விடுத்துக் காயை விரும்பியது போலும்.) –குறள்: 100

 

 

 

 

 

 

 

 

Related Post

புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms – தமிழில்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான கலைசொற்கள் புள்ளிவிபரவியல் சொற்கள் Abscissa கிடைத்தூரம் Abscissa கிடையாயம்/கிடைக்காறு Abscissa மட்டாயம் Abscissa (வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.…
- 11

ஆ வரிசை – பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

Posted by - ஏப்ரல் 16, 2020 0
பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் # பிறமொழி  சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 ஆகாசம் வானம் 2 ஆகாயம் வானம் 3 ஆகாரம் உணவு…
- 13

இ வரிசை கிரந்தம்

Posted by - ஏப்ரல் 16, 2020 0
பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் # பிறமொழி  சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 இ.சி.ஜி நெஞ்சகத் துடிப்பு 2 இடா இறைகூட, ஒருபொறி இடகலை…
பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

501 வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்

Posted by - செப்டம்பர் 7, 2018 2
பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் - அந்தரங்கம், ஆபத்து, ஆராதனை, உச்சரிப்பு, சந்தேகம் இவை தமிழ் சொற்களா !... | 501 வடமொழி தமிழ் சொற்கள்.

தாவரவியல் கலைச்சொற்கள் Botany terms

Posted by - ஏப்ரல் 17, 2020 0
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு தாவரவியல் கலைச்சொற்கள் Abaxial அச்சுக்கெதிர்ப்புறமான Abiogenesis முதல் உயிர்த்தோற்றம், உயிரிலிப்பிறப்பு, உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு. Abiogenesis சடப்பிறப்பு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன