how to avoid adult content on my android,iOS, PC

ஆபாச வீடியோ, புகைப்படம் மற்றும் எந்த தவறான விஷயமும் எனது ஆண்ட்ராய்டு / ஐபோன், கணினி போன்றவற்றில் வராமல் தடுப்பது எப்படி?

1702 0

ஆபாச வீடியோ, புகைப்படம் மற்றும் எந்த தவறான விஷயமும் எனது ஆண்ட்ராய்டு / ஐபோன், கணினி போன்றவற்றில் வராமல் தடுப்பது எப்படி?

இந்த முழு கட்டுரையும் நீங்க படிக்கமா இந்த கேள்விக்கு உங்களால எந்த ஒரு சரியான முடிவும் எடுக்க முடியாது. காரணம் இது ஒண்ணும் எப்படி ஆபாச வீடியோக்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லும் கட்டுரை இல்லை, அதை எப்படி தவிர்க்கணும் அப்படினு சொல்ற கட்டுரை, அப்போ கொஞ்சம் பெருசாதான் இருக்கும்.

உங்களுக்கு இந்த கட்டுரையில் நல்ல பயனுள்ள தகவல்கள் அதிகம் இருக்கும் எனவே முழுவதும் படிக்க தயங்காதீர்கள்.

How to Block Adult Content on Android iPhone and PC in Tamil

[contents h2]

கூகுள் என்னும் கடவுள்

இணையதளம் எப்போதுமே கடவுளைப் போல. “கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்பது இதன் தாரக மந்திரம்.

எனவே தாங்களாகவே முயர்ச்சிக்காமல் இதுபோன்ற ஆபச படங்கள், தவறான காரியங்கள் தங்கள் கைபேசி, மடிக்கணினி போன்றவற்றிற்கு வர 99.99 % வாய்ப்பு இல்லை.

(இந்த 99.99% எங்கயோ கேட்ட போல உள்ளதா, எல்லாம் நமது TV விளபரங்களில் இப்படிதானே ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க)

Why Most Antibacterial Product Only "Kills 99.9% Of Germs"?

என்னடா இந்த புள்ள ஏதோ புரியமா உலறுதே, நான், இணையத்தில் வேறு ஏதோ செய்துகொண்டு இருக்கும்போது ஆபாசமான தகவல்கள் என் திரையில் வருதே என நீங்கள் நினைக்கலாம்.

உண்மை நீங்கள் நினைப்பதை போன்று இல்லை. இந்த இணைய உலகில் வேறு விதமாக உள்ளது.

நீங்களோ அல்லது தங்கள் நண்பர்களோ உங்கள் கைபேசியில் என்றாவது ஆபாச தளம், அல்லது ஆபாசமான அல்லது அதற்கு இணையான வார்த்தைகளை கூகிளில் தேடி இருப்பீர்கள். அதன் பலன் உங்களை தொடர்ந்துகொண்டே இருக்கும்.

ஏன் ஆபாச தளங்களை தவிர்க்க வேண்டும்?

ஏனென்றால் ஆபாசம் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் மிக மிக எளிமையாக கிடைக்கின்றது. அணைவராலும் மிகவும் பிரபலமாக பயன்பாட்டுத்தும் Youtube போன்ற தளங்களும் இதை காட்டுகின்றது. இதன்மூலம் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து Youtube இல் ஏதேனும் தேடும்போது, முக்கியமாக அதன் முகப்பு பக்கத்திலும் இதுபோன்ற ஆபாச வீடியோக்கள் காட்டுகின்றது.

சரி Browser-இல் ஏதாவது நொண்டிக்கொண்டு இருக்கும்போது திடீரென ஏதாவது ஆபாச விளம்பரங்கள் வருகின்றது. இதனால் குழந்தைகள் பெரிதும் கேட்டுபோக வாய்ப்புகள் அதிகம். பெரியவர்களுக்கும் அதே நிலைதான்.

கார்ப்பரேட் / இலுமினாட்டி சதி

ஒரு வேலை இது கார்ப்பரேட் அல்லது இலுமினாட்டி  -களின் சதி செயலக இருக்குமோ என தோன்றுகின்றதா ???

அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு கசப்பான உண்மையை சொல்கிறேன். இதற்கு காரணம் நீங்கள்தான்.

உண்மைதான்.. நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அதுதான் உண்மை. இப்போது நான் அதை மிக சுலபமாக நிரூபிக்கவா???

நீங்கள் எவ்வளவோ இணையத்தில் தேடி இருப்பீர்கள் / பயன்படுத்தி இருப்பீர்கள், இன்றுவரை உங்கள் இணைய பக்கத்தில் எத்தனை முறை நீங்கள் அரபி, உருது, சைனீஸ், பிரான்சு, ஜெர்மன் மொழிகளில் உள்ள தளங்களை பார்வையிட்டு உள்ளீர்கள் ??

சரி அவளோ வேண்டாம் இதோ பக்கத்துல இருக்க மலையாளம் ஹிந்தி, கன்னட மொழி பக்கங்களையவது அதிகம் பார்த்தது உண்டா ??

நிச்சயமாக உங்களில் பெரும்பலானவர் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உள்ள இணைய பக்கத்தை தான் பார்த்து இருப்பீர்கள். அப்போ ஏன் மற்ற மொழிகளை அதிகம் இணையத்தில் பார்ப்பது கிடையாது?

[wpsm_box type=”info” float=”none” textalign=”left”]
தமிழ் ஆங்கிலம் போன்று பல மொழிகளிலும் இலச்சகணக்கான தளங்கள் இந்த இணையக்கடலில் மிதக்குகின்றது.
[/wpsm_box]

அதற்கு காரணம் அதன் பேரில் நமக்கு விருப்பம் இருந்தது இல்லை அல்லது தேவை இருந்தது இல்லை.

இப்போது சொல்லுங்கள் ஆபாச தளங்கள் மட்டும் நமது கண்களில் அதிகம் ஏன் படுகின்றது? 

அதுவந்து, அதாவது .. இப்போ என்ன சொல்ல !!!

சரி கழுதை போகட்டும், இப்போ அதை எப்படி இனி வராமல் தடுப்பது என பார்க்கலாம்.

ஆபாச வீடியோ, புகைப்படம் போன்ற எந்த தவறான விஷயமும் நமது திரையில் வராமல் தடுப்பது எப்படி?

இதற்கு பதில் கூரும்முன் முன் முதலில் நாம் ஒன்றை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது இணையம் செயல்படு விதம் எப்படி என்று ?

இணையம் vs இலவசம்

இந்த இணையத்தில் எல்லாம் இலவசமாக கிடைக்கிறது என்பது முதல் பொய். இங்கு எதுவும் இலவசம் இல்லை அதுதான் உண்மை. இப்போது இந்த கட்டுரையை நீங்கள் இலவசமாக படிக்கிறீர்கள் என்று நினைத்தால் அது தவறு.

காரணம் இந்த கட்டுரை எழுதிய எனக்கு சராசரியாக 2 மணி நேரம் ஆகும். யாரோ ஒருவர் இலவசமாக படித்துவிட்டு போவதற்கு நான் எதற்காக என்னுடைய 2 மணி நேரத்தை செலவிட வேண்டும் !, இதே போல பல கட்டுரைகள் இந்த தளத்தில் உள்ளது, எதற்காக நான் இதை உங்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் ?

இதே போல தான் Youtube -இல் வரும் வீடியோக்களும், எதற்காக நீங்கள் பார்த்து சிரிப்பதற்கோ அல்லது சிந்திப்பதற்கோ யாரோ ஒருவர் பல மணி நேரம் செலவு செய்து ஒரு வீடியோ எடுத்து எடிட் செய்து அதை Youtube-இல் பதிவேற்ற வேண்டும். ? இது போல ஒரு வீடியோவாக இருந்தால் பரவா இல்லை, இது போல பல வீடியோக்கள், கட்டுரைகள் தகவல்கள், ஆபாச வீடியோக்கள், ஆபாச கதைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் இதன்மூலம் பணம் ஈட்டுவதிர்கே..

பெரும்பாலும் விளம்பரங்கள் மூலம் அல்லது நன்கொடைகள் மூலம் தான் எங்களைப்போன்ற இணையதளம் வைத்திருப்பவர்கள் பணம் ஈட்ட முடியும். எல்லாரும் எல்லா இணையதளத்திற்கும்  நன்கொடை கொடுப்பதில்லை. (பல இணையதளங்கள் நன்கொடை கேட்டுக்கொண்டாலும் ஒருசில இணையாதங்களுக்கு மட்டுமே ஒரு சிலர் நன்கொடை அளிப்பார்).

எனவே விளம்பரங்கள் தான் எங்களின் அடுத்த இலக்கு. அப்படியானால் நாங்கள் விளம்பரம் மூலம் பணம் ஈட்ட எங்களுக்கு அதிக பார்வையாளர்கள் வந்தால்தான் முடியும்.

எனவே எங்களுடைய முதல் கூறி, மிக அதிக பார்வையாளர்களை எங்கள் இணைய பக்கத்திற்கு அல்லது YouTube பக்கத்திற்கு, News Site பக்கங்களுக்கு (TV NEWS, நாடகம், இதர TV நிகழ்ச்சிகளும் இப்படிதான்) வரவழைக்க எங்களால் முடிந்த மட்டும் செய்து பார்ப்போம். அப்போ தானங்க நாங்களும் நாலு காசு சம்பாதிக்க முடியும்.

சரி அப்போ மக்கள் எதை தேடுகிறார்களோ அதைதான் நாங்களும் கொடுப்போம், (கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் இதனே கூகுளின் தாரக மந்திரம்).

இணையத்தில் ஆபாச தேடல்கள்

உங்களுக்கு தெரியுமா? மக்கள் நல்லதை தேடுவதைவிட இணையத்தில் ஆபசத்தையே அதிகம் தேடுகிறார்கள் என்று.

ஆபாச தேடல்களின் அளவு
கூகுள் டீரெண்ட்ஸ்: ஆபாச வார்த்தைகளை கடந்த 12 மாதங்களில் கூகுளில் தேடிது
மாதம் மாதம் இதனை ஆபாச வார்த்தைகள் கூகுளில் தேடப்படுகிறது
கூகுளில் ஒரு மாத்தில் ஆபாசம் தொடர்பாக தேடப்படும் தேடல்களின் அளவு.
இணையத்தில் ஆபாச தேடல்கள்
இணையத்தில் ஆபாச தேடல்கள் எண்ணிக்கை – Breakout

ஆகி அதிகமாக மக்கள் எதை தேடுகிறார்கள் என தெரிந்தது, அப்பறம் என்ன அதுக்கு தகுந்த போல எங்களுடைய நிகழ்ச்சிகள், கட்டுரைகள், வீடியோக்கள் எல்லாம் தயார் பண்ண வேண்டியதுதான் மிச்சம்.

சரிங்க இப்போ கடைய விரித்தாச்சி, வடிக்கையாளர்களுக்கு தேவையான சரக்குகளையும் வச்சாச்சி. அடுத்து என்ன? எங்க கடையில் உங்களுக்கு தேவையான பொருட்கள் இருக்கு என்று  உங்களுக்கு தெரியப்படுத்தனும்தானா? அதானங்க முறை!

இணைய விளம்பரம்

இப்போ இதாங்க முக்கியமான பகுதி, எனக்கு தேவையான பொருளை உங்களுக்கு கொடுக்கணும், ஆனா உலகத்துல உள்ள எல்லாருக்கும் என்னால விளம்பரம் கொடுக்க முடியாது, செலவு அதிகம். அப்போ என்கிட்ட இருக்க இந்த சரக்குக்கு சம்பத்தப்பட்ட மக்களுக்குதான் நான் விளம்பரம் கொடுக்கணும். அப்போதான செலவு குறைவு, லாபம் அதிகம். 

உதாரணமா, இணையத்தில் விளம்பரம் எப்படி பண்றாங்கணு இந்த படத்துல பாருங்க. 

கூகுள் விளம்பரம்
கூகுள் தேடும் பக்கத்தில் விளம்பரம்

கூகுள் விளம்பரம்

இதுபோலதான், இணையத்தில் சரியான ஆட்களை ( or keywords) குறிவைத்து விளம்பரங்கள் வரும். (இந்த விளம்பரங்கள் ஒரு உதாரணம் மட்டுமே இதே போலதான் ஆபாசம் தொடர்பான விளம்பரங்களும் நம்மை அடைகின்றது)

[wpsm_box type=”info” float=”none” textalign=”left”]
மேற்கூறிய தகவல்கள் மற்றும்  படங்களில் இருந்து நமக்கு தெரியவேண்டியது என்னவென்றால். இணையத்தில் நீங்கள் எதை எதிர் பார்கின்றீர்களோ அது தான் உங்களுக்கு கிடைக்கும்.
[/wpsm_box]

நீங்கள் உங்கள் கைபேசி, மடிக்கணி போன்றவற்றில் இத்தனை நாட்கள் என்ன தேடினீர்கள் என்ற முழு விபரத்தையும் கூகுள் தன்னிடம் சேமித்து வைத்துக்கொள்ளும். எனவே உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, எது தேவை தேவை இல்லை என எல்லாம் இந்த கூகுள் கடவுளுக்கு தெரியும்.

இப்போது புரிகின்றதா உங்கள் திரையில், Youtube-இல், இதர செயலிகளில் ஏன் அதிகம் ஆபாசம் தொடர்பான தகவல்கள் வருகிறது என்று ?

இப்படி ஏதாவது ஒரு வழிகளில் விளம்பரம் செய்து அதன்மூலம் அது போன்ற ஆபாச தளங்களுக்கு நம்மை அழைத்துப் போவதுதான் இவர்களின் எண்ணம்.

[wpsm_box type=”info” float=”none” textalign=”left”]
குறிப்பு: இதுபோன்ற விளம்பரங்கள் எல்லாருக்கும் வருவது கிடையாது, நீங்கள் அதை ஈர்க்கும் வரை.
[/wpsm_box]

உதானமாக: Dating, Sexy, Personal / privacy Chat, adult, etc, போன்ற வார்த்தைகளை கூட கூகுளில் பயன்படுதுவது இதுபோன்ற ஆபாச விளம்பரங்கள் வர வழிவகை செய்யும்.

கூகுள் மட்டுமா ?

கூகுள் என்று நான் இந்த கட்டுரையில் குறிப்பிடுவது பொதுவாக Google கருவியை குறித்தாலும், Yahoo, Bing, Youtube, Amazon, Flipkart, Whatsapp, Facebook, WhatsApp, Mobile Games, Instagram, Olx, Yellow Pages, Suleka, Opera mini, UC Browser, Just dial, eBay, Play Store, App Store, Etc, போன்ற எல்லா இயணைய தேடுபொரி களையும் தான் சேர்த்து சொல்கிறேன்.

காரணம் இவை எல்லாமே நாம் என்ன இணையத்தில் தேடுகிறோம் என்று நம்மை நோட்டம் விடுபவை.

இவைக்கள்தான், நாம் யார் ? நமக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று நம்மை அலசி ஆராய்ந்து நமக்கு தேவையான சேவைகள், விளம்பரங்கள், போன்றவற்றை நமக்கு தர துடிப்பவை.

சரி சரி புரியுது புரியுது இப்போ என்னதான் பண்ணனும் அப்படினு நீங்கள் கேட்பது தெரியுது.

இப்போ நேர மேட்டருக்கு வரேன்..

முதலில் தங்கள் கைபேசியை / கணினியை Format செய்து விடுங்கள் (முடிந்தால்). Play Store / Apple App Store -இல் மட்டுமே செயலிகளை பதிவிறக்கவும். (வெளியில் இருந்து எதையும் install செய்ய வேண்டாம்)

Browser-ல் அபசங்களை தவிர்ப்பது

 • Opera Mini, UC போன்ற Browser-களை பதிவிரக்காதீர்கள்.
 • முடிந்தால் Google Chrome Browser-ம் வேண்டாம்.
 • Duck DucK Go மட்டும் பயன்படுத்தவும்.
 • ஒரு வேலை Chrome Brower தான் வேண்டும் என்றால், சரி தோலைந்து போகட்டும் அதையே பயன்படுத்துங்கள், ஆனால் அதில் Search Engine-ல் (Chrome-Settings) Duck Duck GO தேர்வு செய்யுங்கள்.

- 8

 • ஒரு வேலை தங்கள் கைபேசியை Format செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால், Browers Setting-இல் சென்று History, Cache, Cookies and other Site Data, போன்றவற்றை ஆரம்பம் முதல் முழுவதுமாக Delete செய்து விடுங்கள்.

- 10

- 12

இதில் All Time என்று தேர்ந்தெடுங்கள்.

- 14

மேற்கூறியவாறு செய்வதால் உங்களையும் உங்கள் பழய இணைய வரலாற்றையும் (நீங்கள் என்னவெல்லாம் இதுவரை இந்த கூகிளில் பரதீர்களோ) மறந்து விடும். இனி உங்கள் Brower புதிதாக உங்களைபற்றிய தகவல்களை சேர்க்க ஆரம்பிக்கும்.

இந்த முறை கூகிளிடம் நீங்கள் நல்லவராக காட்டிக்கொள்ள மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு. இனி ஆபாசம் தொடர்பான எந்த ஒரு தேடல் வார்த்தைகளையும், ஆபாச URL-களையும் இந்த Browser-ல் நினைத்து கூட பார்க்காதீர்கள்.

Incognito or Private Browsing

என்றாவது ஒரு சில முறை மட்டும் ஆபாசம் / அல்லது வயது வந்தோர் தொடர்பான இணைய பக்கம் அல்லது இணைய தேடலை ஒரு சில காரணங்களுக்காக பார்க்க தேவை இருந்தால். “Incognito or Private Browsing” என்ற வசதியை பயன்படுத்துங்கள்.

- 16

இதன்மூலம் நீங்கள் தேடும் தகவல்கள், வரலாறு போன்றவை உங்கள் Brower-இல் சேமித்து வைக்கபடாது.

 Android கைபேசிகளில் Safe Browsing

உங்கள் கைபேசியில் Chrome Browser உள்ளே சென்று Settings – Privacy – Safe Browsing  என்பதை “டிக்” செய்யவும்.

Open Chrome Browser
Open Chrome Browser
press the “three dots” sign it the upper right corner.
press the “three dots” sign it the upper right corner.

 

Then choose ‘Settings’ in Chrome Browser
Then choose ‘Settings’
Choose ‘Privacy’ subcategory under Chrome ‘Advanced’ Settings section
Choose ‘Privacy’ subcategory under the ‘Advanced’ section

- 22

enable ‘Safe Browsing’ on Google Chrome
enable ‘Safe Browsing’

YouTube – இல் ஆபசத்தை தவிர்த்தல்

உங்கள் Youtube முகப்பு பக்கத்தில் வரும் வீடியோக்களை நீங்கள் கவனித்தது உண்டா?

இப்போ அப்படியே Incognito Browser சென்று அதே Youtube.com சென்று பாருங்கள், அல்லது வேறொரு நண்பரின் youtube முகப்பு பக்கத்தை வாங்கி பாருங்கள்? வித்தியாசம் புரிந்ததா ?

ஒவ்வொருவருடைய Youtube முகப்பு பக்கமும் வேறு வேறு விடியோக்களால் நிறப்பபட்டிருக்கும். இதற்கு காரணம், இதற்கு முன்பு இவர்கள் தேடிய , பார்த்த வீடியோக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு எது போன்ற வீடியோக்கள் பிடிக்கும் என Youtube ஒரு முடிவுக்கு வந்து விடும்.

எனவே நீங்கள் ஒரு முறை Youtube-இல்  ஆபாசம் தொடர்பாக தேடி, பார்த்து இருந்தால் மீண்டும் மீண்டும் அதே தான் உங்களுக்கு பிடிக்கும் என அது கணக்குப்போட்டு உங்கள் முகப்பு பக்கம் முழுக்க ஆபாசம் தொடர்பான விடியோக்களால் நிறப்பி விடும்.

இது புரியாமல் நீங்களும் மாறி மாறி இதே பார்த்துக்கொண்டு Youtube-இல் உள்ள பல நல்ல காணொளிகளை கவனிப்பாதே இல்லை. இவ்ளோதாங்க மேட்டர்.

சரி இனி என்ன பண்ணலாம் ?

இனி இதுபோல கேவலமான வீடியோக்களை youtube-இல் பார்க்க கூடாது என முடிவு எடுத்துவிட்டு, நேர youtube – Setting பகுதிக்கு போங்கள்,

Youtube History settings
Youtube-Options-History

Deleting Youtube History

இவ்வாறு உங்கள் Youtube வரலாற்றை அழித்துவிடுங்கள்.

மேலும் தெளிவாக உங்கள் youtbe வரலாற்றை அழிக்க கீழ்வரும் படத்தை கவனிக்கவும்.

முதலில் https://myactivity.google.com/ என்ற இணைப்பை தங்கள் Browser -இல் பார்க்கவும்,

அல்லது அதே Youtube பக்கத்தில் சென்று, Options – Manage All History என்ற பக்கதிற்கு செல்லவும்.

Youtube: Manage All History
Youtube: Manage All History

பிறகு, கீழ்வரும் படங்களில் சிவப்பு வட்டமிட்டு கட்டியுள்ளவாறு சென்று தங்களுடைய Youtube வரலாறு, Web & App Activity, Location போன்ற தகவல்களை முழுவதும் அழித்து விடுங்கள் (உங்களுக்கு, முக்கியமன வரலாறு ஏதும் இல்லாமல் இருந்தால்).

- 28 - 30

இன்னும் ஒன்றும் மீதம் உள்ளது. (அவ்வளவு முக்கியம் இல்லை, ஆனால் உங்களுக்கு ஒரு வேலை தேவைப்படலாம்)

இதோ இந்த பக்கத்தில் சென்று (Google Ads Personalization)

Trun On Google Ads Personalization
Trun On Google Ads Personalization

பிறகு கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல, தேவையானது, தேவையில்லாது எது என்று முடிவு செய்து, அவற்றை இங்கிருந்து நீக்கி விடுங்கள்.

- 33 - 35

தேவையில்லாதவற்றை கிளிக் செய்து கீழ்வருமாறு “Trun Off” செய்துவிடுங்கள்.

Google Ads Personalization

இதன்மூலம் உங்களுக்கு தேவையில்லாத விளம்பரங்கள் உங்கள் கைபேசி, கணினி திரையில் வருவதை தவிர்க்க முடியும்*.

குறிப்பு: *இதன் மூலம் Google Adsense விளம்பரங்களை மட்டும்தான் தவிர்க்க முடியும். (Youtube-இல் வருவது இந்த வகை விளம்பரங்களே)

விளம்பரங்கள் ஒருசில நிறுவனங்களால் இணையத்தில் வழங்கப்படுகின்றது. இதில் மிகவும் பிரபலமானது Google Adsense.

பொதுவாக கூகுள் Adsense விளம்பரங்கள் முழுவதும் அல்லது அதிகமாக ஆபாச தகவல்கள் உள்ள இணையாதங்களுக்கு வழங்கப்படமாட்டாது.

[wpsm_box type=”info” float=”none” textalign=”left”]
பிற விளம்பர நிறுவனங்கள் உங்கள் இணைய பக்கதில் ஆபாச விளம்பரங்கள் பரிந்துரைகளை காட்டாமல் இருக்க, நீங்கள் ஆபாச இணைய பக்கங்களுக்கு செல்லாமல் இருப்பதும், அவற்றைப்பற்றி தேடாமல் இருப்பதும் மட்டும்தான் ஒரே வழி.
[/wpsm_box]

குப்பை காணொளிகள்

மேற்கூறியவற்றை செய்த பிறகு உங்கள் Youtube பக்கத்திற்கு சென்று உள் நுழையுங்கள்.

youtube subscriber list

Menu – Subscriber List செல்லுங்கள், அதில் தேவையில்லாத குப்பை சேனல்களை தயவுசெய்து UnSubscribe செய்யுங்கள்.

குறிப்பு: ஒரு Youtube சேனல் குப்பையா இல்லையா என கண்டுபிடிக்க எளிய வழி. அதன் விடியோக்களின் Thumbnails & Title ஆகியவற்றை கவனியுங்கள்,

 • 8 வயது பள்ளி சிறுமியை 40 வயது …
 • பிரபல நடிகர் மருத்துவமனையில் !
 • அவசர அவசரமாக ரகசிய திருமணம் நடிகை !
 • உடனே முடிஞ்சு போச்சா| கவலையை விடுங்க
 • ஓட்டல் ரூமிற்கு வருவதற்கு முன் பதுங்கி இருந்தது இவன்தான் !
 • இந்த 2 விசயத்தை உடனே பண்ணுங்க
 • கணவருக்கு தொரியாமல் சிநோகா செய்த அசிங்கம் !
 • தண்ணீரை வெளியேற்றாமல் வெச்சு இருக்கீங்களா ?
 • பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி !
 • பெண்ணுறுப்பில் இவ்ளோ விஷயம் இருக்கா
 • மேலாடை அவுத்துட்டு ஆடும் Rowdy Baby Surya
 • வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ!
 • சாதனா கால விரிச்ச ஆதாரம்|சூர்யா சாதனா புதிய வாய்ச்சண்ட
 • இப்படி வித்தியாசமாக எப்படி பண்ணலாம்
 • தனியாக இருக்கும் போது மட்டும் பாருங்கள்!
 • தனியாக இருக்கும் போது மட்டும் பாருங்கள்!
 • வாயில விட்டு பச்சை பச்சையா பேசுறாங்க
 • அதிகமா பண்றவங்களை…

இதைபோன்று தலைப்புகள் இருந்தால் தயவுசெய்து அந்த வீடியோக்களை கிளிக் செய்யவே செய்யாதீர்கள். இவர்களெல்லாம்  மோசமான இழிவானவர்கள், தங்கள் வருமானத்திற்காக எவ்வளவு கேவலாமாகவும் வீடியோ செய்வார்கள். இது போல தகவலும் இறுதியில் நமக்கு தேவையில்லததே.

இது ஒரு நல்ல வீடியோ: நேரம் இருந்தால் பார்க்கவும். 

பிறகு, அந்த விடியோக்களின் Thumbnails – ஐ கவனியுங்கள்.

 • அதில் ஒரு வட்டம், கட்டம், அம்புக்குறி,  அப்படில்லாம் போட்டு எதயாவது காட்டுவார்கள், அதுபோன்ற விடியோக்களும் உண்மையில் ஒரு நல்ல காணொலியாக கட்டாயம் இருக்காது, மாறாக நம்மை அந்த காணொளியை கிளிக் செய்வதே அவர்களின் முக்கியமான குறிக்கோளாக இருக்கும்.

