உடல் எடைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு முறை

உடல் எடைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு முறை

திங்கள் – முதல் நாள்

காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கவும். முதல் நாள் முழுவதும் திட உணவு எதுவும் சாப்பிட வேண்டாம். நிறைய தண்ணீர் அருந்தவும். பழச்சாறு அல்லது பழக்கூழ் போன்றவற்றை பசிக்கும்போது பருகவும். உடலில் இருக்கும் நச்சுப்பொருட்கள் எல்லாம் வெளியேறிவிடும்.

செய்வாய் – பழங்கள்

இரண்டாம் நாள் முழுவதும் விருப்பப்பட்ட பழங்களை உண்ணலாம். இது ஜீரண சக்தியை மேம்படுத்தும். ஆப்பிள், மாம்பழம், திராட்சை, கொய்யா, பலா, தர்பூசணி, சாத்துக்குடி, போன்றவற்றை சாப்பிடலாம். வாழைப்பழத்தை தவிர்த்துவிடவும்.

புதன் – நார்ச்சத்து

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதன்பின் நாள் முழுவதும் காய்கறிகளை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளவும்.  காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்ற நார்ச்சத்து மிக்க காய்கறிகள் மிகவும் நல்லது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்கவும். உடல் சுத்தமாகும்.

வியாழன் – கால்ஷியம்

நாலாவது நாளில் உடம்புக்கு நிச்சயம் கால்ஷியம் சத்து தேவைப்படும்.  பால் இரண்டு தம்ளர் மற்றும் கொஞ்சம் பாலாடைக்கட்டி சாப்பிடலாம். இன்று வாழைப்பழத்தை நிச்சயம் சாப்பிடவும். இது உடல் சக்தியை அதிகரிக்க உதவும்.

வெள்ளி – மாவுச்சத்து

ஐந்தாவது நாளில் உடல் இப்போது எடையற்று இருப்பதைப் போலத் தோன்றும். மெலிவதற்கான அறிகுறிகள் தென்படும். இப்போது சிவப்பு அரிசி சாதம் மற்றும் சத்தான காய்கறிகளைச் சாப்பிடலாம். மதிய உணவாக இதைச் சாப்பிட்டு மற்ற வேளைகளில் அல்லது பசிக்கும் போது காய்கறிகளை மட்டும் சாப்பிட வேண்டும்.

சனி – புரதச்சத்து

புரதச் சத்துமிக்க கோழி இறைச்சி, மீன், முட்டை, பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள் போன்றவற்றை இன்றைய தினம் மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிடலாம். ஆனால் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும்.

ஞாயிறு -இறுதி நாள்

  • சிவப்பரிசி சாதம், காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடவும்.
  • இப்போது உடல் எடை ஓரளவு சமன்நிலைக்கு வந்திருக்கும். ஆனால் இது முதல் படி மட்டும்தான். இதற்கு பின் மேலும் உடல் எடையைக் குறைக்க தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுப் பழக்கம், எட்டு மணி நேரம் உறக்கம் மற்றும் தினமும் 45 நிமிட உடற்பயிற்சி அல்லது யோகாவைக் கடைப்பிடித்தால் உடல் எடையை தானாகவே குறைய ஆரம்பிக்கும்

தொப்பை குறைய பாட்டி வைத்தியம் – 12

தொப்பை குறைய பாட்டி வைத்தியம் – 12 பார்க்க

உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்கள்

அனைவருக்கும் உடல் எடை பற்றிய கவலை இருக்கும். இதனால் உடல் எடையை குறைப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுவோம் அல்லது அதைக் குறைப்பதற்கான பல முறைகளை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றி வருவோம்.

அதிலும் அவ்வாறு நிறைய புத்தகங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு படிக்கும் போது, ஒவ்வொரு விதத்தில் இருக்கும். சிலர் உடல் எடையைக் குறைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி, சரியாக பின்பற்றி வருவார்கள். சிலரோ அதைப் பின்பற்றி முடியாமல் இருப்பார்கள். அவ்வாறு டயட்டை சரியாக பின்பற்ற முடியாமல் இருப்பவர்கள் கவலை கொள்ள வேண்டாம். அத்தகையவர்களுக்கு ஒரு சில வழிகள் உள்ளன. இந்த உலகில் தீர்வு இல்லாமல் இருக்காது.

எனவே அத்தகையவர்கள், உடல் எடையை குறைக்க ஒரு சில உணவுகளை சாப்பிடும் போது சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம்.

உணவுப்பொருட்கள்

சாக்லெட்

இப்போது சாக்லேட் சாப்பிடுவதற்கு சூப்பர் காரணம் கிடைத்துவிட்டது. ஏனெனில் சாக்லெட் சாப்பிட்டால், உடல் எடை குறையும், அதிலும் டார்க் சாக்லெட் சாப்பிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் கரைவதோடு, கொழுப்புக்கள் சேராமலும் இருக்கும். எனவே சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை சாப்பிட்டப்பின் வயிறு உப்புசத்துடன் இருந்தால், கவலைபட வேண்டாம். ஏனெனில் உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். இதனால் எந்நேரமும் பசி ஏற்படும் உணர்வைத் தடுத்து, அதிகம் சாப்பிடுவதை தடுக்கலாம்.

ராஸ்பெர்ரி

நன்கு கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும் ராஸ்பெர்ரி, உடல் எடையை குறைக்கும் தன்மையுடையது. ஏனென்றால் இதில் கீட்டோன் என்னும் நொதிப்பொருள் உள்ளது. இவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.

இஞ்சி

இந்த சிறிய இஞ்சியில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இவை சளி, ஜலதோஷம் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுவதோடு, கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதயம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலம் இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால், உடல் எடையை குறைக்கும் உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

சாக்லெட் கேக்

பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அப்போது சாக்லெட் கேக் சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கலாம். இதனால் அதிகம் சாப்பிட்டு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்க முடியும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தைப் பற்றி நிறைய கட்டுக்கதைகள் உள்ளன. இந்த அதிசயமான உணவுப் பொருள் உடல் எடையைக் குறைக்க உதவும். அதற்கு தினமும் காலையில் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு, எந்த ஒரு உணவையும் சாப்பிடலாம். அதனால் அதில் உள்ள கரையாத கார்போஹைட்ரேட், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.

க்ரீக் தயிர்

உடல் எடையைக் குறைக்கும் உணவுப் பொருட்களில் தயிரும் ஒன்று. அதிலும் கொழுப்பு குறைவாக உள்ள தயிரைப் போன்று, க்ரீக் தயிரும் மிகவும் சிறப்பானது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

பீட்ரூட் ஜூஸ்

அந்த சிவப்பு நிற காய்கறியை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ, உடல் எடை குறையும்.

ஆளிவிதை

உடல் எடையை குறைக்க இருக்கும் டயட்டில் ஆளி விதை மிகவும் பிரபலமானது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்த குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள விதைகளை சாலட் அல்லது கிரேவிகளில் சேர்த்து சாப்பிடலாம்.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: