புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நடவடிக்கைகள் தெரியுமா ?
பிறப்பு முதற்கொண்டே, உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை உலகத்திற்கு வந்தது முதற்கொண்டே அநேக காரியங்களைச் செய்யமுடியும். உங்கள் குழந்தை கூகூ, கள கள என்ற சத்தத்தை எழுப்புவான்; சத்தங்களைக் கேட்பான்; மற்றும் குரல்கள் கேட்கும் பக்கமாகத் தன் தலையைத் திருப்ப முயற்சிப்பான். அவன் கிளர்ச்சியடையும்போது தன் கைகளை அசைப்பான் மற்றும் உங்கள் முகபாவனைகளில் சிலவற்றை நடித்தும் காண்பிப்பான். புதிதாகப் பிறந்த குழந்தைகள், முகங்களைப் பார்ப்பதில் சந்தோஷம் அனுபவிப்பார்கள்.இந்தக் காலகட்டத்தில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் பார்வைத்திறன் மட்டுப்பட்டதாயிருந்தாலும், அவனால் வெளிச்சம், நிழல்கள், வடிவங்கள், அமைப்புகள் மற்றும் அசைவுகளைக் கண்டுபிடிக்க முடியும்;
இதற்கு ஏற்றதாக, உங்கள் குழந்தையின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உங்கள் முகம் இந்த எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இது உங்கள் பரஸ்பர உணர்ச்சிகளுக்கு ஒரு அடிப்படையை அளிக்கிறது.
உங்கள் குழந்தையைப் பார்க்கும்போது, புன்முறுவல் செய்யுங்கள்; பேசுங்கள்; மற்றும் சம்மதம் தெரிவிப்பது போல உங்கள் தலையை மேலும் கீழுமாக அசையுங்கள். உங்கள் குழந்தை இந்த வகையான பரஸ்பர உணர்ச்சிகளை மகிழ்ந்தனுபவித்தால், அவன் உங்கள் பக்கமாகத் திரும்புவான். அளவுக்கதிகமான காட்சிகள் மற்றும் சத்தங்களிலிருந்து திசை திரும்ப வேண்டும் என உணர்ந்தால், அவன் வேறு பக்கமாகப் பார்ப்பான்.
அவன் வளர்ந்து வரும்போது, அவனது தலை முழுவதும் உங்களை விட்டு வேறு பக்கமாகத் திரும்பும்.
உங்கள் குழந்தை வேறு பக்கமாகத் திரும்பும்போது, நீங்கள் கைவிடப்பட்டுவிட்டீர்கள் என உணரவேண்டாம்.
உங்கள் குழந்தையின் மேம்பாட்டில் இது சாதாரணமானது; மற்றும் இது, அவன், தான் எப்படித் தூண்டப்படுகிறேன் மற்றும் கிளர்ச்சியடைகிறேன் என்பதைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாகும். இது சம்பவிக்கும்போது, அவன் வேறு பக்கமாகத் திரும்பித் தன் கூட்டுறவை அமைதியாக மகிழ்ந்தனுபவிக்க விட்டு விடவும். பிறப்பு முதற்கொண்டே, உங்கள் குழந்தை எல்லா விதமான சமிக்ஞைகளையும் கற்றுக்கொள்ள உங்களைச் சார்ந்திருப்பான். அது உங்கள் இருவரையும் பரஸ்பர உணர்ச்சிகளுக்கு வழிநடத்தும்.
குழந்தையின் சைகைகள்
ஒரு சில கண நேரங்களுக்கு வெளியே பார்ப்பது போன்ற சில சைகைகள், மற்றச் சைகைகளை விட கண்டு பிடிப்பது சற்று கடினமானது. உங்கள் குழந்தை எப்படி உணருகிறான் மற்றும் எப்படிப் பிரதிபலிக்க விரும்புகிறான் என்பன பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் அவனது சைகைகளைக் கற்றுக்கொள்ளும்போது பொறுமையாயிருங்கள்.
அழுதல் போன்ற வேறு சமிக்ஞைகள், கண்டுபிடிக்க மிகவும் இலகுவானவை.
உங்கள் குழந்தை அழும்போது, ஏதோ தவறு இருக்கிறது மற்றும் அவன் அசௌகரியமாக உணருகிறான் அல்லது வருத்தம் அடைகிறான் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் அவனது வழியாகும்.
உங்கள் குழந்தை அழும்போது அவனைத் தேற்றுவது அவனைக் கெடுத்துப் போடுவதாக இருக்காது. உண்மையில், உங்கள் குழந்தை துன்பத்திலிருக்கும்போது உங்களால் முடிந்தளவு சிறந்த முறையில் அவனைத் தேற்ற முயலுவது பிறப்பிலிருந்தே அவனுடனான பரஸ்பர உணர்ச்சிப் பரிமாறல்களின் முக்கிய பங்காக இருக்கும்.
மெதுவாக, உங்கள் குழந்தை இனிவரும் மாதங்களில் மேம்பாடடையும்போது, உங்களைச் சார்ந்திருக்கலாம் மற்றும் தனக்கு உதவி செய்வதற்காக நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்பதை உங்கள் தேற்றுதலிலிருந்து அவன் கற்றுக்கொள்வான்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் அதிகளவு நித்திரை செய்வார்கள். உண்மையில், இந்தக் காலகட்டத்தில் உங்களுக்குப் போதியளவு நித்திரை கிடைக்காவிட்டாலும், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 18 மணி நேரங்கள் நித்திரை செய்வான்.
குழந்தையின் தூக்கம்
ஆயினும், ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையின் நித்திரை செய்யும் பாணி பெரியவர்களைவிட வித்தியாசமானதாக இருக்கும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் நித்திரையில் 20% மாத்திரம் ஆழ்ந்த, நிதானமான நித்திரை செய்வார்கள். மீதி நேரங்களில் நிதானமற்று மற்றும் நித்திரையில்லாமல் இருப்பார்கள்.
அதாவது அந்தச் சமயத்தில் அவனைப் படுக்கையில் போட்டு, நீங்கள் ஒரு குட்டித் தூக்கம் போட முயற்சித்தால், அவன் விழித்து எழுந்து அழ ஆரம்பிப்பான். இது உங்களை மிகவும் களைப்படையச் செய்வதாயிருக்கும்.
பாலூட்டும் நேரம்
ஆனால் ஒவ்வொரு பாலூட்டும் சமயத்திலும் உங்கள் குழந்தை அதிகளவு பாலை உட்கொள்ளத் தொடங்கினால், அவனது குட்டித் தூக்கம் அதிகளவு நேரம் நீடிக்கும்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஒரு கணிசமான அளவு நேரத்தைப் பால் குடிப்பதிலும் செலவு செய்வார்கள். முதற் சில வாரங்களில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்களுக்குப் பசிக்கும்போதெல்லாம் “உரிமையுடன் கேட்டு” ப் பால் குடிப்பார்கள்.
ஒரு நாளில் அவர்களுக்குக் குறைந்தது 8 முறை பால் உட்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு முறை பாலூட்டலும் 20 நிமிடங்கள் நீடிக்கும். அதாவது, ஒரு நாளில் இரண்டரை மணி நேரம் பாலூட்டுவதற்காகச் செலவளிக்கப்படும். ஆரோக்கியமுள்ள, புதிதாகப் பிறந்த குழந்தைகள், முதல் இரு வாரங்களுக்கு 3 முதல் 4 முறை மலங்கழிப்பார்கள். ஐந்து முதல் ஆறு டயபர்களை நனைப்பார்கள். அதாவது நீங்கள் அநேக டயபர்களை மாற்றவேண்டியிருக்கும். அது ஒரு வேடிக்கையான பாசப் பிணைப்பாயிருக்கலாம் அல்லது ஒரு அருவருப்பான வேலையாகவும் இருக்கலாம். அது நீங்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தைப் பொறுத்தது.
மீதி நேரங்களில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு அமைதியான நிலையில் அல்லது ஒரு விழிப்பான நிலையில் தன் மணி நேரங்களைச் செலவிடலாம், அல்லது அவன் பெரும்பாலான நேரங்களை அழுவதில் செலவிடலாம். குழந்தைகள் அழுவதில் கெட்டிக்காரர்கள். அவனுக்கு வெறுமனே இந்த மாதிரியான மனோபாவம் இருக்கலாம் அல்லது அவனுக்கு கோலிக் எனப்படும் நிலைமை இருக்கலாம்.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை உங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரே வழி அழுகை தான் என்பதை நினைவில் வையுங்கள்.
அவன் வளர்ந்து வரும்போது மற்றும் தொடர்பு கொள்வதற்கு வேறு வழிகளை விருத்தி செய்யும்போது, அவனது அழுகை குறைந்துகொண்டுவரும்.
குழந்தை அழுவாதற்கான கரணங்கக்கள்>>>
குழந்தை பராமரிப்பு : 0 – 12 மாதம் வரை >>>