குப்பை காணொளிகள் உதாரணம்

குப்பை காணொளிகள் உதாரணம்

குப்பை காணொளிகள் உதாரணம்

குப்பை காணொளிகள் உதாரணம்

YouTube பரிந்துரைகள்

YouTube பரிந்துரைகள் நமது Youtube முகப்பு பக்கத்தில் காட்டும் காணொளிகள் ஆகும். இதை சற்று கவனியுங்கள்

இதில் உங்களுக்கு தேவையில்லாத குப்பை / ஆபாச காணொளிகள் இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள். (கீழ் உள்ள படத்தில் உள்ளது போல)

முதலில் “Not Interested” என கொடுங்கள், அதே சேனலில் தொடர்ந்து மிகுதியாக இதுபோல குப்பை காணொளிகள் இருந்தால் “Don’t recommend channel” என்பதை கொடுத்து விடுங்கள்.  தேவைப்பட்டால் “report” என்பதையும் கொடுக்கலாம்.

youtube home page recommendation

Youtube Like & Comment

Youtube காணொளிகள் உண்மையாக நல்லது பயனுடையது என்றால் மட்டும் அதற்கு லைக் கொடுங்கள். காரணம் நீங்கள் லைக், comment செய்யும் வீடியோக்கள் அடிப்படையிலும் உங்கள் யுட்யூப் முகப்பு பக்க பரிந்துரைகள், மற்றும் விளம்பரங்கள் இருக்கும் என்பதை மறவாதீர்கள்.

Google PlayStore-இல் ஆபசங்களை தவிர்த்தல்

குழந்தைகளிடம் தங்களது கைபேசிகளை கொடுக்கும் பொது அவர்கள் மிக எளிமையாக உங்கள் கைபேசி உள்ளே சென்று அதில் பல செயலிகள், கேம்’கள் போன்றவற்றை பதிவிரக்குவார். அப்படி பதிவிரக்கும்போது ஆபாசம் தொடர்பான செயலிகளை தாங்களோ அல்லது தங்கள் குழந்தைகளோ மறந்தும் பதிவிரக்காமல் அல்லது அந்த திரையிலேயே காட்டாமல் இருப்பதற்கு பின்வரும் படங்களைப் பின்பற்றுங்கள்.

Google Play Restrictions

Step:1 Google Play Restrictions
Step:1 Google Play Restrictions
Step:2 Google Play Restrictions
Step:2 Google Play Restrictions
Step:3 Google Play Restrictions
Step:3 Google Play Restrictions
Step:4 Google Play Restrictions
Step:4 Google Play Restrictions

- 48

 

Step:5 Google Play Restrictions
Step:5 Google Play Restrictions

Google Play Restrictions – இல் கடவுச்சொல் கொடுப்பதன் மூலம் வீட்டில் உள்ள சிறுவர்கள் இந்த கைபேசி வழியே ஆபாச அல்லது வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க கூடிய (Adults Only) செயலிகளை பார்க்கவோ அல்லது பதிவிறக்கவோ முடியாது.

Play Store Parental Controls Apps And Games

Play Store Parent Controls Age Restriction

Play Store Parent Controls Age Restriction

Play Store Parental Controls For Films

Play Store Parental Controls Film Options

 

மேலே உள்ள படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, உங்களுக்கு தேவையானவற்றை  தேர்ந்தெடுத்து “Save” செய்யவும்.

குப்பை செயலிகள்

என்ன தான் இப்படியெல்லாம் (மேற்கூறியவரு) செய்தாலும் இன்னமும் ஒருசில செயலிகள் ஆபாச உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். குறிப்பாக செய்தி வழங்கும் செயலிகள் (News App’s). இது போன்ற செய்தி செயலிகளை பதிவிரக்காமல் இருப்பதே, மிக நல்லது.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் Opera Mini Browser, UC Browser போன்றவற்றின் முகப்பு பக்கத்தில் வரும் செய்திகள் (Home Page news recommendation)  மற்றும் Daily Hunt போன்ற செய்தி செயலிகளில் வரும் செய்திகள் பெரும்பாலும் மிக ஆபசமாகவும், கேவலாமாகவும், கொச்சையாகவும், தேவையில்லாத சினிமா செய்திகளும் தான். எனவே, இதை படித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்.

சில குப்பை செயலிகள் 

 • Tic Tak
 • Moj
 • Opera Mini
 • News Hunt (Daily Hunt)
 • SnapChat
 • MX TakaTak
 • Dating Apps
 • All Short Video App’s Like Tic Tak

இங்கு குறிப்பிட்ட செயலிகள் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. முக்கியமா ஏன் இதுபோன்று செயலிகளை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இவை பொழுதுபோக்கு செயலிகள் என்ற போர்வையில் உள்ள ஆபாச செயலிகள். நேரடியாக ஆபாச காணொளிகளை வழங்கும் செயலிகளை எளிதில் கண்டுபிடித்து நாம் அவற்றை தவிர்க்க முடியும்.

[wpsm_box type=”info” float=”none” textalign=”left”]
ஆனால், இவை அவற்றை விட மோசமான செயலிகள், இதுபோன்ற செயலிகளின் வலையில் விழுந்துவிட வேண்டாம்.
[/wpsm_box]

Google App – இல் ஆபசத்தை தவித்தல்

கீழே உள்ள படங்களில் உள்ளதை பின்பற்றி கூகுள் செயலியில் சென்று

“More” -> Settings -> General -> Safe Search (Trun On) 

set filter on google app

google app settings

 

general option in google

enable safesearch

 

OpenDNS For Wi-Fi Home

தங்கள் வீட்டில் பெரும்பாலும் Wi-Fi மூலம் இணையதள வசதியை பெறுபவராக இருந்தால். மேற்கூறிய விவரங்கள் சரிவர செய்தபின்பு இன்னுமொரு வேலையையும் செய்துவிடுங்கள், அது தான் OpenDNS. 

OpenDNS என்பது பாதுகாப்பாக இணையதளம் பயன்படுத்த உதவிபுரியும் ஒரு நிறுவனம் ஆகும். இது Cisco -இன் ஒரு கிளை அமைப்பாகும். இதன்மூலம் இணையத்தில இருக்கும் ஆபாச, மற்றும் Phishing Websites-களிடம் இருந்து நம்மை பெரும்பாலும் பாதுகாக்க முடியும்.

எனவே Open DNS -ஐ எப்படி பயன்படுத்தவேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கவும். (OpenDNS For Smart Phones & Wi-Fi Routers)

இணையமும் கடவுளும்

மறுக்க முடியாத ஒரு உண்மை என்னவென்றால், இணையமும் கடவுளும் ஒன்று, நீங்கள் எதிர்பார்ப்பதையே இவை இரண்டும் உங்களுக்கு கொடுக்கும். உங்கள் கைபேசி, PC -இல் அதிகம் ஆபாசம் தொடர்பான தகவல்கள் தெரிகிறது என்றால் நீங்கள் அதைதான் இத்தனை நாள் தேடிக்கொண்டிருந்தீர்கள் என்று பொருள் (உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ).

இதற்கெல்லாம் காரணம் பணம் , ஆம் எல்லாரும் பணம் சம்பாதிக்காதன் முயல்கிறோம், இணையம் மூலம் பணம் ஈட்ட அதில் உள்ள பயனாளர்கள் பற்றிய அனைத்து தேவையான தகவல்களும் இந்த இணையத்திற்கு தெரிய வேண்டும். அப்போது தான் அவர்களிடம் அவர்களுக்கு தேவையானவற்றை விற்க முடியும்.

உதாரணமாக, நீங்கள் அமேசானில் சென்று ஒரு குறிப்பிட்ட பொருளை பற்றி அதிகம் தேடுங்கள், (Women Shoe என்று வைதுகொள்வோம்) , பிறகு உங்களுடைய Chrome Browser-ஐ Open செய்து ஏதேனும் ஒரு இணைய பக்கத்திற்கு சென்று பாருங்கள (OLX என்று வைதுகொள்வோம்) அப்போது அமேசானில் நீங்கள் தேடிய Shoe பற்றிய விளம்பரம் மற்றும் அதன் Buy Link ம் வரும்.

 • இபொது நீங்கள் அமேசான் தளத்தில் தேடிய அந்த Shoe பற்றிய தகவல்கள் OLX – கக்கு எப்படி போனது ?

எல்லாம் அந்த Google செயல்…

இதே போலதான், தாங்கள் எப்போதோ ஆபாச தொடர்பான வார்த்தைகள் இணையத்தில் தேடியது, உங்களை இன்றும் (History, cache, cookie போன்றவற்றை முறையாக அழிக்கும் வரை) தொடந்துகொண்டே இருக்கும்.

ஆபச இணையதளங்கள் ஒன்று இரண்டு என இருந்தால் சுலபமாக அவற்றை நமது கைபேசியில் தடை செய்து விடலாம். மாறாக இவை ஆயிரக்கணக்கில் உள்ளது, எனவே இவற்றை மேலே கூறியது போல்தான் நாம் சரி செய்ய முடியும்.

[wpsm_box type=”info” float=”none” textalign=”left”]
இணையத்திடம் நாம் என்ன கேட்கிறோமோ அதைதான் அது திரம்ப கொடுக்கும் என்பதை மறவாதீர்கள். எனவே, நலதை தேடுங்கள், நல்லதை பகிருங்கள்.
[/wpsm_box]

உதவுங்கள்

இந்த பதிவை பற்றிய தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுக்கு இந்த கட்டுரையின் முலம்  நல்ல பயனுள்ள தகவல்கள் கிடைத்திருந்தால் தங்கள் நண்பர்கள் உறவினார்களுக்கும் இதை பகிர்ந்து உதவுங்கள்.

நன்றி.

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன